Thursday, May 7, 2020

கடுகு எண்ணெய் அழகு குறிப்புகள்



சரும பொலிவிற்கு  கடுகு எண்ணெய்,எப்படி பயன்படுத்தணும்?
உடலுக்கு நன்மை செய்யும் எண்ணெய்களில் கடுகு எண்ணெயும் ஒன்று. அதிசயத்தக்க வகையில் அவை சருமத்துக்கும் கூந்தலுக்கும் அளவற்ற நன்மைகளை செய்வதாக கூறுகிறார்கள் நிபுணர்கள்.
கடுகிலிருந்து தயாரிக்கப்படும் கடுகுஎண்ணெய் இதயத்துக்கு நன்மை செய்கிறது என்பது தெரியும். ஆனால் கடுகு எண்ணெய்க்குள் அழகு தரும் ரகசியங்களும் ஒளிந்திருக்கின்றன இதை பயன்படுத்தி பார்த்தபிறகு நீங்களே உணர்வீர்கள்.
சருமத்தை சுத்தப்படுத்த உதவும் இயற்கை பொருளாக கடுகு எண்ணெயை சொல்லலாம். 

அதிகமான மேக் அப் போட்டபிறகு அந்த ஒப்பனையை கலைக்க பக்கவிளைவில்லாத கடுகு எண்ணெய் பயன்படுத்தலாம் என்கிறார்கள் நிபுணர்கள். சருமத்தின் துளைகளை அடைக்காமல் அழுக்குகளை நீக்கும் முதன்மை பொருளாகவே கடுகு எண்ணெயை சொல்லலாம். குறிப்பாக சருமத்தை பளிச் என்று மாற்றி நிறத்தை அதிகரிக்கவும் இவை உதவுகிறது. அப்படி கடுகு எண்ணெய் தரும் அதிசய அழகு குறித்து பார்க்கலமா?

➡️அழகு செய்வது கொள்வது என்பது வேறு அழகான புன்னகை பெறுவது என்பது வேறு. அழகான புன்னகைக்கு பற்கள் கறையில்லாமல் அழுக்கில்லாமல் பிரகாசமாக இருக்க வேண்டும். என்னதான் இரண்டு வேளை பிரஷ்செய்தாலும் பற்களை பிரகாசவமாக வைத்திருக்க முடியவில்லை என்று நினைப்பவர்கள் கடுகு எண்ணெயை கொண்டு பற்களை பளிச்சென்று மாற்றிவிடலாம். அதோடு பற்களை சுத்தம் செய்யவும் இவை பயன்படுகிறது.
காலையில் எழுந்ததும் பற்களை வெறும் விரலால் தேய்த்து சுத்தம் செய்த பிறகு கடுகு எண்ணெய் ஒரு டீஸ்பூன் எடுத்துகொண்டு எலுமிச்சை சாறு சேர்த்து அதில் சிட்டிகை உப்பு சேர்த்து கலந்து குழைத்து அதை கொண்டு பற்களை தேய்த்துவந்தால் ஒரே வாரத்தில் பற்கள் பளிச்தான். எண்ணெய் தேய்க்காமல் பயன்படுத்த நினைப்பவர்கள் இதை வாயில் போட்டு பற்கள் முழுக்க படும்படி வாய் கொப்புளித்து வந்தாலும் பலன் கிடைக்கும்.

➡️​முகம் கலராக -1
வெள்ளையாக இருந்தாலும் கூட பலருக்கும் இன்னும் கலராக வேண்டும் என்னும் ஆசை உண்டு. மாநிறத்தில் இருப்பவர்களுக்கும், கருப்பு நிறத்தில் இருப்பவர்களுக்கு நிச்சயம் கலராக மாற வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அதற்கு கடுகு எண்ணெய் நிச்சயம் உதவும்.
தினமும் இரவு முகத்தை சுத்தமாக அழுக்கு போக கழுவி கடுகு எண்ணெயை எடுத்து முகத்தில் இலேசாக மசாஜ் செய்துகொண்டு வர வேண்டும். இவை முகத்தின் நிறத்தை மாற்றி பளீரென வைக்கும். கூடுதலாக முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள், தழும்புகளை போக்கும். தொடர்ந்து பயன்படுத்திவந்தால் முகம் கலராக மாறுவதை நீங்களே உணர்வீர்கள். அதோடு முக கலருக்கு மற்றும் ஒன்றையும் நீங்கள் செய்ய வேண்டும்.

​➡️முகம் கலராக -2
தேவை
கடுகு எண்ணெய் - 4 டீஸ்பூன்,
தயிர் - 1 டீஸ்பூன்,
வெந்தயத்தூள் - 2 டீஸ்பூன்,
பாசிப்பருப்பு அல்லது கடலை மாவு - 2 டீஸ்பூன்
எலுமிச்சைசாறு - 10 சொட்டுகள்
அனைத்தையும் கலந்து வைத்துகொள்ளவும். முகத்தை சுத்தமாக கழுவி இந்த பேக் போடவும். முகம் மட்டும் அல்லாமல் கழுத்து பகுதி முழுக்க தடவிகொள்ளவும். 20 நிமிடங்கள் கழித்து மிதமான நீரில் கழுவி எடுக்கவும். வாரத்துக்கு மூன்று முறை இப்படி செய்தால் முகம் கலராக மாறும்.
எல்லா சருமம் கொண்டவர்களும் கூட இதை செய்யலாம். கடுகு எண்ணெய் கலராக மாற்றினால் கூட பயன்படுத்தும் வெந்தயம் முகத்துக்கு மென்மையை அளிக்கும். மிருதுவாக வைத்திருக்கும்

➡️​உடலும் கலராக
கடுகு எண்ணெய் முகம் மட்டும் கலராக்காது உடலையும் கலராக்கும். உடலுக்கு ஆயில் மசாஜ் செய்யும் போது சுத்தமான தேங்காயெண்ணெயுடன் கடுகு எண்ணெயும் சம அளவு கலந்து உடலுக்கு மசாஜ் செய்ய வேண்டும். குறிப்பாக கை, கால், கணுக்கால் முட்டிகளில் தேய்த்துவர வேண்டும். வாரம் ஒருமுறை அல்லது இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை உடலுக்கு இப்படி மசாஜ் செய்துவந்தால் உடல் நிறமும் மாறும். பளபளப்பாகவும் இருக்கும். உடலில் கட்டிகள் இருக்கும் இடங்களில் வெறும் கடுகு எண்ணெயை மட்டும் தேய்த்துவரவேண்டும். அப்படி செய்தால் கட்டிகள் இல்லாமல் உடல் முழுக்க பொலிவாகவே இருக்கும்.

⏩️​சருமம் எப்படி பொலிவாகிறது
கடுகு எண்ணெய் வைட்டமின் இ சத்தை உள்ளடக்கியிருக்கிறது. சன்ஸ்க்ரீனுக்கு இயற்கையான மாற்றாகவே கடுகு எண்ணெய் இருக்கிறது. இவை சருமத்தில் இருக்கும் அழுக்குகளை வெளியேற்றுவதோடு சரும துளைகளுக்குள் சென்று அடைப்பையும் உண்டாக்காது. இதனால் இறந்த செல்கள் வெளியேறுகிறது. புதிய செல்களால் முகம் எப்போதும் பளீரென்று இருக்கிறது. 
ஆயுர்வேத மருத்துவத்தில் உடலுக்கு மசாஜ் செய்ய இந்த கடுகு எண்ணெய் பயன்படுத்துவது கூட சருமத்துக்கு நன்மை செய்வதால் தான்.



பளிச் முகத்திற்கு யாரும் சொல்லாத ரகசியம்


பாட்டி வைத்தியத்தில் முகத்தில் இருக்கும் முடிகளை நீக்க பாசிபருப்பு போதுமாம்!


இயற்கையான முறைகளால் தான் முன்பு பெண்கள் தங்களை அழகுபடுத்தி கொண்டார்கள். அப்படி அவர்கள் பயன்படுத்திய பொருள்களில் இவையும் ஒன்று..
அழகை பாதுகாக்க அதிகம் செலவு செய்யும் இந்த நேரத்தில் சில இரசாயன பொருள்கள் கேடையும் உண்டாக்கிவிடுகிறது. இதனால் சருமத்தில் எரிச்சல், அரிப்பு, பருக்கள் போன்றவையும் வந்துவிடுகிறது. பலரும் கெமிக்கல் கலந்த இரசாயனக் கலப்புக்கு பிறகு மீண்டும் இயற்கை பொருள்களைதான் நாடுகிறார்கள். காரணம் இவை பக்கவிளைவுகள் இல்லாதவை. குறிப்பாக சருமம் பெறும் வறட்சி, முகப்பரு, தழும்பு, கருந்திட்டு போன்றவற்றை முழுவதுமாக நீக்க சற்று பொறுமையோடு முயற்சி செய்ய வேண்டும் அப்படியானவற்றில் ஒன்று தான் பாசிப்பருப்பு மாவு. இவை சருமத்துக்கு தரும் அளவில்லா நன்மைகள் குறித்து பார்க்கலாம்.

​➡️ஃபேஸ் பேக்
பச்சைபயறு ஒரு தேக்கரண்டி அளவு இரவு ஊறவைத்துவிடுங்கள். மறுநாள் காலை பச்சைபயறுடன் பால் சேர்த்து சற்று குழைத்து அரைத்துகொள்ளுங்கள். சற்று கெட்டிப்பதமாக இருக்கட்டும். பிறகு அதனுடன் மூன்று டீஸ்பூன் அளவு தேன் சேர்த்து குழைத்து கொள்ளுங்கள்.
இதை முகத்தில் தடவி 20 நிமிடங்கள் ஊறவைத்து மிதமான நீரில் முகத்தை கழுவினால் முகம் உடனடியாக பளிச்சென்று ஆகும்.பாசிப்பருப்பில் வைட்டமின் ஏ மற்றும் சி சத்து நிறைந்திருப்பதால் இவை சருமத்துக்கு ஊட்டம் அளிப்பதோடு சருமத்தில் இறந்த செல்களையும் வெளியேற்றி கூடுதல் பளிச் தன்மையை முகத்துக்கு அளிக்கிறது.

​➡️முகத்தில் இருக்கும் முடி உதிர்வுக்கு
பச்சை பயறை இரவு பாலில் ஊறவைத்து மறுநாள் கஸ்தூரி மஞ்சள் சேர்த்து அரைக்க வேண்டும். அதை முடி இருக்கும் இடங்களில் சற்று அழுத்தமாக தேய்க்க வேண்டும். இவை நன்றாக காய்ந்ததும் அதை பன்னீரில் நனைத்த காட்டனை கொண்டு துடைக்க வேண்டும். அப்படி செய்தாலே முடி உதிர்வு நன்றாக உணரமுடியும்.
முகத்தில் தாடையில், கன்னங்களில், கை, கால்களில் இளம்பெண்கள் முடியை அகற்ற சிரமப்படுவார்கள். ரேஸர் இல்லாமலே இந்த முடிகளை அகற்ற சிறந்த முறை இது.
இப்படி தொடர்ந்து செய்யும் போது இரண்டு மற்றும் மூன்றாவது முறையிலேயே முடி முழுவதும் உதிர்வதை காணலாம். மாதவிடாய் பிரச்சனையால் ஹார்மோன் சுரப்பில் மாற்றம் காணும் பெண்கள் தான் அதிகப்படியான முடி உதிர்வுக்கு ஆளாவார்கள். இவர்கள் இந்த பராமரிப்போடு மருத்துவரை அணுகி அதற்குரிய சிகிச்சையும் மேற்கொள்ள வேண்டும்.

➡️சன் டான்.
அதிகப்படியான வெயிலால் முகத்தில் கருமை உண்டாகும். அதனால் தான் அடிக்கடி சருமத்தை ப்ளீச் செய்ய வேண்டும் என்று சொல்வது. சன் டான் செய்ய நிறைய க்ரீம் வகைகள் மார்க்கெட்டில் கிடைத்தாலும் அதை எளிமையாக செய்ய இவை உதவுகிறது.
குளிர்ச்சிதன்மை கொண்ட பாசிப்பருப்பு ஆண்டிசெப்டிக் பண்புகளை கொண்டிருப்பதால் சருமம் இழந்த நிறத்தை மீட்டெடுக்க உதவும்.பாசிப்பருப்பு ஒரு தேக்கரண்டி அளவு ஊறவைத்து மறுநாள் தயிர் சேர்த்து அரைத்து அதை பேஸ்ட் போல் குழைத்து முகம் மற்றும் கழுத்தில் தடவி வரவும். 30 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவி வரவேண்டும். வாரத்துக்கு மூன்று முறை இப்படி செய்துவந்தால் முகத்தின் நிறம் மாறும். நிறம் பளிச்சென்று இருக்கும்.
➡️அம்மை வடுக்கள்
அம்மை வடுக்கள் முகத்தில் தெரிய காரணமே அவை மறையாமல் சருமத்தின் நிறத்திலிருந்து மாறுவது தான். அவை வடுக்களோடு நீங்க வேண்டுமானால் பக்கவிளைவில்லாமல் பராமரிப்பு மேற்கொள்ள இவை பாதுகாப்பான வழி. பாசிபயறை மிஷினில் அரைத்து தினமும் காலை அல்லது மாலை வேளையில் தேன் கலந்து குழைத்து அம்மை வந்த வடுக்கள் மீது பற்றுபோல் போட வேண்டும். அவை நன்றாக காய்ந்ததும் பன்னீர் கொண்டு துடைத்துவரவேண்டும்.
15 நாட்களில் நல்ல மாற்றம் காணலாம். வடுக்களோடு கருமையும் இருந்தால் பாசிப்பருப்பு மாவோடு கற்றாழை கலந்து தேய்த்தால் போதுமானது. பொறுமையாக வடுக்கள் மறைந்தாலும் சருமம் வடுக்கள் இல்லாமல் பளிச்சென்று இருக்கும்.

➡️தொடர்ந்து இதை பயன்படுத்தி வந்தால் சருமத்தில் சுருக்கங்கள் விழாது. கரும்புள்ளிகள் படிப்படியாக மறையும். கருந்திட்டுகள் முதல் தேமல் வரை சரியாகும். இவையெல்லாம் தாண்டி முகம் மென்மையாக கூடும். ஊறவைத்து பயன்படுத்த சிரமமாக இருந்தால் பொடியாக்கி பயன்படுத்தலாம்.

தக தக என மின்ன செய்யும் தக்காளி face கிரீம்





தேவையான பொருட்கள்.
1.நன்கு பழுத்த தக்காளி பழம் -1
2. கற்றாழை ஜெல் -1 தே. கரண்டி
3. பாதாம் எண்ணெய் -5துளி (எண்ணெய் சருமத்தினர் வேண்டாம்
4. சோள மா -1/2 தே. க. (Corn flour)


செய்முறை :
#தக்காளி பழத்தை நன்கு மசித்து 3 தே. கரண்டி  சாறை வடித்து எடுங்கள்.
#இதை கட்டி இல்லாத வண்ணம் சோள மாவுடன் நன்கு கலந்து கொள்ளுங்கள்.
#Double boil முறையில் இவையிரண்டையும் அடுப்பில் வைத்து கிளறவும். பேஸ்ட் வடிவில் கெட்டியாக  ஆனதும் அடுப்பை விட்டு இறக்கி ஆற விடவும்.
#நன்கு ஆறியதும் கற்றாழை ஜெல் மற்றும் பாதாம் எண்ணெய் கலந்து கொள்ளவும்.
#ஈரமில்லா மூடிய பாத்திரம் ஒன்றில் இட்டு ஒரு கிழமை வரை குளிர்சாதன பெட்டியில் வைத்து  உபயோகிக்கலாம்.


பூசும் முறை :இரவில் தூங்கும் முன் நன்கு கழுவி துடைத்த முகத்தில்  மற்றும் கழுத்தில் நன்கு பூசி சில வினாடிகள் மசாஜ் செய்து விடுங்கள். காலையில் கழுவிவிடலாம்.

பயன்கள் :
1)முகத்தில் உள்ள துளை,  மேடு பள்ளங்களை சரி செய்கிறது
2)முகம் கருமை அடைவதை தடுக்கிறது
3)அதிக எண்ணெய் பசையை நீக்குகிறது
4)சூரிய ஒளியால் வறண்ட கருத்த சருமத்தை சரி செய்கிறது.
💁‍♀️ தக்காளி பழம் ஒவ்வாமை உள்ளவர்கள் முகம் எரிச்சல் போல் தோன்றினால் உடனே கழுவி விடுங்கள்

By :hafza fiaz

ஸ்கின் ரிப்பேர் கிரீம் (skin repairing cream )


முகம் எல்லோரும் அதிக நேசத்துடன் பேணும் ஒரு உறுப்பு.. 
சில நேரம் நாம் அறியாமல் செய்யும் சில தவறுகள் முகத்தில் நிரந்தர வடுக்களை விட்டு செல்லும்.
முக்கியமாக பாவிக்கும் தரமற்ற முகப்பூச்சு or ரசம் மற்றும் அதிக இரசாயனம் கலக்கப்பட்ட கிரீம் வகைகள் முகத்தை கருமையடைய செய்து விடும்..
ஒரு மாதமளவில் கீழே கொடுக்கப்பட்ட கிரீம் ஐ பாவிப்பதால் முகம் மெதுவாக மீள்நிலையை அடையும்.


தேவையானவை.
ஓட்ஸ் 2 தே. க
பசும்பால் 3 தே. க
தேன்  1/2 தே. க
கஸ்தூரி மஞ்சள் 1/4 தே. க
பாதாம் எண்ணெய் 1/4 தே. க
கற்றாழை ஜெல் 2 தே க


பூசும் முறை :இரவில் தூங்கும் முன் நன்கு கழுவி துடைத்த முகத்தில்   நன்கு பூசி சில வினாடிகள் மசாஜ் செய்து விடுங்கள். காலையில் கழுவிவிடலாம்.

செய்முறை :
ஓட்ஸ் ஐ பசும்பாலில் ஊறவிடவும். 30 நிமிடம் வரை அவ்வாறு வைக்கவும். நன்றாக கலக்கி பேஸ்ட் வடிவில் வந்தவுடன் இரும்பு வடியால் வடிக்கவும். இதட்கு மற்ற பொருட்களை ஒவ்வொன்றாய் சேர்க்கவும்.
கடைசியில் கஸ்தூரி மஞ்சள் தூளை சேர்க்கவும்.

பயன்கள்.
#இரசாயனங்களால்  பழுதடைந்த முகத்தை சீராக்கும்.
#சூரிய ஒளியால் கருத்த முகத்தை  பொலிவாக்கும்.
#பொன்னிற சருமத்தை தரும்.


எச்சரிக்கை.-
கஸ்தூரி மஞ்சள் அலர்ஜி உள்ளவர்கள் கஸ்தூரி மஞ்சளை தவிர்க்கலாம்.


Hafza fiaz💚

கேரட் எண்ணெய் செய்யும் மேஜிக்

ழகான கூந்தல் இருக்க வேண்டும் என்ற ஆசையா? அதனுடன் சேர்த்து உங்கள் சருமமும் பொலிவாக இருக்க வேண்டுமா? அப்படி என்றால் நீங்கள் கேரட் எண்ணெய் தயாரித்து பயன்படுத்தலாம். இந்த கேரட் எண்ணெய்யைப் பயன்படுத்துவதால் நீங்கள் இளமையாகவும் தோன்ற முடியும்.

கேரட் எண்ணெய், வறண்ட சேதமடைந்த கூந்தலுக்கு ஒரு இயற்கையான புத்துணர்ச்சியைத் தருகிறது. மேலும் இதில் பல வித நன்மைகளும் உள்ளன. கேரட் எண்ணெயில் வைட்டமின் ஈ, வைடமின் ஏ, பீட்டா கரோடின் மற்றும் இதர ஊட்டச்சத்துகள் இருப்பதால் சருமத்தில் ஏற்படும் வெடிப்புகள், புண் போன்றவை மறைகின்றது. இந்த பல்வேறு ஊட்டச்சத்துகள் வயது முதிர்விற்கான அறிகுறிகளைக் குறைக்கிறது, பல்வேறு சரும பிரச்சனைகளையும் போக்க உதவுகிறது. கேரட் எண்ணெய் பயன்படுத்துவதால் பல்வேறு நன்மைகள் உடலுக்குக் கிடைக்கிறது. 

கூந்தல் மற்றும் சருமத்திற்கு சிறந்த முறையில் பலன் அளிக்க உதவுகிறது. குளிர் காலத்தில் மற்றும் மழைக் காலங்களில் சருமம் வறண்டு இருப்பதால், கேரட் எண்ணெய் பயன்படுத்தி சருமத்திற்கு ஈரப்பதம் அளிக்கலாம். தயாரிக்கும் முறை குறிப்பாக பாத வெடிப்புகள் மற்றும் தோல் உரிவது போன்றவை மழைக் காலங்களில் அடிக்கடி ஏற்படும் பாதிப்பாகும். இதனைப் போக்க கேரட் எண்ணெய் சிறந்த முறையில் உதவுகிறது.

கேரட் எண்ணெய் தயாரிப்பது எப்படி?

தேவையான பொருட்கள் .
கேரட் அல்லது ஆர்கானிக் கேரட் - 2 அல்லது 3.
ஆலிவ் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் .
கேரட் துருவி .
வடிகட்டி . 
ஒரு சுத்தமான கண்ணாடி குடுவை

செய்முறை:
கேரட்டை தோல் சீவி துருவிக் கொள்ளவும். . துருவிய கேரட்டை ஒரு சட்டியில் போட்டு அடுப்பில் மெல்லிய தீயில் வைக்கவும்  . உங்களுக்கு விருப்பமான ஆலிவ் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய்யை சேர்க்கவும். . கேரட் துருவல் முழுவதும் மூழ்கும் அளவிற்கு எண்ணெய்யை ஊற்றவும். . இப்படி செய்வதால் கேரட் முழுவதும் எண்ணெயில் ஊறி அடியில் தங்கி விடும். . நன்றாக ஊறியவுடன் கேரட் மிகவும் மென்மையாக மாறி, அந்த எண்ணெய் முழுவதும் ஆரஞ்சு நிறமாக மாறி விடும். . அப்போது அடுப்பை நிறுத்திவிட்டு ஆற விடவும். . அடுத்த 24 மணி நேரம் இந்த கேரட் எண்ணெயிலேயே ஊறட்டும். . ஆறியவுடன், ஒரு வடிகட்டி பயன்படுத்தி எண்ணெய்யை வடிகட்டிக் கொள்ளவும். . பிறகு அதனை ஒரு கண்ணாடி குடுவையில ஊற்றி வைக்கவும்.
இப்படி தயாரிக்கும் கேரட் எண்ணெய் கூந்தலுக்கு பல அற்புதங்களை செய்கிறது. தலைக்கு ஷாம்பூ தேய்த்து குளிப்பதற்கு முன்னால் இந்த எண்ணெய்யை தலையில் தடவிக் கொள்ளலாம். இப்படி செய்வதால் உங்கள் கூந்தல் எண்ணெய்யை உறிஞ்சி, தலை முடிக்கு ஈரப்பதம் அளித்து, அழகாக்குகிறது. இந்த கேரட் எண்ணெயில் உள்ள வைட்டமின் ஈ மற்றும் பீட்டா கரோடின் போன்றவை சிறந்த கண்டிஷனராக செயல்படுகிறது. இதில் இருக்கும் வைட்டமின் ஈ சத்து, உங்கள் கூந்தல் மற்றும் உச்சந்தலையை சேதங்களில் இருந்து பாதுகாக்கிறது. மேலும் இது முடி உதிர்வைத் தடுத்து, கூந்தல் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.

அழகை அள்ளி தரும் ஆப்பிள் நைட் கிரீம்



இளமையாக, சுறுசுறுப்பாக, உற்சாகமாகச் செயல்பட ஆழ்ந்த உறக்கம் அவசியம். அது 7 முதல் 8 மணி நேரத் தூக்கமாக இருப்பது நல்லது. பொதுவாக ஆழ்ந்த உறக்கம், உடலை மட்டுமல்லாமல் மனதையும் இளமையாக வைத்திருக்கும். குறிப்பாக, மனஅழுத்தம் ஏற்படாமல் பாதுகாக்கும். 

மனஅழுத்தமும் பல்வேறு சரும நோய்களுக்கு முக்கியக் காரணியாக அமைகிறது என்பதை நினைவில்கொள்ள வேண்டும். எனவே, ஆழ்ந்து உறங்குவோம், அழகான சருமத்தைப் பெறுவோம்.. தூங்கும் நேரத்தில்தான் நம்முடைய சருமத்தில் உள்ள செல்கள் புதுப்பிக்கப்படுகின்றன. தூங்கும்போது, கிட்டத்தட்ட எட்டு மடங்கு அதிகமாக புதிய செல்கள் உருவாவதாக ஆராய்ச்சி ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


அதனால் ஃபேஸ்பேக், நைட் க்ரீம்ஸ் போடுவதற்கு சரியான நேரம் நாம் தூங்கும் நேரம்தான். `

நம் வீட்டிலிருக்கும் பொருள்களைக் கொண்டே சில நைட் க்ரீம்களைத் தயாரிக்க முடியும்.இதில் முக்கியமானது ஆப்பிள் நைட் கிரீம்.


ஆப்பிள் நைட் க்ரீம்
ஆப்பிள் பழத்தில் வைட்டமின் ஏ, பி, சி மற்றும் பீட்டா கரோட்டின் போன்றவை அதிகமாக உள்ளன. மேலும், இதிலுள்ள மாலிக் அமிலமும், ஆன்டிஆக்ஸிடன்ட்டும் சருமத்தை என்றும் இளமையாக வைத்திருக்க உதவும்.
தேவையானவை:
ஆப்பிள் - 1
ஆலிவ் எண்ணெய் - 2 டீஸ்பூன்
பாதாம் எண்ணெய் - 2 டீஸ்பூன்
ரோஸ் வாட்டர் - 2 டீஸ்பூன்.

செய்முறை:
ஆப்பிள் பழத்தைத் துண்டு துண்டாக நறுக்கி ஆலிவ் எண்ணெய், பாதாம் எண்ணெயுடன் சேர்த்து அரைத்துக்கொள்ள வேண்டும்.
ஓர் அகலமான பாத்திரத்தில் தண்ணீர்விட்டு, அதனுள் இன்னொரு பாத்திரத்தை வைத்து கலவையைச் சூடுபடுத்த வேண்டும். இந்தக் கலவை ஆறியதும் அதில் இரண்டு டேபிள்ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்துக் கலக்கி சுத்தமான காற்றுப் புகாத டப்பாவில் போட்டு, ஃபிரிட்ஜில் வைத்துப் பயன்படுத்தலாம்.

பயன்படுத்தும் முறை:
முகத்தைக் கழுவிவிட்டு, தேவையான அளவு இந்த நைட் க்ரீமை முகத்தில் அப்ளை செய்து நன்றாகக் காய்ந்ததும் தூங்கப் போகலாம். அடுத்த நாள் காலையில் முகத்தைக் கழுவினால் மிருதுவான, பளபளப்பான சருமம் கிடைக்கும் 


சிவப்பழகு தரும் பீட்ரூட் கிரீம்



தேவையான பொருட்கள்
ஒரு பீட்ரூட் காய்
தேசிக்காய் or லெமன்  சாறு சில துளிகள்
கற்றாழை ஜெல் 3 or 4 தே. க
(கிரீம் வடிவில் வர   கடையில் விற்கும்  கற்றாழை ஜெல்   உபயோகிப்பது சிறந்தது )
செய்முறை :
#பீட்ரூட் தோல்நீக்கி கிரேட் பன்னிக்கொள்ளவும்.
அதை பிழிந்து சாறு இரண்டு கரண்டி வடித்து எடுத்து  கொள்ளவும்.
#இதை கற்றாழை ஜெல் உடன் கலந்து கொள்ளவும்.
#கடைசியாக சில துளி எலுமிச்சை சாறு சேர்க்கலாம்.
#ஈரமில்லா மூடிய பாத்திரம் ஒன்றில் இட்டு ஒரு கிழமை வரை குளிர்சாதன பெட்டியில் வைத்து  உபயோகிக்கலாம்.

பூசும் முறை :இரவில் தூங்கும் முன் நன்கு கழுவி துடைத்த முகத்தில்  மற்றும் கழுத்தில் நன்கு பூசி சில வினாடிகள் மசாஜ் செய்து விடுங்கள். காலையில் கழுவிவிடலாம்.

பயன்கள் :

சருமத்தின்  ஈரப்பதனை பேணுகிறது.
சருமத்தை ஜொலிக்க செய்வதுடன் சிவப்பழகு தருகிறது.
சருமத்திற்கு போசாக்களித்து சரும நிறத்தை பேணுகிறது.
இதை உதட்டில் பூசுவதன் மூலம் வறண்ட கருத்த உதடுகளை சரி செய்யலாம்
By :hafza fiaz

கண் கருவளையம் மறைய எளிய மருத்துவ டிப்ஸ்..!

      அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்பது பழமொழி. நமது உடலில் உள்ள சத்து குறைபாடு மற்றும் நோய்கள் போன்றவற்றை நமது முகம் கண்ணாடி போல...