Tuesday, April 14, 2020

தங்கம் போல் ஜொலித்திட..



சருமத்தை பொலிவாக்க கஸ்தூரி மஞ்சள் .

கஸ்தூரி மஞ்சள் என்றும் அறியப்படும் காட்டு மஞ்சள், தெற்கு ஆசியாவில் பரவலாக பயன்படுத்தப்படும் ஒரு பொருள் ஆகும். இந்த கஸ்தூரி மஞ்சள் பல்வேறு மருந்திலும், ஒப்பனைப் பொருட்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அழகை அதிகரிக்கும் ஒரு இயற்கை மூலப்பொருளாக இந்த மஞ்சள் அறியப்பட்டு வருகிறது.
முக அழகும் நிற மாற்றமும்
இன்றைய காலகட்டத்தில், பருவ நிலை மாற்றம், மாசு, தூசு, சூரிய ஒளியின் தாக்கம் போன்ற பாதிப்புகளால், நம் கனவு சருமத்தை நம்மால் தக்க வைத்துக் கொள்ள முடிவதில்லை.
ஆனால் இது நிரந்தரமல்ல. களங்கமில்லாத குழந்தையின் சருமத்தைப் போல் எந்த வயதிலும் இளமையுடன் மற்றும் பொலிவுடன் நம் சருமத்தை பாதுகாத்துக் கொள்ள முடியும். 


வழக்கமான மஞ்சள்(குர்குமா லாங்கா )பயன்படுத்துவதால் நமது உடையிலும், முகத்திலும் அதன் நிறம் கறை போல் அப்படியே தங்கி விடும். ஆனால் கஸ்தூரி மஞ்சளில் இந்த நிலை ஏற்படாது.


கஸ்தூரி மஞ்சளின் தன்மைகள்
கஸ்தூரி மஞ்சள் என்பது இயற்கை நமக்கு அளித்த ஒரு வரப்பிரசாதமாகும் . சருமம் எதிர்பார்க்கும் எல்லா முக்கிய தன்மைகளும் கஸ்தூரி மஞ்சளில் உண்டு. இந்த மந்திரப் பொருளில் உள்ள எல்லா நன்மைகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. வாருங்கள் அதனை இப்போது பார்க்கலாம்.


💙அழற்சி எதிர்ப்பு
கஸ்தூரி மஞ்சள் அல்லது காட்டு மஞ்சள் அற்புதமான அழற்சி எதிர்ப்பு தன்மை கொண்ட ஒரு பொருள். இயற்கை இடையூறுகளான மாசு, சூரிய ஒளி பாதிப்பு, தூசு, அழுக்கு மற்றும் வெப்பம் காரணமாக ஏற்படும் ஒவ்வாமை போன்றவற்றால் உண்டாகும் அழற்சியைப் போக்கி சருமத்தை பாதுகாக்கிறது. அழற்சி எதிர்ப்பு தன்மை கொண்ட மஞ்சள், சருமத்தில் ஆழ்ந்து வினை புரிந்து அழுக்கைப் போக்கி, வீக்கத்தைக் குறைக்க உதவுகின்றன.

💙அன்டி ஆக்சிடென்ட்
உங்கள் சருமம் மிகவும் மிருதுவானது என்பது உங்களுக்குத் தெரியும். பல்வேறு சரும கோளாறுகளை ஏற்படுத்தும் இயற்கை இடையூறுகளில் இருந்து உங்கள் சருமத்தை பாதுகாப்பது மிகவும் அவசியம். ஆரோக்கியமான சருமத்தால் எளிதாக சுவாசிக்க முடியும். திறந்த மற்றும் சுத்தமான துளைகள் இருப்பதால், உங்கள் சருமம் புத்துணர்ச்சியுடன் அழகாக தோன்றும். கஸ்தூரி மஞ்சள் ஒரு அற்புதமான அன்டி ஆக்சிடென்ட் ஆகும். இயற்கை சீர்குலைவால் சருமத்தில் அதிக உற்பத்தியாகும் தீங்கு விளைவிக்கும் கூறுகளிடமிருந்து சருமத்தை பாதுகாக்க அன்டி ஆக்சிடென்ட் உதவி புரிகிறது. இந்த தீங்கு விளைவிக்கும் கூறுகள் சரும மேற்புறத்தை மட்டும் பாதிக்காமல், சருமதிற்குள் ஆழ்ந்து சென்று சரும அணுக்களை சேதம் செய்து, வயது முதிர்வை உண்டாக்கி, இறுக்கமாக மற்றும் வலிமையாக இருக்கும் சருமத்தை தளர்த்துகின்றன.

💙அன்டி நியோ பிளாஸ்டிக் தன்மை
உங்கள் உடலிலும் சருமத்திலும் வீரியம் வாய்ந்த , கேடு விளைவிக்கின்ற, கொடிய உயிரணுக்களின் வளர்ச்சியை தடுக்கக்கூடிய தன்மை இந்த மஞ்சளுக்கு உண்டு. கஸ்தூரி மஞ்சள் ஒரு மிகச்சிறந்த உயிரணு புற்று நோய் எதிர்ப்பு தன்மை கொண்டதாக இருப்பதால், அணுக்களில் புற்றுநோய் உண்டாக்கும் அபாயம் ஏற்படாமல் சருமத்தை பாதுகாக்கிறது. இதன்மூலம் உங்கள் சருமத்திற்கு புற்று நோய் வராமல் தடுக்கப்படுகிறது. இது வெறும் ஒப்பனைப் பொருளாக இருந்து உங்கள் சரும அழகை மட்டும் பாதுகாப்பதில்லை உங்கள் உடலையும் ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது என்பதை இதன்மூலம் நாம் அறியலாம் 

💙பாக்டீரியா எதிர்ப்பி
சருமம் சேதமடைய முக்கிய காரணம், பக்டீரியா தாக்குதல். இத்தகைய பக்டீரியா உங்களுக்கு கட்டிகள், பருக்கள், கொப்பளங்கள், தொற்று பாதிப்பு மற்றும் ஆரோக்கியமற்ற சருமத்தை உண்டாக்கலாம். கஸ்தூரி மஞ்சளில் இருக்கும் பக்டீரியா எதிர்ப்பு தன்மை , இயற்கையின் பரிசாகும். உங்கள் சருமத்தில் தேவையற்ற பாதிப்புகளை உண்டாக்கும் பாக்டீரியாவை எதிர்த்து மஞ்சள் போராடுகிறது

💙குணப்படுத்தும் தன்மை
சருமத்தை குணப்படுத்தும் தன்மை கஸ்தூரி மஞ்சளுக்கு உண்டு. காயம், வெட்டு மற்றும் பருக்களில் உள்ள பாக்டீரியாவை எதிர்த்து போராட சருமத்திற்கு உதவுகிறது. இதனால் உங்கள் சருமம் எளிதில் இந்த கோளாறுகளில் இருந்து குணமடைய முடிகிறது.

💗💗முகத்திற்கு கஸ்தூரி மஞ்சள்
இதுவரை கஸ்தூரி மஞ்சள் உங்கள் சருமத்திற்கு எவ்வளவு நன்மைகள் செய்கிறது என்பதை அறிந்து கொண்டோம். இப்போது, உங்கள் முகம் கஸ்தூரி மஞ்சளின் பயன்பாட்டால் எவ்வளவு ஜொலிக்கும் என்பதை பார்க்கலாம்.


💟கட்டிகள் மற்றும் பருக்கள்
கஸ்தூரி மஞ்சளில் பக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு தன்மை உண்டு. ஆகவே பருக்களை ஏற்படுத்தும் பாக்டீரியாவை எதிர்த்து கஸ்தூரி மஞ்சள் போராடுகிறது. உங்கள் சரும துளைகளில் தானாக சேமிக்கப்படும் அழுக்குகளைப் போக்கி, அவற்றை சுத்தம் செய்ய இந்த காட்டு மஞ்சள் உதவுகிறது. இதன் பலனாக உங்களுக்கு பருக்கள் இல்லாத அழகான சருமம் மீண்டும் கிடைக்கிறது. இதன் அழற்சி எதிர்ப்பு தன்மையால் முகத்தில் உள்ள தேவையற்ற வீக்கங்கள் குறைந்து, பக்டீரியா மற்றும் இதர தொந்தரவால் உண்டாகும் ஒவ்வாமை வினைகள், சிவப்பு புள்ளிகள் அல்லது கோடுகள் போன்றவையும் மறைகின்றன. உங்கள் சருமமும் பாதுகாக்கப்படுகிறது.

💟திட்டுக்கள் மற்றும் தழும்புகள்
பருக்கள் மற்றும் கட்டிகளால் உண்டாகும் தழும்புகள் நீண்ட காலம் நீடித்து நிற்கின்றன. கஸ்தூரி மஞ்சள் இந்த தழும்புகளைக் குறைக்கவும், போக்கவும் உதவுவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக இந்த மஞ்சளை பயன்படுத்துவதால் இந்த தழும்புகள் மறைகிறது.

💟சூரியஒளியால் ஏற்படும் சேதம் மற்றும் சுருக்கம்
வயது முதிர்வைப் போக்க கஸ்தூரி மஞ்சள் பெரிய உதவி புரிகிறது. கஸ்தூரி மஞ்சளில் இருக்கும் அன்டி ஆக்சிடென்ட் பண்புகள், சூரியனின் யு.வி கதிர் தாக்குதலால் ஏற்படும் சரும பாதிப்பை தடுத்து சருமத்திற்கு புத்துணர்ச்சியை தருகின்றன. இதனால் உங்கள் சருமம் இளமையாக தோன்றுகிறது மேலும் சுருக்கங்கள் வர விடாமல் செய்கிறது.

. கஸ்தூரி மஞ்சள் இறந்த செல்களை எதிர்த்துப் போராடி சரும துளைகளை ஆழ்ந்து சுத்தம் செய்து தருகிறது. இதனால், சருமம் சுவாசிக்க உதவுகிறது. இது ஆரோக்கியமான சருமத்தைப் பெற உதவுகிறது. இதனால் பொலிவும் பளபளப்பும் தானாக கூடுகிறது.

எண்ணெய் சருமம்
சருமத்தின் சில இடங்களில் எண்ணெய் படிந்து சேர்வதால் உங்கள் முகம் சோர்வாக தோன்றும். சருமத்தின் அதிகமான எண்ணெய் சுரப்பால் , கட்டிகள், கரும்புள்ளிகள், சருமம் கருமையாக தோன்றுதல் போன்ற பல சரும பிரச்சனைகள் தோன்றும். சருமத்தில் எண்ணெயில் அளவை சமநிலை படுத்தும் தன்மை கஸ்தூரி மஞ்சளுக்கு உண்டு. இதன்மூலம் எல்லா பிரச்சனைகளும் தீர்க்கப்பட்டு , உங்கள் முகம் பாதுகாக்கப்படுகிறது.
எண்ணெய், சருமத்திற்கு ஈரப்பதம் தந்து ஒரு வித நறுமணத்தை கொடுக்கும்.

பொலிவு தரும் பாதாம் எண்ணெய்


அழகுக்கு பாதாம் எண்ணெய்


உடல் அழகுக்கும் சில எண்ணெய்கள் பயன்படுகிறது. பாதாம் எண்ணெய் முக அழகுக்கு எந்த வகையில் பயன்படுகிறது என்று அறிந்து கொள்ளலாம்.
* தேன், பாதாம் எண்ணெய் ஆகிய இரண்டையும் சம அளவு எடுத்து நன்றாக கலந்து, முகத்தில் தடவி, இரவு முழுக்க ஊறவிட்டு மறுநாள் காலையில் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவினால் முக அழகாக மாசுமறுவற்று இருக்கும்.
* 1 டீஸ்பூன் பாதாம் எண்ணெயுடன் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, பஞ்சினால் தொட்டு சருமத்தில் தடவுங்கள். இப்படி செய்து வந்தால் முகத்திலிருக்கும் பருக்கள் மற்றும் பருக்களால் வரும் தழும்புகளைக் குறைக்கலாம்.
* உதட்டு கருமை நீங்க, தினமும் பாதாம் எண்ணெய் தடவி வரலாம். உதடு சிவப்பாக வேண்டுமென்றால் பீட்ரூட்டை வெட்டி காய வைத்து பொடியாக்கி பாதாம் எண்ணெயுடன் கலந்து உதட்டில் பூசிவர உதடு லிப்ஸ்டிக் போட்டாற்போல் இருக்கும்.
* சோத்துக்கத்தாழை சாறு ஒரு டீஸ்பூன், பாதாம் எண்ணெய் அரை டீஸ்பூன் எடுத்து நன்றாக கலந்து முகத்தில் தடவி சுமார் 5-10 நிமிடங்கள் வரை உங்கள் சருமத்தின்மீது மெதுவாக மசாஜ் செய்யவும். பின்னர் வெதுவெதுப்பான நீர்கொண்டு முகத்தை அலம்பினால் அழகான, மிருதுவான சருமத்தைப் பெறலாம்.
* 1 டீஸ்பூன் ரோஸ் வாட்டருடன் ½ ஸ்பூன் பாதாம் எண்ணெயை சேர்த்து கலக்கி, முகத்தில் தடவி, இரவு முழுக்க ஊறவிட்டு மறுநாள் காலையில் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவ முகம் மாசு மருவற்று இருக்கும்.
* 1/2 டீஸ்பூன் பாதாம் எண்ணெயுடன் 2 ஸ்பூன் பால் கலந்து முகத்தில் தடவி வெதுவெதுப்பான நீரில் கழுவினால் முதத்திலுள்ள அழுக்குகள் வெளியேற்றப்படும்.

அனைத்துக்கும் கொய்யா இலை



தலையில் ஏற்படும் அரிப்பிற்கு கொய்யா இலையின் சாற்றினை வாரம் ஒருமுறை ஸ்கால்ப்பில் படும்படி தடவி ஊறவைத்து  அலச  வேண்டும்.
கொய்யா இலையின் சாற்றினை வாரம் ஒரு முறை தலையில் தடவி ஊற வைத்து அலச வேண்டும். இப்படி செய்து வந்தால், முடி உதிர்வது,  முடி வெடிப்பு, பேன் தொல்லையில் இருந்து விடுபடலாம்.

கொய்யா இலையை 20 நிமிடங்கள் தண்ணீரில் கொதிக்க வைத்து குளிர்ந்த பிறகு தலையில் மசாஜ் செய்து வந்தால் முடி உதிர்வது நின்று  முடி பலம் பெறும்.

கொய்யா இலைகளை நன்கு கழுவி சுடுதண்ணீரில் கொதிக்கவிட்டு தேநீர் போன்று குடித்து வந்தால் கொழுப்பை குறைக்கும்.  நீரிழிவை  தடுக்கும், 

மேலும் வயிற்று போக்கினால் அவதிபடுபவர்களுக்கு சிறந்த சிகிச்சையளிக்கும். கொய்யா இலைசாறில் வயிற்று போக்குக்கு  காரணமாக இருக்கக்கூடிய ஏரொஸ் பாக்டீரியா வளர்ச்சி தடுக்கப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

கொய்யா இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம், இருமல், தொண்டை மற்றும் இதய சம்பந்தமான நோய்களுக்குத் தீர்வு தருகின்றன. இதன் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டு வருவதால் விரைவில் உங்கள் உங்கள் எடை குறையும்.

கொய்யா இலையை சாதாரணமாக வாயில் போட்டு மென்றும் அல்லது கொய்யா இலையில் டீ செய்து சாப்பிட்டு வந்தாலும்,  வாயில்  ஏற்படும் பல் வலி, ஈறு பிரச்சனைகள். வாய்ப்புண் மற்றும் தொண்டைப் புண் ஆகியவற்றை உடனே சரி செய்கிறது.

கொய்யா இலையை மிக்சியில் அரைத்து, அதனுடன் சிறுது தயிர் சேர்த்து முகத்தில் பூசி வரலாம். இதனை  தினமும் தூங்க செல்லும் முன் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.முகம் பொலிவடையும்.

கொய்யா இலையை அரைத்து அதில் சிறிது ரோஸ் வாட்டர் கலந்து பயன்படுத்தினால் அது முக துவாரங்களில் உள்ள அழுக்கை  அப்புறப்படுத்தி உங்களை பளிச்சிட வைக்கும்.

கொய்யா இலைகளை அரைத்து அடிக்கடி முகத்திற்கு மசாஜ் செய்து வந்தால் முகப்பரு பிரச்சனை நீங்கும். உங்கள் சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள் நீங்கி இளமை பாதுகாக்கப்படும்.

எண்ணெய் சருமம் கொண்டவர்கள், கொய்யா இலைகளை பேஸ்ட் செய்து அதனுடன் எலுமிச்சை சாறு கலந்து, முகத்தில் தடவி வர வேண்டும். அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி விட வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால் சருமம் பளிச்சென்று மின்னும்.

கண் கருவளையம் மறைய எளிய மருத்துவ டிப்ஸ்..!

      அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்பது பழமொழி. நமது உடலில் உள்ள சத்து குறைபாடு மற்றும் நோய்கள் போன்றவற்றை நமது முகம் கண்ணாடி போல...