Friday, May 1, 2020

வெள்ளைப்படுதல் அதிகமாயிட்டே இருக்கா, இந்த கைவைத்தியம் சீக்கிரமே பலன் தரும்!

வெள்ளைப்படுதல் என்பது மாதவிடாய் போன்ற இயல்பான நிகழ்வுதான். ஆனால் இவை அளவுக்கு மீறி அதிகமாகும் போது அவை வேறுவிதமான பிரச்சனைகளை கொண்டுவர வாய்ப்புண்டு.

samayam tamil


மாதவிடாய் காலத்துக்கு முன்பும் மாதவிடாய் காலத்துக்கு பின்பும் வெள்ளைபடுதல் பிரச்சனை வரக்கூடும். பெண் பிள்ளைகள் வயதுக்கு வருவதற்கு முன்பு வெள்ளைபடுதல் தொடங்கும்.இவை சாதாரணமாக இருக்கும் வரை பிரச்சனையில்லை. அவை அசாதாரணமாகும் போது அதற்குரிய சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். அளவுக்கு மீறி வெள்ளைப்படுதல் துர்நாற்றத்துடன் இருக்கும் போது கைவைத்தியம் மூலமும் சரி செய்ய முடியுமா, அப்படியெனில் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பது குறித்து தெரிந்துகொள்வோம்.

இளநீர்

samayam tamil


இளநீர். உடல் உஷ்ணத்தை தீர்க்கும் மருந்தாக செயல்படுகிறது. உடல் உஷ்ணத்தால் வெள்ளைப்படுதல் பிரச்சனை ஏற்பட்டால் இவை உடனடியாக குணமாகும். இளநீரில் 5 சிட்டிகை அளவு சந்தனத்தை குழைத்து சேர்த்து பத்து நிமிடங்கள் கழித்து ஊறவிடுங்கள். பிறகு அதை குடித்துவந்தால் வெள்ளைப்படுதல் குணமாகும்.
தினமும் காலை வெறும் வயிற்றில் குடிக்காமல் ஒரு டம்ளர் நீரை குடித்து பிறகு இளநீர் குடிக்க வேண்டும். 5 நாட்கள் குடித்தால் அடுத்த ஒரு வாரத்தில் வெள்ளைப்படுதல் குறையும். துர்நாற்றமும் இருக்காது. சந்தனம் சுத்தமான சந்தனத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.


கற்றாழை

samayam tamil
கற்றாழை அழகுக்கு மட்டுமே பயன்படுத்தகூடிய பொருள் கிடையாது. இதை உள்ளுக்கும் எடுத்துகொள்ளலாம். கற்றாழையை முள் நீக்கி சுத்தம் செய்ய வேண்டும். உள்ளிருக்கும் நுங்கு போன்ற பகுதி சோறு என்று சொல்வார்கள். அதை ஓடும் தண்ணீரில் நன்றாக அலச வேண்டும். அப்போதுதான் கசப்பு நீங்கும். அல்லது 7 முதல் 10 முறை அலசி எடுக்க வேண்டும்.
பிறகு அந்த சோற்றுபகுதியை சிறு துண்டுகளாக நறுக்கி பாட்டிலில் வைத்து கொள்ளுங்கள். அதனுடன் தேன் சேர்த்து கலந்து வைத்துகொள்ளுங்கள். தேனும் கற்றாழையின் சோறு பகுதியும் நன்றாக கலந்துவிடும். தினமும் காலையில் ஒரு டீஸ்பூன் அளவு வாயில் போட்டு மென்று விழுங்குங்கள். இது நுங்கு போன்று தான் இருக்கும். தேன் சேர்ப்பதால் கூடுதலாக இனிக்கவும் செய்யவும். தொடர்ந்து இதை சாப்பிட்டு வந்தால் வெள்ளைப்படுதல் நாளடைவில் குணமடையும்.


சுக்கான் கீரை


சுக்கான் கீரை மருத்துவகுணங்கள் நிறைந்தது.இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க உதவும். வயிற்று கோளாறுகளை குறிப்பாக குடல் புண் குணமாகும்.மலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்கள் இந்த கீரையை சாப்பிட்டுவந்தால் நாளடைவில் மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும். இவை பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப்படுதலையும் சீராக்கும்.
சுக்கான் கீரையை வாங்கி அதை சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கி தேங்காய்த்துருவல், பாசிப்பருப்பு சேர்த்து கூட்டாகவோ பொரியலாகவோ செய்து சாதத்துடன் பிசைந்து நன்றாக மென்று சாப்பிட வேண்டும்.15 நாட்கள் வரை தொடர்ந்து இந்த கீரையை சாப்பிட்டு வந்தால் வெள்ளைப்படுதல் குறையும்.


​சப்ஜா விதை

samayam tamil


திருநீற்றுபச்சிலை என்னும் தாவரத்தின் விதையே சப்ஜா விதை என்றழைக்கப்படுகிறது. ஃபலூடா என்னும் ஐஸ்க்ரீம் தயாரிப்பில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. கருப்பு நிறத்தில் இருக்கும் சப்ஜா விதைகளை உடல் உஷ்ணத்தை தணிக்க கூடியது. கர்ப்பக்காலத்திலும் உடல் குளுமை பிரச்சனை இருப்பவர்களும் சைனஸ் இளைப்பு பிரச்சனை இருப்பவர்களும் இதை தவிர்க்க வேண்டும்.
சப்ஜா விதையை ஊறவைத்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி பாலில் சேர்த்து கொதிக்க வைத்து குடிக்க வேண்டும். தினமும் இரவில் இதை குடித்துவந்தால் வெள்ளைப்படுதல் குணமாகும். இதே போன்று ஜவ்வரிசியையும் வேகவைத்து தேங்காய்பாலில் கலந்து குடித்துவந்தாலும் பலன் கிடைக்கும்.


​செம்பருத்தி பூ

samayam tamil
மூலிகை தேநீரில் செம்பருத்தி டீயும் முக்கியபங்கு வகிக்கிறது. செம்பருத்தி பூ மருத்துவ குணங்கள் நிறைந்தது. வெள்ளைபடுதலால் அவதிபடும் பெண்கள் செம்பருத்தி ஒற்றை அடுக்கு செம்பருத்தியின் இதழ்களை அதன் மகரந்தத்தோடு சேர்த்து மென்று வாயில் இட்டு மெதுவாக அதன் சுவையை நா உணர பொறுமையாக மென்று உமிழ்நீரோடு மென்று விழுங்க வேண்டும் .
சற்றே வழவழப்பும் கொழகொழப்பும் கொண்டு இலேசான இனிப்பு சுவையை கொண்டிருக்கும் செம்பருத்தி வெள்ளைப்படுதலை குணமாக்கும் சிறந்த வைத்தியம்.செம்பருத்தி பூ கிடைக்காவிட்டால் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் செம்பருத்தி பூ பொடி கிடைக்கும். அதை வாங்கி காலையில் வெறும் வயிற்றில் கால் டீஸ்பூன் வெந்நீரில் கலந்து பொறுமையாக குடித்து வந்தாலும் போதும். வெள்ளைப்படுதல் குணமாகும்.

No comments:

Post a Comment

கண் கருவளையம் மறைய எளிய மருத்துவ டிப்ஸ்..!

      அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்பது பழமொழி. நமது உடலில் உள்ள சத்து குறைபாடு மற்றும் நோய்கள் போன்றவற்றை நமது முகம் கண்ணாடி போல...