Saturday, May 2, 2020

ஒரே மாதத்தில் முகம் பளபளப்பாக 5 டிப்ஸ்!

ஒரே மாதத்தில் முகம் பளபளப்பாக 5 டிப்ஸ்!

தொகுப்பு  | April 22, 2020, 12:05 PM IST




femina

சருமம் அழகாக கண்ணாடி போல பளப்பளப்பாக இருக்க வேண்டும் என ஆசை. ஆனால், இதெல்லாம் நடக்குமா என்பார்கள் பலர். நிச்சயம் இயற்கை பொருட்கள் மூலம் சருமம் அழகாக, பளப்பளப்பாக மின்னும். அதற்கு இந்த 05 வகை சிகிச்சைகள் பலன் அளிக்கும்.

1. மா£ம்பழ ஸ்கரப்
மாம்பழத்தின் காம்பு பகுதியை நீக்கி விடுங்கள். மாம்பழத் துண்டுகளை மிக்ஸியில் அரைத்து பேஸ்டாக்கி கொள்ளுங்கள். ஒரு பவுலில் ஒரு டேபிள் ஸ்பூன் மாம்பழ ப்யூரி, 2 மேசைக்கரண்டி வெள்ளை சர்க்கரை, லு டீஸ்பூன் பால் இவற்றை நன்றாக கலந்து கொள்ளவும். முகத்தை நன்றாக கழுவிய பிறகு, ஈரத்தைத் துடைத்த பின் இதை முகத்தில் பூசி, தேய்க்கவும். கழுத்து, உதடு, கை, கால்களில் கூட ஸ்கரப் செய்யலாம். குளிப்பதற்கு முன், உடல் முழுவதும் தேய்த்துக் குளிக்கலாம். இந்த மாம்பழ ஸ்கரப்பை வாரத்தில் இருநாள் பயன்படுத்தி குளிக்கலாம். ஒரு வாரம் வரை ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாம்.

2. ஆரஞ்சு ஸ்கரப்
பாதி ஆரஞ்சு பழச்சாறை எடுத்துக் கொள்ளுங்கள். விதைகளை நீக்கிவிடுங்கள். 4 டீஸ்பூன் சர்க்கரை, 1 டீஸ்பூன் தேன், 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் கலந்து ஸ்கரப் தயாரிக்கவும். வாரத்தில் 3 நாட்கள், இதை வைத்து ஸ்கரப் செய்யலாம்.

பயன்கள்
பளப்பளப்பான சருமம் கிடைக்கும். தோலுக்கு தேவையான சத்துகள் சேரும். சீரான, அழகான சருமமாக மாறும். முகப்பொலிவு கூடும். பருக்கள் வராது

femina

3. ஃபேஸ் மாஸ்க்
ஒரு மேசைக்கரண்டி கஸ்தூரி மஞ்சள், 2 மேசைக்கரண்டி கடலை மாவு, ஒரு மேசைக்கரண்டி தேங்காய் எண்ணெய், 2 மேசைக்கரண்டி பால்  ஏடு, 2 மேசைக்கரண்டி பால், 1 மேசைக்கரண்டி தேன் ஆகியவற்றை சேர்த்து கலக்கவும். சரியான பேஸ்ட் பதத்துக்கு வர சிறிதளவு பால் சேர்க்கலாம். முகம் கழுவிய பிறகு இந்த மாஸ்கை முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து, சர்குலர் மோஷனில் மசாஜ் செய்து கழுவி விடுங்கள். வாரம் இருமுறை செய்தாலே நல்ல பலன் கிடைக்கும்.
பயன்கள்
· கருமையை நீக்கும்.
· சன் டேன் நீக்கும்.
· கரும்புள்ளிகள் நீங்கும்.
· பருக்கள் வராது.
· சருமத்தில் பொலிவு கிடைக்கும்.
· எண்ணெய் பசையை நீக்கும்.
· முகத்தில் உள்ள தேவையற்ற முடிகள் நீங்கும்.

4. மிராக்கிள் ஜூஸ்
· மாதுளை பழம் - 1/2
· வேக வைத்த பீட்ரூட் - அரை
· சிறிய கேரட் - 2
· தக்காளி - 1
· நெல்லி - 1
· ஆப்பிள் - 1/2
இவற்றை ஜூஸாக அரைத்து வாரம் 3 முறை குடித்து வந்தால் சருமம் பிரகாசமாக மாறிவிடும். எந்த மேக் அப்பும் தேவையில்லை. அழகான சருமம் உங்களுடையதுதான்

5. பளப்பளப்பாக்கும் மாஸ்க் - பருக்களை விரட்டும்
1 தேக்கரண்டி கற்றாழை ஜெல், எலுமிச்சை சாறு பாதி பிழிந்து கொள்ளவும். இதை நன்றாக கலந்து காட்டனில் நனைத்து முகத்தில் பூசவும். 10 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவி விட வேண்டும்.

No comments:

Post a Comment

கண் கருவளையம் மறைய எளிய மருத்துவ டிப்ஸ்..!

      அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்பது பழமொழி. நமது உடலில் உள்ள சத்து குறைபாடு மற்றும் நோய்கள் போன்றவற்றை நமது முகம் கண்ணாடி போல...