Friday, April 24, 2020

நோன்பு கஞ்சி ஆரோக்கியமானதா??



நோன்பு கஞ்சி ஆரோக்கியமானதா??
நோன்பு உங்களுக்குக் கேடயமாக இருக்கிறது’ என்கிறது இஸ்லாம். ரமலான் மாதம் முழுவதும் நோன்பிருப்பது இஸ்லாமியர்களின் கடமைகளுள் ஒன்று. அதிகாலை தொடங்கி மாலை வரை உண்ணாமல், நீர் அருந்தாமல், புகைக்காமல் இருப்பதுடன் வேறு தீய பழக்கங்களில் ஈடுபடாமல் இருப்பதே இந்த நோன்பின் சிறப்பு. காலை முதல் மாலை வரை எந்த உணவையும் உண்ணாமல் இருந்துவிட்டு, மாலையில் சூரியன் மறைந்த பிறகு, நோன்பு துறந்து உணவு உண்பதை வழக்கமாகக்கொண்டுள்ளனர். 

அப்படி காலையில் இருந்து மாலை வரை எந்த உணவும் உண்ணாமல் இருந்து, நோன்பு திறந்த பிறகு திட உணவுகளை உண்பதால், அது உடலுக்குச் சில தொந்தரவுகளைத் தர வாய்ப்பு உள்ளது. அதைத் தவிர்ப்பதற்காகவும், நோன்பிருப்பவர்கள் உடனடியாகப் புத்துணர்ச்சிப் பெறவும் உதவும் ஓர் அற்புதமான உணவே 'நோன்புக் கஞ்சி'. இதனால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன. இந்த நோன்புக்கஞ்சியை நோன்பு இருப்பவர்கள் மட்டுமின்றி, மற்றவர்களும் குடித்தால், அது உடலுக்கு பல்வேறு நன்மைகளைத் தரும்.
 
நோன்புக் கஞ்சியால் கிடைக்கும் நன்மைகள் பற்றி இந்திய மருத்துவர் ஃபாமிதா கூறுகிறார்

“நோன்பு இருப்பதால், நம் உடலில் உள்ள தேவையற்ற ரசாயனப் பொருள்கள் சுத்தப்படுத்தப்படும். நோன்பு ஆரம்பித்து முதல் இரண்டு நாள்கள் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படும். மேலும், உடலில் நீர்வறட்சி ஏற்படும். இதைத் தவிர்க்க நோன்பு காலங்களில் நாம் எடுத்துக்கொள்ளவேண்டிய முக்கியமான உணவு நோன்புக்கஞ்சி.
நோன்புக்கஞ்சியை சாப்பிட்டதும், நம் உடலில் நீர்வறட்சி சரியாகி உடல் சராசரி நிலைக்கு வந்துவிடும். மேலும், நாள் முழுவதும் நோன்பு இருப்பதால், உடல் சூடாகி விடும். நோன்புக் கஞ்சி  உடல் சூட்டைத் தணித்து குளிர்ச்சியைத் தருகிறது.
நாள் முழுவதும் உணவு உண்ணாமல் இருப்பதால், நம் வயிற்றுக்கு அரைக்கும் வேலை இருக்காது. அதனால் நாம் நோன்பு திறந்த பிறகு உடனடியாக முழுமையான திடப் பொருள்களை உண்ணும்போது, வயிற்றுத் தொந்தரவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகவே, நோன்புக் கஞ்சி போன்ற திரவ உணவை உட்கொண்டால், அது நன்றாக செரிமானமாகும்.

. இதன் மூலம் உடலுக்குத் தேவையான கார்போஹைட்ரேட் கிடைக்கும். அதேபோல் சிலர் கடலை பருப்பு,  மற்றும் இறைச்சி வகைகளைச் சேர்ப்பதால், உடலுக்குத் தேவையான புரதச்சத்து கிடைக்கும்.

நோன்புக்கஞ்சி வயிற்றில் உள்ள கழிவுகளைச் சுத்தப்படுத்தும்; அல்சர் தொந்தரவுகளையும் சரி செய்யும். கஞ்சியில் சேர்க்கப்படும் கொத்தமல்லி, புதினா, மஞ்சள், வெங்காயம், வெள்ளைப்பூண்டு, தக்காளி ஆகியவை நம் வயிற்றை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகின்றன. எளிதில் செரிமானம் ஆக்கக்கூடிய எளிய வகை உணவு. இதில் நிறைந்துள்ள நார்ச்சத்து சிறந்த மலமிளக்கியாகச் செயல்படுகிறது. மலச்சிக்கலைத் தீர்க்கும்.

 நோன்புக் கஞ்சியானது வயிறு நிறைந்த ஓர் உணர்வைத் தரக்கூடியது.
அதற்கும் மேலாக உடலுக்குத் தேவையான அத்தனைச் சத்துகளையும் தரக்கூடியது. நோன்பு இருப்பவர்கள் மட்டுமின்றி அனைவரும் இதை உட்கொள்ளலாம். இது உடலுக்கு மிகுந்த ஆரோக்கியத்தைத் தரும் என்பதில் சந்தேகமில்லை.

நன்றி.  விகடன் ஹெல்த்

இயற்கை வழியில் ஆரோக்கியம்



ரமலான் நோன்பு இருக்கும் போது உடலில் ஏற்படும் அற்புத மாற்றங்கள் என்ன?.
நோன்பின் முதல் ஓரிரு நாட்கள்
எடுத்தவுடனே நம் உடலானது நோன்பு நிலைக்கு சென்றுவிடாது. கடைசியாக நாம் உண்ட உணவின் சத்துகளானது நம் உடலில் தங்கி இருக்கும். இது முதலில் உடல் இயக்கத்திற்கு உதவி புரியும்.
முதலில் நம் கல்லீரலில் சேமித்து வைக்கப்பட்ட குளுக்கோஸில் நம் உடல் இயங்கும். இந்த குளுக்கோஸ் தீர்ந்த பின், கொழுப்பானது நம் உடல் செயல் இயக்கத்திற்கு பயன்படும்.
கொழுப்பில் உடல் இயங்கும் போது,
உடல் எடை குறைய தொடங்கும்,
கொலஸ்ட்ரால் அளவு குறையும்.
நீரழிவு நோய் அபாயமும் குறையும்.
ஆனால், அதே நேரம் ரத்தத்தில் சக்கரை அளவு குறைவது உடலை பலவீனப்படுத்தும்.
இந்த காலக்கட்டத்தில் நீங்கள் தலைவலி, தலைசுற்று மற்றும் குமட்டல் ஆகியவற்றை உணரலாம். பசி அளவு மிக அதிகமாக இருக்கும் போது நிச்சயம் இவற்றை உணரலாம்.

✅உடல்வறட்சி குறித்து கவனம்
நோன்பின் மூன்றாவது நாளிலிருந்து உடல் வறட்சி குறித்து கவனம் கொள்ளல் வேண்டும்.
தொடர்ந்து நாம் நோன்பு இருக்கும் போது, கொழுப்பு உடைந்து, கரைந்து, ரத்தத்தில்  சக்கரையாக மாற்றம் அடையும்.
இக்காலக்கட்டத்தில், நீராகாரம் நிறைய எடுத்துக் கொள்ளல் வேண்டும். இல்லையென்றால் தொடர்ந்து வியர்ப்பது உடல்வறட்சிக்கு வழிவகுக்கும்.

நோன்பு காலக்கட்டம் இடையே நீங்கள் எடுத்துக் கொள்ளும் உணவில், சரியான அளவில் கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்பு இருத்தல் வேண்டும்.
அதேநேரம், புரதங்கள், உப்பு மற்றும் நீர்சத்தும் சரி வீதத்தில் இருத்தல் மிக அவசியம்.

✅உங்கள் உடல் தயாராகிவிட்டது
நோன்பு தொடங்கு எட்டாம் நாளிலிருந்து உங்கள் உடல் நோன்பிற்கு ஏற்றார்போல உடல் முழுமையாக தகவமைத்துக் கொள்ளும்.

நோன்பினால் இன்னப்பிற நன்மைகளும் இருக்கின்றன என்கிறார் கேம்பிரிட்ஜில் உள்ள அடேன்ப்ரூக் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் பணியாற்றும் மருத்துவர் ரஷீன் மஹ்ரூஃப்.
அவர், "நாம் சாதாரண நாட்களில் அதிகளவிலான கலோரிகள் எடுத்துக் கொள்வோம். இது நமது உடலானது பிற பணிகள் செய்வதிலிருந்து தடுக்கும். குறிப்பாக உடல் தம்மை தாமே சரி செய்துக் கொள்வது இதனால் தடைப்படும்." என்கிறார்.
"ஆனால், நோன்பு காலக்கட்டத்தில் குறைவாக கலோரிகள் எடுத்துக் கொள்வதால் இந்த குறையானது சரியாகும்." என்கிறார் மருத்துவர் ரஷீன்.
நோன்பானது நோய்களிலிருந்து தற்காத்துக் கொள்ளவும், நோய் தொற்றுகளுக்கு எதிராக போராடவும் பேருதவிபுரிகிறது.

✅நச்சுத்தன்மையை நீக்க
நோன்பின் இறுதி 15 நாட்கள்,
நோன்பு செயல்முறைக்கு உங்கள் உடல் முற்றும் முழுவதுமாக தகவமைத்துக் கொள்ளும்.
உங்கள் பெருங்குடல், கல்லீரல், சிறுநீரகம் மற்றும் தோல் ஆகியவை இந்த காலக்கட்டத்தில் உடல் நச்சுகளை அகற்ற தொடங்கும்.

இந்த தருணத்தில், உங்களுடைய உடல் உறுப்புகள் உச்சபட்சமாக செயல்படும் அதன் பழைய நிலைக்கு திரும்பும். உங்களது நினைவாற்றல், கவனிக்கும் திறன் மேம்படும் என்கிறார் மருத்துவர் ரஷீன்.

"நமது உடலானது புரதத்தை ஆற்றலாக மாற்ற கூடாது. முற்றும் முழுவதுமாக பட்டினி கிடக்கும் போதுதான் இது நிகழும். அதாவது பல வாரங்கள் சாப்பிடாமல் பசியுடன் இருக்கும் போது இது நிகழலாம். ஆற்றலுக்காக தசைகளை பயன்படுத்திக் கொள்ள நேரலாம். ஆனால் ரமலான் மாதத்தில் சூரியன் உதிக்கும் மற்றும் அஸ்தமிக்கும் காலக்கட்டத்திற்கு இடையேதான் நாம் நோன்பு இருக்கிறோம். பின் அரோக்கியமான உணவு மற்றும் நீர் ஆகாரங்களை உண்கிறோம். இது நம் தசைகளை காக்கும்." என்கிறார் மருத்துவர்.

✅அப்படியானால் நோன்பு இருத்தல் உடல் நலத்திற்கு ஆரோக்கியமானதா?

ஆம். ஆரோக்கியமானதுதான். ஆனால், அதற்கொரு நிபந்தனை இருக்கிறது என்கிறார் மருத்துவர் ரஷீன் மஹ்ரூஃப்.
நோன்பு இருத்தல் உடல்நலத்திற்கு நல்லதுதான். நாம் என்ன சாப்பிடுகிறோம், எப்போது சாப்பிடுகிறோம் என்பதில் கவனமாக இருக்க நோன்பு உதவி செய்கிறது. ஒரு மாதகாலம் என்பது நோன்பிற்கு சிறந்ததுதான் என்றாலும், தொடர்ந்து நோன்பு இருத்தல் அறிவுறுத்தத்தக்கது இல்லை என்கிறார்.
தொடர்ந்து நோன்பு இருக்கும் போது, கொழுப்பு ஆற்றலாக மாறுவது நின்று, நம் உடலானது தசைகளை ஆற்றலாக மாற்றும் நிலைக்கு செல்லும். இது பசி பட்டினி நிலை. இது உடல்நலத்திற்கு நல்லது அல்ல என்கிறார் மருத்துவர்.

நன்றி:BBC News தமிழ்

கண் கருவளையம் மறைய எளிய மருத்துவ டிப்ஸ்..!

      அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்பது பழமொழி. நமது உடலில் உள்ள சத்து குறைபாடு மற்றும் நோய்கள் போன்றவற்றை நமது முகம் கண்ணாடி போல...