தொப்பை வர அன்றாடம் நாம் சாப்பிடும் உணவு முறைகள் ஒரு காரணமாக இருந்தாலும், வேலை செய்யாமல் ஒரே இடத்தில் இருப்பதும் ஒரு முக்கிய காரணமாகும். தொப்பையை குறைக்க நாள்தோறும் உடற்பயிற்சியும் செய்து வருவார்கள். இதற்காக அதிகாலை எழுந்து ஓடுவதையும், நடப்பதையும் வழக்கமாக கொண்டிருப்பார்கள். இவர்களுக்காக இயற்கையான முறையில் தொப்பையை குறைக்க அற்புதமான வழி இதோ!
தேவையான பொருட்கள்
எலுமிச்சை - 5
புதினா இலைகள் – 15
வெள்ளரிக்காய் - 1
துருவிய இஞ்சி - 2 ஸ்பூன்
தண்ணீர் - 2.5 லிட்டர்
செய்முறை:
வெள்ளரிக்காய் மற்றும் 2 எலுமிச்சையை எப்பவும் போல வட்டமாக வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும். மீதியிருக்கும் 3 எலுமிச்சையை ஒரு பாத்திரத்தில் பிழிந்து, அதில் நறுக்கிய புதினா, 1.5 லிட்டர் நீர் ஊற்றி கிளறி விட வேண்டும். அதன் பின் அதில், இஞ்சி மற்றும் சிறிதளவு தண்ணீரை ஊற்றி, அதனுடன் வெட்டி வைத்த வெள்ளரிக்காய் மற்றும் எலுமிச்சையை போட்டு நன்றாக கிளறி, ஒரு நாள் முழுவதும் ஊற வைத்தால், தொப்பையை குறைக்கும் ஜூஸ் தயார். இரவில் ஊற வைத்து காலையில் குடிக்க தொடங்கலாம். இந்த ஜூஸை ஒவ்வொரு நாளும் செய்து தொடர்ந்து 3 நாட்கள் குடித்து வந்தால் தொப்பை குறைவதைக் காணலாம்.
நன்மைகள்
எலுமிச்சையில் பெக்டின் எனும் நார்ச்சத்து பசியைக் கட்டுப்படுத்துவதுடன் உடலில் சேரும் நச்சுக்களை மட்டுமின்றி, தேவையில்லாத கொழுப்புக்களையும் கரைத்து வெளியேற்றுகிறது.
வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து, நார்ச்சத்து அதிகம் உள்ளது. கலோரிகள் குறைவு என்பதால் இது உடலின் அல்கலைன் அளவை சீராக்கி, வயிற்றில் உள்ள கெட்ட கொழுப்புக்களை கரைக்க உதவுகிறது.
புதினா: உணவின் வாசனை மற்றும் சுவையை அதிகரிக்க உதவுவதோடு, புத்துணர்ச்சி அளித்து, பசியைக் கட்டுப்படுத்தி, வாய் துர்நாற்றத்தை தடுக்கிறது.
இஞ்சி: கலோரிகளை எரித்து, அதிகப்படியான கொழுப்புக்கள் உடலில் சேர்வதை தடுக்கிறது.
தண்ணீர் உடலின் நார்ச்சத்தை அதிகரிப்பதோடு உணவின் மீதுள்ள நாட்டத்தைக் குறைக்கிறது.
தொப்பை அதிகமாக இருப்பவர்கள் இந்த ஜூஸை தினமும் உடற்பயிற்சியுடன் குடித்து வந்தால், தொப்பை குறைந்து கொண்டே வரும்
இயற்கை ஒரு கொடை.. இயற்கையோடு ஒன்றி வாழ்வது ஒரு வரம். என்னதான் எண்ணங்கள் விண்ணை தொட்டாலும் பாதங்கள் இருப்பது மண்ணில் தானே.. அன்றாடம் நாம் சந்திக்கும் எளிய ஆரோக்கிய மற்றும் அழகு சார்ந்த பிரச்சினைகளுக்கு இலகுவான தீர்வு தரும் எளிய தளம் இது. தன்னம்பிக்கையை கொஞ்சம் வளர்த்து கொள்ளுங்கள் உங்களை நீங்களே கவனித்து கொள்ளுங்கள். அழகு என்பது மனசு சார்ந்த விடயம் என விளங்கிய கணத்தில் நீங்கள் பேரழகாகிறீர்கள்.
Friday, May 15, 2020
தொப்பை குறைய வேண்டுமா?
Labels:
உணவு
Interested in natural healing through herbs and foods, beautify the soul through good thoughts, Beautify the appearance through natural remedies with less and no side effects 💚
Subscribe to:
Posts (Atom)
கண் கருவளையம் மறைய எளிய மருத்துவ டிப்ஸ்..!
அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்பது பழமொழி. நமது உடலில் உள்ள சத்து குறைபாடு மற்றும் நோய்கள் போன்றவற்றை நமது முகம் கண்ணாடி போல...
-
கிச்சனில் ஒளிந்திருக்கிறது அழகு ரகசியம் காஸ்ட்லி க்ரீம்களிலும் பார்லர் சிகிச்சைகளிலும் மட்டுமல்ல, உங்கள் வீட்டுக் கிச்சனிலும் ஒள...
-
வெந்தயம் அஞ்சறைபெட்டியில் இருக்கும் உணவுகளில் முக்கியமானது. உடல் ஆரோக்கியத்துக்கு நன்மை தரக்கூடியது என்பதாலேயே இவை உணவில் நீங்கா இடம்ப...
-
தாம்பத்தியம் என்பது திருவிழா போன்றது. அது மனப்பூர்வமாக, உடல்ரீதியாக கொண்டாடப்பட வேண்டியது. தாம்பத்திய செயல்பாட்டை தம்பதிகள் இரண்டு விதமான கண...
