Saturday, April 18, 2020

ஐஸ் கட்டிகளை முகத்தில் தேய்க்கலாமா?



வெயில் காலத்திலும் உங்கள் சருமத்தை பாதுகாக்கும் எளிய பொருள் உங்கள் வீட்டிலே உள்ளது. . உங்களுடையது எந்த வகையான சருமமாக இருந்தாலும் சரி, ஐஸ் கட்டி உங்கள் சருமத்தில் மாயம் செய்யும்.

சருமத்தில் ஐஸ் கட்டிகளை தேய்க்கலாமா?

நாள் முழுவதும் அலைந்து வேலை செய்வதால் உடலும் சருமமும் சோர்ந்து விடுகிறது. சருமத்தின் சோர்வுகளை ஐஸ் கட்டி கொண்டு நீக்கி விடலாம்.
இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தி முகத்தை ஐஸ் பொலிவு பெற செய்யும். ஐஸ் பேஷியல் தான் தற்போதைய டிரெண்டிங்காக உள்ளது.

ஐஸ் பேஷியலின் பயன்கள்;
ஐஸ் கட்டியை முகத்தில் தேய்ப்பதால் இரத்த ஓட்டம் அதிகமாகி முகம் பளிச்சென்று ஆகிவிடும். ஐஸ் கட்டியை தேய்ப்பதால் இரத்த குழாய்கள் முதலில் சுருங்கி இரத்த ஓட்டம் குறையும். பின்னர் இதை ஈடு செய்ய நம்முடைய உடல் அதிகமாக இரத்த ஓட்டத்தை முகத்தில் ஏற்படுத்தும். இது முகத்தை பொலிவாக மற்றும் உயிர்ப்பாக மாற்றும்.

கருவளையம் நீங்க:
சிறிதளவு ரோஸ் வாட்டரை கொதிக்க வைத்து பின்னா் அதில் வெள்ளரிக்காய் சாறு கலந்து இதை ஐஸ் ட்ரேயில் வைத்து ஃபிரிசரில் வைத்து விடுங்கள். இதை முகத்தில் தொடர்ந்து தேய்த்து வந்தால் கருவளையம் மறைந்து விடும்.

முகப்பரு மறைய:
ஐஸ் கட்டியை முகத்தில் தடவுவதால் சருமத்தில் உற்பத்தியாகும் எண்ணெய் பசை குறையும். அதனால் முகப்பருவும் மறையும். அதுமட்டுமல்ல முகப்பருவினால் ஏற்படும் வலி மற்றும் வீக்கங்களையும் ஐஸ் கட்டி குறைக்கும்.

உதடுகள்:
ஐஸ் கட்டி கொண்டு உதடுகளை தேய்க்க வேண்டும். இதனால் உதடுகள் மென்மையாக மாறும். அதுமட்டுமல்லாமல் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்

ஆயில் ஸ்கின்:
ஆயில் ஸ்கின் உள்ளவர்களுக்கு முகம் எப்போதும் எண்ணெய் படையுடன் காணப்படும். ஐஸ் கட்டி பேஷியல் செய்வதால் முகத்தில் உள்ள நுண்ணிய துளைகள் சுருங்கி அதிகப்படியான எண்ணெய் சுரப்பு கட்டுப்படுத்தப்படும்.

செய்ய வேண்டியவை:
1. அளவிற்கு மீறினால் எல்லாமே நஞ்சு தான். எனவே ஒரே நாளில் பலமுறை ஐஸ் கட்டிகளை கொண்டு முகத்தில் தேய்ப்பதை தவிர்க்க வேண்டும். மேலும் எப்போதும் ஐஸ் கட்டிகளை நேரடியாக முகத்தில் தடவ கூடாது. ஒரு காட்டன் துணியில் சுற்றி தான் பயன்படுத்த வேண்டும்.
2. ஐஸ் கட்டி பேஷியல் செய்யும் முன் முகத்தில் உள்ள மேக்கபை நீக்கி விட வேண்டும். முகம் தூய்மையாக இருக்க வேண்டும்.
3. தொடர்ந்து ஒரு நிமிடத்திற்கு மேலாக ஐஸ் கட்டிகளை ஒரே இடத்தில் வைக்க கூடாது.

4. கண்களை சுற்றி ஐஸ் பேஷியல் செய்யும் போது கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக ஐஸ் கட்டியில் வேறு ஏதும் மூலிகை இருந்தால் அவை கண்களுக்குள் செல்லாமல் பார்த்து கொள்ளுங்கள்.

5. வட்ட வட்டமாக மசாஜ் செய்யுங்கள்.
6. ஐஸ் கட்டி பேஷியலை 10-15 நிமிடங்களுக்கு மேலாக தொடர்ந்து செய்வதை தவிர்க்க வேண்டும். நல்ல மாற்றத்திற்கு இந்த பேஷியலை மாலை அல்லது காலை செய்து பாருங்கள்.

சருமத்தின் நண்பன்



சரும பாதுகாப்புக்கு கற்றாழை

கோடையில் அடிக்கும் சுட்டெரிக்கும் வெயிலினால், சருமத்தில் எரிச்சல், அரிப்பு போன்றவையுடன், சருமத்தின் நிறமே மாறிவிடும். இப்படி வெயிலினால் பாதிக்கப்படும் சரும செல்களை பாதுகாக்க, கோடையில் சருமத்திற்கு அதிகப்படியான பராமரிப்பை வழங்க வேண்டும். அதிலும் சருமத்திற்கு இதமாக உணர வைக்கும் பொருட்களைக் கொண்டு பராமரித்து வந்தால், சரும செல்கள் புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ளலாம்.

சூரியனின் கதிர்கள் சருமத்தில் அளவுக்கு அதிகமாக படும் போது, சரும செல்கள் அளவுக்கு அதிகமாக பாதிப்படைந்து, நாளடைவில் அது சருமத்தை அசிங்கமாக  மாற்றிவிடும்.
எனவே கோடையில் சருமத்திற்கு பராமரிப்பு என்பது அவசியமாகிறது.
பராமரிப்பு கொடுக்க வேண்டுமென்று கடைகளில் விற்கப்படும் பொருட்களையெல்லாம் வாங்கிப் பயன்படுத்த வேண்டும் என்பதில்லை.
அனைவரது வீட்டிலும் வளர்க்கப்படும் கற்றாழையைக் கொண்டே சருமத்திற்கு ஃபேஸ் பேக் போட்டு வந்தால், சரும பிரச்சனைகளைப் போக்கி, சருமத்தை ஆரோக்கியமாகவும், அழகாகவும் வைத்துக் கொள்ளலாம்.

🙎🏻பொலிவான சருமம்
தேன், கஸ்தூரி  மஞ்சள் தூள், பால் மற்றும் கற்றாழை ஜெல்லை ஒன்றாக கலந்து, முகத்தில் தடவி நன்கு உலர வைத்து கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால், பொலிவான சருமத்தைப் பெறலாம்.

🙎🏻வெயிலினால் ஏற்பட்ட கருமையைப் போக்க
வெயிலில் அதிகம் சுற்றினால் சருமத்தில் ஒருவித கருமை ஏற்படும். அதனைப் போக்க, கற்றாழை ஜெல்லில் தக்காளி சாறு சேர்த்து கலந்து, ஒரு வாரம் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், நிச்சயம் சருமத்தின் கருமை நீங்கி, நிறம் அதிகரிக்கும்.

🙎🏻கரும்புள்ளிகள் மறைய
வயதாவதால் ஏற்படும் புள்ளிகள், பிம்பிள் தழும்புகள், கரும்புள்ளிகள் போன்றவற்றை மறைய வைக்க, கற்றாழை ஜெல்லில் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, தினமும் முகத்தை கழுவ வேண்டும்.

🙎🏻சரும அழகை அதிகரிக்க
சருமத்தின் அழகை அதிகரிக்க, கற்றாழை ஜெல்லில், மாம்பழ சாறு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி வாரம் ஒருமுறை முகத்திற்கு போட்டு வந்தால், முகத்தின் அழகை அதிகரித்து வெளிக்காட்டலாம்.
சென்சிடிவ் சருமத்திற்கு
கற்றாழை ஜெல்லுடன், வெள்ளரிக்காய் சாறு மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி ஊற வைத்து கழுவி வந்தால், சென்சிட்டி சருமத்தினருக்கு ஏற்பட்ட பிரச்சனைகள் எல்லாம் போகும்.

🙎🏻சொரசொரப்பான சருமத்தை நீக்க
சிலருக்கு சருமத்தில் சொரசொரப்பாக ஆங்காங்கு இருக்கும். அத்தகையதைப் போக்க, கற்றாழை ஜெல்லுடன், வெள்ளரிக்காய் சாறு மற்றும் ஓட்ஸ் ஆகியவற்றை ஒன்றாக கலந்து, கெட்டியாக பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி மசாஜ் செய்து கழுவ வேண்டும். இப்படி செய்வதால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, முகம் அழகாக இருக்கும்.

முடி வளர வெங்காயச்சாறு



தலை முடி பிரச்சனைக்கு சிறந்த தீர்வாக வெங்காயம் உதவுகிறது.

இதற்கு என்ன காரணம் என்றால் வெங்காயத்தில் இருக்கும் சல்பர் தான் முக்கிய காரணம் ஆகும்.

குறிப்பாக வெங்காயத்தை கூந்தல் பராமரிப்புக்கு பயன்படுத்தினால் கூந்தல் பிரச்சனை, பொடுகு பிரச்சனை, முடி உதிர்வு மற்றும் முடி வெடிப்பு ஆகிய பிரச்சனைகள் சரியாகும்  (hair growth) கூந்தலும் நன்கு வளரும்.

ஆய்வு ஒன்றில் வெங்காயத்தில் இருக்கும் சல்பர் கூந்தல் உதிர்வால் ஏற்படும் வழுக்கை தலையில் முடி வளர உதவுகிறது என்று தெரிய வந்துள்ளது.
எனவே உங்களுக்கு முடி அதிகம் உதிர்ந்து, முடி குறைந்தது போல் காணப்பட்டால், வெங்காயத்தை தலைமுடி குறைவாக இருக்கும் இடத்தில் பயன்படுத்தி வாருங்கள்.

வெங்காயத்தில் ஆன்டி-பாக்டீரியல் பொருள் அதிகம் இருப்பதால், ஸ்கால்ப்பில் எந்த ஒரு தொற்றும் வராமல் இருக்கும்.
மேலும் வெங்காயத்தைக் கொண்டு பலவாறு ஹேர் மாஸ்க்குகள் போடலாம். இவ்வாறு வெங்காயத்தை பல பொருட்களுடன் சேர்த்து கூந்தலுக்கு மாஸ்க் போடுவதால், கூந்தல் உதிர்தல் குறைவதோடு, கூந்தலும் நன்கு பட்டுப் போன்று மென்மையாக பொலிவோடு காணப்படும்.

💗முடி அடர்த்தியாக வளர வெங்காயம்:
வெங்காயத்தை அரைத்து, அதனை ஸ்கால்ப்பில் தடவி, ஒரு ஈரமான துணியை தலையில் சுற்றி, 25-30 நிமிடம் ஊற வைத்து குளிக்க வேண்டும்.
முடி நன்கு வலிமையாக இருப்பதுடன், ஸ்கால்ப்பில் ஏற்படும் பிரச்சனைகளையும் போக்கலாம்.

💗வெங்காயம் சாறு:
வெங்காயத்தை அரைத்து சாறு எடுத்து, அதில் சிறிது தேங்காய் எண்ணெய் சேர்த்து, கூந்தலுக்கு தடவி மசாஜ் செய்து, சுடுநீரில் நனைத்து பிழிந்த துணியை தலையில் சுற்றி 15-20 நிமிடம் ஊற வைத்து குளிக்க வேண்டும்.
ஸ்கால்ப்பில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, கூந்தலின் வளர்ச்சியும் (hair growth) அதிகரிக்கும்.

கூந்தலின் வளர்ச்சியை அதிகரிக்கும் மாஸ்க்குகளில் இது மிகவும் சிறந்தது.
அதற்கு வெங்காயத்தை அரைத்து பேஸ்ட் செய்து, அதில் சிறிது தேன் சேர்த்து கலந்து, தலையில் தடவி மசாஜ் செய்து குளித்தால், சொட்டையாக உள்ள இடத்திலும் கூந்தல் நன்கு வளரும்.

💗பொடுகு தொல்லை நீங்க:
பொடுகுத் தொல்லை அதிகம் இருந்தால், எலுமிச்சை சாற்றினை வெங்காய சாற்றில் சேர்த்து கலந்து மசாஜ் செய்தால், நல்ல பலன் கிடைக்கும்.
மேலும் இந்த முறையால் ஸ்கால்ப் சுத்தமாவதோடு, கூந்தலின் வளர்ச்சியும் (hair growth) அதிகரிக்கும்.

💗வெங்காய விழுது:
வெங்காய விழுதில், சிறிது தயிர் சேர்த்து நன்கு அடித்து, அந்த கலவையை கூந்தல் மற்றும் ஸ்கால்ப்பில் தடவி ஊற, மசாஜ் செய்து, 45 நிமிடம் ஊற வைத்து, ஷாம்பு போட்டு குளிக்கலாம்

💗வெள்ளைக்கருவுடனும் வெங்காய சாறை பயன்படுத்தலாம்:
கூந்தலுக்கு முட்டை மிகவும் நல்லது. அத்தகைய முட்டையின் வெள்ளைக்கருவை வெங்காயச் சாற்றுடன் சேர்த்து நன்கு அடித்து, ஈரமான கூந்தலில் தடவி, 25-30 நிமிடம் ஊற வைத்து குளித்தால், கூந்தல் வளர்ச்சி அதிகரிப்பதோடு, கூந்தலும் நன்கு பட்டுப் போன்று இருக்கும்.


கண் கருவளையம் மறைய எளிய மருத்துவ டிப்ஸ்..!

      அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்பது பழமொழி. நமது உடலில் உள்ள சத்து குறைபாடு மற்றும் நோய்கள் போன்றவற்றை நமது முகம் கண்ணாடி போல...