Sunday, May 3, 2020

செலவே இல்லாத இயற்கை ப்ளீச்


முகத்திட்கு வீட்டிலேயே செய்யலாம் இயற்கை ப்ளீச் (Natural face bleaching ).

பார்லர்களில் ஆயிரக்கணக்கில் கொடுத்து செய்யப்படும் ப்ளீச் ஐ வீட்டிலேயே மிக இலகுவில் இயற்கையாக செய்வது எப்படி??
தேவையானவை :
மெல்லிய வெள்ளை காட்டன் துணி ஒன்று.
எலுமிச்சை சாறு -1&1/2 தே. க
தேன் -1 தே க
கிளிசரின் -1/2தே க (வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு  ).
துணியை ஒரு முகமூடி போல் கண் மூக்கு, வாய்க்கு துளை இட்டு வெட்டி கொள்ளவும். 
பின் ஒரு பாத்திரத்தில் எலுமிச்சை சாறு, தேன் சேர்த்து நன்கு கலக்கவும்.
வறண்ட சருமம் உள்ளவர்கள் மாத்திரம் கிளிசரின் சேர்த்து கொள்ளலாம்.
பின் இந்த கலவையினுள் தயாரித்த மாஸ்க் ஐ போட்டு லேசாக பிழியவும்.
பின் கழுவி துடைத்த முகத்தில் இந்த மாஸ்க் ஐ
போட்டு 15-30நிமிடம் வரை விட்டு சவர்காரம் போடாமல்  கழுவவும்.
முதல் முறையிலேயே முகம் இரு மடங்கு பொலிவாகி இருப்பதை அவதானிக்கலாம்.
வாரம் ஒரு முறை செய்து வரலாம்.

🚫முகத்தில் பரு, காயம்,  உள்ளவர்கள் சென்சிடிவ் சருமம் உள்ளவர்கள் இதை செய்வதை  தவிர்த்திடுங்கள்.

கண் கருவளையம் மறைய எளிய மருத்துவ டிப்ஸ்..!

      அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்பது பழமொழி. நமது உடலில் உள்ள சத்து குறைபாடு மற்றும் நோய்கள் போன்றவற்றை நமது முகம் கண்ணாடி போல...