Thursday, May 7, 2020

ஸ்கின் ரிப்பேர் கிரீம் (skin repairing cream )


முகம் எல்லோரும் அதிக நேசத்துடன் பேணும் ஒரு உறுப்பு.. 
சில நேரம் நாம் அறியாமல் செய்யும் சில தவறுகள் முகத்தில் நிரந்தர வடுக்களை விட்டு செல்லும்.
முக்கியமாக பாவிக்கும் தரமற்ற முகப்பூச்சு or ரசம் மற்றும் அதிக இரசாயனம் கலக்கப்பட்ட கிரீம் வகைகள் முகத்தை கருமையடைய செய்து விடும்..
ஒரு மாதமளவில் கீழே கொடுக்கப்பட்ட கிரீம் ஐ பாவிப்பதால் முகம் மெதுவாக மீள்நிலையை அடையும்.


தேவையானவை.
ஓட்ஸ் 2 தே. க
பசும்பால் 3 தே. க
தேன்  1/2 தே. க
கஸ்தூரி மஞ்சள் 1/4 தே. க
பாதாம் எண்ணெய் 1/4 தே. க
கற்றாழை ஜெல் 2 தே க


பூசும் முறை :இரவில் தூங்கும் முன் நன்கு கழுவி துடைத்த முகத்தில்   நன்கு பூசி சில வினாடிகள் மசாஜ் செய்து விடுங்கள். காலையில் கழுவிவிடலாம்.

செய்முறை :
ஓட்ஸ் ஐ பசும்பாலில் ஊறவிடவும். 30 நிமிடம் வரை அவ்வாறு வைக்கவும். நன்றாக கலக்கி பேஸ்ட் வடிவில் வந்தவுடன் இரும்பு வடியால் வடிக்கவும். இதட்கு மற்ற பொருட்களை ஒவ்வொன்றாய் சேர்க்கவும்.
கடைசியில் கஸ்தூரி மஞ்சள் தூளை சேர்க்கவும்.

பயன்கள்.
#இரசாயனங்களால்  பழுதடைந்த முகத்தை சீராக்கும்.
#சூரிய ஒளியால் கருத்த முகத்தை  பொலிவாக்கும்.
#பொன்னிற சருமத்தை தரும்.


எச்சரிக்கை.-
கஸ்தூரி மஞ்சள் அலர்ஜி உள்ளவர்கள் கஸ்தூரி மஞ்சளை தவிர்க்கலாம்.


Hafza fiaz💚

No comments:

Post a Comment

கண் கருவளையம் மறைய எளிய மருத்துவ டிப்ஸ்..!

      அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்பது பழமொழி. நமது உடலில் உள்ள சத்து குறைபாடு மற்றும் நோய்கள் போன்றவற்றை நமது முகம் கண்ணாடி போல...