Saturday, May 16, 2020

பொடுகுத் தொல்லை நீங்க

முடியில் உள்ள இறந்த செல்களே பொடுகு ஆகும். இது தலையின் மேற்பரப்பை வெகுவாக பாதிக்கிறது. பொடுகுத் தொல்லை உள்ளவர்களுக்கு தலையில் அரிப்பு ஏற்படுகிறது.

பொடுகு ஏற்படக் காரணங்கள்:
#எண்ணெய்:
தலையில் நாம் நாள்தோறும் தேய்க்கும் எண்ணெயுடன் தலையில் உள்ள இறந்த செல்கள் சேர்ந்து பொடுகு தோன்றுகிறது.
#பூஞ்சைத் தொற்று:
தலையில் உள்ள ஈரப்சையில் பூஞ்சைத் தொற்று ஏற்பட்டு அதுவே வெண்ணிறமாக சில சமயம் பொடுகு போல காணப்படுகிறது.
#மனஅழுத்தம்:
மனஅழுத்தம் உள்ளவர்களுக்கு பொடுகு அரிப்புடன் சேர்ந்து வருகிறது. தலை மிகவும் அரிப்புடன் காணப்பட்டால் அவர்களுக்கு மனஅழுத்தம் இருக்கிறது என்பதை அறியலாம்.
#சுத்தமின்மை:
தினந்தோறும் தலைக்கு தண்ணீர்  ஊற்றி குளிக்க வேண்டும். இதைத் தவறினால் இறந்த செல்கள் அனைத்தும் தலையிலேயே இருந்து பொடுகாக மாறும்.
#ஊட்டச்சத்து குறைவு:
அன்றாடம் சரி விகித உணவு எடுத்துக் கொள்ளாவிட்டால் தலையில் பொடுகு தோன்றும்.
#இரசாயனம்:
தலைமுடிக்கு அதிக இரசாயனம் கலந்த பொருட்களை பயன்படுத்தினால் பொடுகுத் தொல்லை ஏற்படும்.
#உடலில் வறட்சி:
உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் கிடைக்காவிட்டால் கூட சிலருக்கு தலை வறண்டு பொடுகு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. அதனால் தினமும் 2  லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
#தலை சீவாமை:
தினந்தோறும் தலையை சீவ வேண்டும். சிலர் தலை சீவ மாட்டார்கள். அவர்களுக்கு தலையில் சிக்கு ஏற்பட்டு அதில் அழுக்கு சேர்ந்து பொடுகுத் தொல்லை ஏற்படும்.
#மருந்து மாத்திரைகள்:
அதிக மருந்து மாத்திரைகள் நெடு நாட்கள் எடுத்துக் கொள்பவர்களுக்கு பொடுகு ஏற்படும்.
#தோல் அலர்ஜி:
தோலில் ஏற்படும் அலர்ஜி சில நேரம் தலையில் ஏற்பட்டு அது பொடுகாகிறது.


பொடுகுத் தொல்லை நீங்க இயற்கையான  முறைகள்

#️⃣பொடுகுத் தொல்லை நீங்க தேங்காய் எண்ணெய் மற்றும் எலுமிச்சை மசாஜ்
தேங்காய் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறை சம அளவில் எடுத்து கலக்கிக் கொள்ள வேண்டும். இந்த கலவையை தலையில் தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். 20 நிமிடங்கள் கழித்து தலைக்குக் குளிக்க வேண்டும். இரசாயனம் இல்லாத இந்த கலவைக்கு பொடுகைப் போக்கும் தன்மை உண்டு.

#️⃣பொடுகுத் தொல்லை நீங்க வெந்தயம்

சிறிது வெந்தயத்தை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்து காலையில் அதை நன்றாக அரைத்து விழுதாக்கி அந்த விழுதை தலை முழுவதும் தேய்த்து அரை மணி நேரம் கழித்து குளிக்க வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் உடலுக்கு குளிர்ச்சி கிடைப்பதுடன் பொடுகுத் தொல்லையும் நீங்கும்.

#️⃣பொடுகுத் தொல்லை நீங்க தயிர்
தயிரை தலை முழுவதும் நன்றாக தேய்த்து ஒரு அரை மணி நேரம் கழித்து ஷாம்பூ போட்டு தலைக்கு குளிக்க வேண்டும். இந்த முறையை பின்பற்றினால் பொடுகு நீங்கும்.

#️⃣பொடுகுத் தொல்லை நீங்க வேப்பிலை சாறு

ஒரு கொத்து வேப்பிலையை எடுத்து அரைத்து அந்த சாறை எடுத்து தலையில் தேய்த்து 20 நிமிடங்கள் கழித்து ஷாம்பூ போட்டு தலைக்கு குளிக்க வேண்டும். வேப்பிலைக்கு பொடுகை போக்கும் தன்மை உண்டு.

#️⃣பொடுகுத் தொல்லை நீங்க ஆரஞ்சு தோல் மற்றும் எலுமிச்சை மருந்து
ஆரஞ்சு தோலை எடுத்து அதனுடன் சிறிது எலுமிச்சை சாறை சேர்த்து நன்கு அரைத்து தலையில் தடவ வேண்டும். அரை மணி நேரம் கழித்து தலைக்கு ஷாம்பூ போட்டு குளிக்க வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் நாளடைவில் பொடுகுத் தொல்லை நீங்கும்.

#️⃣பொடுகுத் தொல்லை நீங்க தேங்காய் எண்ணெய், ஒலிவ் எண்ணெய், தயிர் மற்றும் தேன் மருத்துவ முறை
2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய், 2 ஸ்பூன் தேன், 2 ஸ்பூன் தயிர், 2 ஸ்பூன் ஒலிவ் எண்ணெய் எடுத்துக் கொண்டு நன்கு கலக்கி அந்த கலவையை தலைக்கு தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். பின்பு 20 நிமிடங்கள் கழித்து தலைக்கு ஷாம்பூ போட்டு குளிக்க வேண்டும்., பின்பு தலையை நன்கு உலர்த்தி தலையில் சிறிது தேங்காய் எண்ணெய் தேய்க்க வேண்டும். இந்த முறையை பின்பற்றினால் பொடுகுத்தொல்லை கண்டிப்பாக நீங்கும்.

#️⃣பொடுகுத் தொல்லை நீங்க தயிர் மற்றும் எலுமிச்சை சாறு
ஒரு கப் தயிறுடன் அரை எலுமிச்சை சாறு சேர்த்து அந்த கலவையை தலைக்கு தேய்த்து சிறிது நேரம் கழித்து தலைக்கு ஷாம்பூ போட்டு குளிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் பொடுகு நீங்கும்.

#️⃣பொடுகுத் தொல்லை நீங்க முட்டை மட்டுமே ஒரு அருமையான மருந்து
இரண்டு முட்டையின் வெள்ளைகருவை எடுத்து நன்கு கலக்க வேண்டும். பின்பு அந்த கலவையை தலைக்கு தேய்த்து ஒரு பிளாஸ்டிக் கவர் கொண்டு தலையை மூட வேண்டும். பின்பு தலைக்கு ஷாம்பூ போட்டு குளிக்க வேண்டும். முட்டையின் மனம் போக இரண்டு முறை தலைக்கு ஷாம்பூ போட்டு குளிக்க வேண்டும். வாரம் ஒரு  முறை இவ்வாறு செய்தால் பொடுகு நீங்கும்.

#️⃣பொடுகுத் தொல்லை நீங்க பூண்டு மற்றும் தேன்

சிறிது பூண்டுடன் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து அரைத்து விழுதாக்க வேண்டும். அந்த விழுதை தலையில் தேய்த்து மசாஜ் செத்து 20 நிமிடங்கள் கழித்து தலைக்கு ஷாம்பூ போட்டு குளிக்க வேண்டும். இந்த முறையை காலையில் குளிப்பதற்கு முன் செய்ய வேண்டும். பொடுகுத் தொல்லையில் இருந்து விடுபடலாம்.



அஜீரணம் குணமாக


அஜீரணம் என்பது அனைத்து வயதினருக்கும் வரும் ஓர் வயிற்றுத் தொல்லை.நாம் உண்ணும் உணவு சரியாக செரிமானம் ஆகாமல் போகும் போது அஜீரணம் உண்டாகும். நாம் உண்ணும் உணவை செரிக்க செரிமான நீர் சுரப்பதில் பிரச்சனை ஏற்பட்டாலும் இந்த வயிற்று கோளாறு ஏற்படும். 

பொதுவாகவே வயது ஏற ஏற செரிமான நீர் சுரப்பது குறைந்து கொண்டே வரும். சில சமயங்களில் உண்ணும் உணவை சரியாக வாயில் அரைத்து மென்று சாப்பிடாவிட்டாலும் அஜீரணம் வரும். செரிமான நீரின் வேலையை குறைக்க உண்ணும் போதே உணவை நன்றாக அரைத்து சாப்பிட வேண்டும்.


அதிகமான காரம், அதிகமான புளிப்பு மற்றும் எண்ணெயில் வறுத்த உணவுகளை உண்ணும் போது இயல்பாக சுரக்கும் செரிமான நீர் சுரப்பதில் பிரச்சனை ஏற்படுவதால் அஜீரணம் வர வாய்ப்புண்டு. இந்த வகையான உணவுகளை உண்ணும் போது உடலுக்குள் உணவு செல்லும் பாதையில் உள்ள உறுப்புகள் எரிச்சலுக்கு ஆளாகும். அப்போது உணவு பாதை உறுப்புகளால் செரிமான நீரை சரிவர சுரக்க இயலாது.
வீட்டு சாப்பாடு சாப்பிடுபவர்களுக்கு அஜீரண பிரச்சனை அவ்வளவாக வராது. அதிக உணவு உண்ணும் போதோ கடைகளில் உணவு வாங்கி உண்ணும் போதோ அஜீரணம் ஏற்படும். பொதுவாக சுற்றுலா தளங்கள் சென்றாலே அஜீரண பிரச்சனை கண்டிப்பாக வரும். அங்கே கண்ட கண்ட உணவுகளை உண்பதால் அனைத்து வயதினருக்கும் அஜீரணம் ஆக வாய்ப்புண்டு.
கீழே பலவகையான எளிய ஜீரண மருந்துகள் கொடுக்கப்பட்டுள்ளன. உங்கள் வீட்டில் உள்ள பொருட்களுக்கு ஏற்றவாறான மருந்தை எடுத்து கொள்ளுங்கள்.

1️⃣அஜீரணம் குணமாக கருவேப்பிலை, இஞ்சி, சீரகம் மருந்து
சுற்றுலா மற்றும் விழாகால சமயங்களில் வீட்டில் இருக்க கூடிய கருவேப்பிலை, இஞ்சி, சீரகம் கையில் வைத்துக் கொள்வது சாலசிறந்த முன்எச்சரிக்கை நடவடிக்கை ஆகும்.
மிக எளிய மருத்துவமாக ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம் மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.
சுற்றுலா செல்லும் போது எளிதில் எடுத்து செல்ல கூடிய இந்த வீட்டு பொருட்களை மறக்காமல் எடுத்து செல்லுங்கள்.

2️⃣அஜீரணம் குணமாக ஓமம், கருப்பட்டி மருந்து
அஜீரணம் குணமாக ஓமம் மற்றும் கருப்பட்டி கலந்து நம் வீட்டிலேயே கஷாயம் செய்து குடிக்கலாம்.
ஓர் சிறிய பாத்திரத்தில் நீர் ஊற்றி சுட வைக்க வேண்டும். அதில் கருப்பட்டி போட்டு கருப்பட்டி கரையும் வரை கலக்க வேண்டும். கருப்பட்டி கரைந்ததும் பாத்திரத்தை அடுப்பில் இருந்து இறக்கி விடலாம். அதில் ஓமம் கலந்து குடித்தால் வயிற்று கோளாறு மட்டுப்படும். குடிக்க இதமாகவும் இருக்கும்.

3️⃣அஜீரணம் குணமாக கருப்பட்டி, சுக்கு, மிளகு மருந்து
கருப்பட்டியுடன் சிறிது சுக்கு  சேர்த்து அவற்றுடன் 4 மிளகும் சேர்த்து நன்கு பொடியாக அரைத்து வைத்து கொள்ள வேண்டும். இந்த மருந்தை தயார் செய்து காற்று போகாத ஒரு டப்பாவில் போட்டு வைத்து கொள்ளலாம். அஜீரணம் ஏற்படும் சமயங்களில் இரண்டு வேளை சாப்பிட்டால் அஜீரணம் குணமாகி நல்ல பசி ஏற்படும்.

4️⃣அஜீரணம் குணமாக சீரகம் மருந்து
அஜீரணத்திற்க்கு வெறும் சீரகத்தை மட்டும் நீரிலிட்டு நன்கு கொதிக்க வைத்து, அந்த சீரக நீரை குடித்து வர நன்கு ஜீரணம் ஆவதோடு, உடலும் குளிர்ச்சியடையும். உடல் உஷ்ணத்தினால் அஜீரணம் ஏற்பட்டிருந்தால் உடனே சரியாகிவிடும்.

5️⃣ கறிவேப்பிலை,சுக்கு,சீரகம்,ஒமம் மருந்து
அஜீரணத்திற்காக நாம் உண்ணும் உணவில் ஒரு பாகமாக சேர்த்து கொள்ள கூடிய மருந்து இது. அஜீரணம் குணமாக கறிவேப்பிலை, சுக்கு,சீரகம்,ஒமம் சேர்த்து துவையல் போல் அரைத்து சாப்பிட்டால் அஜுரணம் சரியாகும். அஜீரணம் ஏற்படும் சமயங்களில் சாப்பிட தோணாது. எளிதில் ஜீரணம் ஆக கூடிய இட்லியுடன் இந்த துவையல் சேர்த்து சாப்பிடலாம்.

6️⃣அஜீரணம் குணமாக வெற்றிலை, மிளகு மருந்து
விருந்து நிகழ்சிகளில் வெற்றிலை வைப்பதின் நோக்கமே ஜீரணத்திற்காகத் தான். தடபுடலான விருந்து உணவுகளில் உள்ள மசாலா அவ்வளவு சீக்கிரம் ஜீரணம் ஆகாது. அசைவ விருந்தானால் சொல்ல தேவையே இல்லை. இதை கருத்தில் கொண்டுதான் நம் முன்னோர்கள் வெற்றிலையை விருந்து நிகழ்சிகளின் ஓர் அங்கமாக வைத்திருந்தனர். வெற்றிலை அஜீரண கோளாறை குறைத்து ஜீரண சக்தியை அதிகரிக்கும்.
அஜீரண கோளாறு ஏற்பட்டால் வெற்றிலையுடன் (பாக்கு சுண்ணாம்பு இல்லாமல்) நான்கு மிளகு சேர்த்து மென்று தின்றால் அஜீரணக்கோளாறு சரியாகும். மிளகு அதிகம் சேர்த்தல் காரம் அதிகமாக இருக்கும்.

7️⃣அஜீரணம் குணமாக இஞ்சி, தேன் மருந்து
அஜீரண கோளாறுக்கு மட்டுமின்றி பொதுவாகவே ஜீரண சக்தியை அதிகரிக்க கொடுக்கும் மருந்து இது. குழந்தைகளின் ஜீரணசக்திக்காக மாதமொரு முறை கண்டிப்பாக கொடுக்க வேண்டிய அருமருந்து இது. இஞ்சியை தோல் நீக்கி  தட்டி(அரைத்து) சாறு எடுத்து அதை நன்றாக தெளிய வைத்து இறுத்து சுத்தமான இஞ்சி சாறு எடுத்து அதனுடன் சிறிது தேன் கலந்து பருகினால் ஜீரணசக்தி அதிகரிக்கும். இஞ்சியை தெளிய வைத்து இறுத்தாமல் அதன் சாறு எடுக்க கூடாது. தேனின் மருத்துவ குணத்துடன் இஞ்சியின் காட்டமான சுவையை குறைக்கவும் தேன் சேர்க்கப்படுகின்றது. நம் சுவைக்கேற்றவாறு தேனின் அளவை கூட்டி கொள்ளலாம். குழந்தைகளுக்கு தேன் அதிகம் சேர்த்துக் கொடுக்க வேண்டும்.
8️⃣அஜீரணம் குணமாக சாதம் வடித்த நீர், மஞ்சள் பொடி மருந்து
அஜீரணம் குணமாக வேறு எந்த ஒரு பொருளையும் தேடி போக தேவையில்லை. வீட்டில் கண்டிப்பாய் இருக்கக்கூடிய மஞ்சள்தூள் கொண்டே குணபடுத்தக் கூடிய எளிமையான ஒரு மருத்துவம் இது. ஒரு கப் சாதம் வடித்த நீரில், கால் ஸ்பூன் மஞ்சள் பொடியைக் கலந்து குடிக்க வயிற்று உப்புசம், அஜீரணம் குணமாகும்.

சரும கருமையைப் போக்க வேண்டுமா?


சுற்றுச்சூழல் மாசுபாடு, கொளுத்தும் சூரியக்கதிர்கள், மன அழுத்தம் போன்றவற்றால் சரும செல்கள் மிகுந்த பாதிப்பிற்குள்ளாகி, சருமத்தின் நிறம் நாளுக்கு நாள் மாற்றமடைகிறது. இதனைத் தடுக்க வேண்டுமானால், சருமத்திற்கு முறையான பராமரிப்புக்களை வழங்க வேண்டியது அவசியம்..

அதிலும் நம் வீட்டு சமையலறையில் உள்ள சில எளிய பொருட்களைக் கொண்டே பராமரிப்பு கொடுத்தால் போதுமானது. அப்படி சருமத்தில் உள்ள கருமையைப் போக்க உதவும் ஓர் பொருள் தான் சோள மாவு(corn flour). இந்த மாவைக் கொண்டு ஃபேஸ் பேக் போட்டு வந்தால், சருமத்தின் நிறத்தை அதிகரிக்கலாம்.

இங்கு சோள மாவைக் கொண்டு எப்படியெல்லாம் ஃபேஸ் பேக் போடலாம் என்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து முயற்சித்து, கோடையில் உங்கள் சரும நிறத்தை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

1️⃣ஃபேஸ் பேக் 1
இந்த ஃபேஸ் பேக் போடுவதால் சருமத்தில் உள்ள தழும்புகள், கரும்புள்ளிகள், சரும சுருக்கம் போன்றவை நீங்கி, சரும பொலிவு மேம்படும். அதற்கு 1 டேபிள் ஸ்பூன் சோள மாவுடன், 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு, 1 டீஸ்பூன் மஞ்சள் தூள், 1 டீஸ்பூன் பேக்கிங் சோடா மற்றும் சில துளிகள் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். ஒருவேளை உங்களுக்கு வறட்சியான சருமம் என்றால் எலுமிச்சை சாற்றிற்கு பதிலாக தேனை சேர்த்துக் கொள்ள வேண்டும். இறுதியில் முகத்தைக் கழுவி உலர்த்திய பின் மாய்ஸ்சுரைசர் ஏதேனும் தடவ வேண்டும்.

2️⃣ஃபேஸ் பேக் 2
ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் சோள மாவு, 2 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு, 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் பால் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி நன்கு உலர வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் சூரியக்கதிர்களால் கருமையடைந்த சருமத்தின் நிறம் மாற்றமடையும். மேலும் சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையும் வெளியேற்றப்பட்டு, சருமம் மென்மையாகவும் பொலிவுடனும் இருக்கும்.

3️⃣ஃபேஸ் பேக் 3
சிறிது நன்கு கனிந்த வாழைப்பழம் மற்றும் பப்பாளியை ஒரு பௌலில் போட்டு கையால் நன்கு மென்மையாக மசித்து, 2 டேபிள் ஸ்பூன் சோள மாவு சேர்த்து, வறட்சியான சருமம் உள்ளவர்கள் ரோஸ் வாட்டரையும், எண்ணெய் பசை சருமத்தினர் எலுமிச்சை சாற்றினையும் சிறிது சேர்த்து கலந்து, ஃப்ரிட்ஜில் 30 நிமிடம் வைக்க வேண்டும். பின் முகத்தை வெதுவெதுப்பான நீரால் கழுவி, பின் இந்த கலவையை முகத்தில் தடவி 5-6 நிமிடம் மென்மையாக மசாஜ் செய்து, நீரில் நனைத்த காட்டன் கொண்டு முகத்தைத் துடைத்து எடுக்க வேண்டும். இதனாலும் சரும கருமை அகலும்

4️⃣ஃபேஸ் பேக் 4
ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் சோள மாவு, 1 டீஸ்பூன் காபி தூள், 1 டீஸ்பூன் ஓட்ஸ் பவுடர் மற்றும் 3 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் முகத்தை வெதுவெதுப்பான நீரால் கழுவி, பின் இக்கலவையைக் கொண்டு முகத்தை 2 நிமிடம் ஸ்கரப் செய்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதன் மூலம் சருமத்தில் உள்ள கருமை நீங்கி, சருமம் பொலிவு பெறும்.

5️⃣ஃபேஸ் பேக் 5
இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 2-3 முறை போட்டு வந்தால், நிச்சயம் கோடையில் சருமத்தின் நிறத்தைப் பாதுகாக்கலாம்.
அதற்கு ஒரு பௌலில் ஒரு முட்டையின் வெள்ளைக்கருவை எடுத்து, அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் ஆரஞ்சு ஜூஸ், 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் சோள மாவு சேர்த்து நன்கு கலந்து, முகத்தை நீரில் கழுவிவிட்டு, பின் இக்கலவையை முகத்தில் 2-3 லேயர்களாகத் தடவி, நன்கு உலர்ந்ததும் மேல்புறமாக தேய்த்து கழுவ வேண்டும். இதனால் சருமத்தின் இளமைத்தன்மையும், பொலிவும் மேம்படும்.

பாத வெடிப்பு நீங்க... !!


பாத வெடிப்பு என்பது கால் பாதங்கள் உலர்ந்து போய் பாதத்தில் பல பிளவுகள் ஏற்படுவதாகவும். இது ஏற்பட்டால் பெண்கள் நடப்பதற்கே மிகவும் கஷ்டப்படுவார்கள். மிகவும் வலி மிகுந்ததாக இருக்கும். பாத வெடிப்பு ஏற்பட்டால் மிகவும் கவனமுடன் கால்களை பராமரிக்க வேண்டும். பாத வெடிப்புகளில் தூசிகள் மண் சேர்ந்து அவை புத்தாக மாறக்கூடிய அபாயம் உண்டு. எனவே பாத வெடிப்புகளை ஆரம்ப காலகட்டத்திலேயே கண்டறிந்து பாதங்கள் மேலும் பாதிப்படையாமல் பாதுகாக்க வேண்டும். 

இளம் வயதினருக்கு வரும் பாத வெடிப்புகளை வேறு மருத்துவ முறைகளில் கூட விரைவில் குணபடுத்தி விடலாம்.  ஆனால் வயதானவர்களுக்கு காலம் காலமாக இருக்கும் பாத வெடிப்புகளை தமிழ் மருத்துவ முறையின்  மூலமே முழுவதுமாக குணபடுத்த முடியும்.

பாத வெடிப்பு ஏற்படக் காரணங்கள்


1)வைட்டமின் குறைபாடு
சிலருக்கு உடலில் உள்ள வைட்டமின் குறைபாடால் பாத வெடிப்புகள் ஏற்படும்.

2)பூஞ்சை தொற்று
இது பெண்களுக்கே அதிகம் ஏற்படுகிறது. ஏனென்றால் பெண்கள் அதிகம் தண்ணீரில் வேலை பார்ப்பார்கள். பூஞ்சை வளர ஏற்ற இடம் ஈரமான இடம் ஆகும். பூஞ்சை தொற்று ஏற்பட்டால் கூட கால்களில் வெடிப்பு ஏற்படும்.

3)தைராய்டு
தைராய்டு உள்ளவர்களுக்கு கால்களில் அதிகம் வெடிப்புகள் ஏற்படும். இது தைராக்சின் குறைபாடால் ஏற்படுவதாகும்.

4)சொரியாசிஸ்
சொரியாசிஸ் தோல் நோய் உள்ளவர்களுக்கு கால்களில் பாத வெடிப்பு ஏற்படும்.

5)உடல் பருமன்
உடல் பருமன் அதிகமாக உள்ளவர்களுக்கு பாத வெடிப்புகள் கண்டிப்பாக ஏற்படும். காரணம் உடலின் மொத்த எடையையும் கால்களே தாங்குகிறது. இதனால் பாதங்களில் வெடிப்புகள் ஏற்படுகிறது.

6)உடலில் நீரிழப்பு
உடலில் வறட்சி ஏற்பட்டால் கால்களில் வெடிப்புகள் ஏற்படும். போதுமான அளவு தண்ணீர் குடிக்காததே இதற்கு காரணம். உடலுக்கு தேவையான நீர் கிடைக்காவிட்டால் பாதங்களில் வெடிப்புகள் தோன்றும்.

7)குளிர் காலம்
சிலருக்கு குளிர் காலங்களில் பாத வெடிப்பு ஏற்படும். பருவ நிலை மாற்றமே இதற்கு காரணம்.

8)சுடு தண்ணீர்
சிலர் சுடு நீரில் குளிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். சுடு நீரில் குளிப்பதால் கூட சிலருக்கு பாத வெடிப்புகள் ஏற்படும்.

9)நீரிழிவு நோய்:
நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு பாத வெடிப்புகள் ஏற்படும்.

10)இரசாயன சோப்பு
அதிக இரசாயனம் கலந்த சோப்பை பயன்படுத்துபவர்களுக்கு இரசாயனம் காரணமாக வெடிப்புகள் ஏற்படும்.
பாத வெடிப்பு நீங்க எளிய தமிழ் மருத்துவ முறைகள்

⏩️பாத வெடிப்பு நீங்க ஒலிவ்(ஆலிவ்) எண்ணெய் மருந்து
இரவு தூங்கும் முன்பு கால்பாதங்களில் ஒலிவ் எண்ணையை தடவி விட்டு காலை எழுந்ததும் கால்களை நன்கு கழுவ வேண்டும். பாத வெடிப்பில் இருந்து விடுபடலாம்.
⏩️பாத வெடிப்பு நீங்க தேங்காய் எண்ணெய் மருந்து

இரவு தூங்கும் முன்பு கால்பாதங்களில் தேங்காய் எண்ணையை தடவி விட்டு காலை எழுந்ததும் கால்களை நன்கு கழுவ வேண்டும். பாத வெடிப்பில் இருந்து விடுபடலாம்.

⏩️பாத வெடிப்பு நீங்க அரிசி மாவு ஒரு அருமையான மருந்து

அரிசி மாவிற்கு பழைய செல்களைப் புதுப்பிக்கும் தன்மை உண்டு. அரிசி மாவுடன் சிறிது தேன் மற்றும் வினிகர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். அதனுடன் சிறிது பாதாம் எண்ணெய் சேர்த்து கலக்க வேண்டும். கால்களை பத்து நிமிடங்கள் வெது வெதுப்பான நீரில் வைத்து எடுத்த பின் அரிசி மாவு விழுதை பாதங்களில் தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். பாத வெடிப்புகள் மறையும் வரை இதனை தொடர்ந்து தினமும் செய்ய வேண்டும்.

⏩️பாத வெடிப்பு நீங்க எலுமிச்சைப்பழம் மருந்து
எலுமிச்சை சாறுக்கு கடினமான தோலை மென்மையாக்கும் தன்மை உள்ளது. தினமும் எலுமிச்சை சாறு கலந்த நீரில் கால்களை 10-15 நிமிடங்கள் ஊற வைத்து எடுத்து பின் நன்கு கால்களை தேய்த்து கழுவினால் பாத வெடிப்புகள் நாளடைவில் மறையும்.

⏩️பாத வெடிப்பு நீங்க பால் மற்றும் தேன் கலந்து மருந்து
தேனையும் பாலையும் 1 : 2 என்ற விகிதத்தில் எடுத்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பால் சிறிது வெது வெதுப்பாக இருந்தாலே போதுமானது. அதிகமாக சுடக் கூடாது. அது பாத வெடிப்பை இன்னும் அதிகப்படுத்தும். முதலில் கால்களை வெது வெதுப்பான நீரில் ஊற வைத்து பின் தேன் மற்றும் பால் கலந்த கலவையில் கால்களை ஊற வைக்க வேண்டும்.(வெடிப்புகளில் மட்டும் படும் அளவு கொஞ்சம் இருந்தால் போதும் ) பின்பு கால்களை நன்கு மசாஜ் செய்து நன்கு நீரினால் கழுவ வேண்டும்.

⏩️பாத வெடிப்பு நீங்க வாழைப்பழம் ஓர் மருந்து

வாழைப்பழத்தை நன்கு குழைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த விழுதை கால் பாதங்களில் நன்கு தேய்த்து ஒரு பற்று போட வேண்டும். ஒரு பத்து நிமிடங்கள் கழித்து கால்களை நன்கு கழுவி வெது வெதுப்பான நீரில் பத்து நிமிடங்கள் ஊற வைத்து பின் கால்களை ஒரு சுத்தமான துணியைக் கொண்டு துடைத்து எடுக்க வேண்டும். தினந்தோறும் இந்த முறையை பின்பற்றினால் பாத வெடிப்பில் இருந்து விடுபடலாம்.


⏩️பாத வெடிப்பு நீங்க தேன் மருந்து
ஒரு தே. கரண்டி தேனை நீரில் கலந்து அந்த கலவையில் கால்களை பத்து நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். பின்பு கால்களை நன்கு கழுவ வேண்டும். தினமும் இந்த முறையை பின்பற்றினால் கால் பாத வெடிப்பு நீங்கி விடும்.



⏩️பாத வெடிப்பு நீங்க எலுமிச்சைபழம் மற்றும் வெள்ளை சர்க்கரை மருந்து

எலுமிச்சை பழத்தை பாதியாக வெட்டிக் கொள்ள வேண்டும். அந்த பாதி பழத்தை வெள்ளை சர்க்கரையில் தொட்டு கால் பாத வெடிப்பு உள்ள இடத்தில தேய்த்து நன்கு மசாஜ் செய்ய வேண்டும். தினமும் பத்து நிமிடங்கள் இதைச் செய்தால் பாத வெடிப்பு பறந்து விடும்.


⏩️பாத வெடிப்பு நீங்க கற்றாளை மருந்து

கால்களை வெது வெதுப்பான நீரில் கழுவி சுத்தம் செய்து கொண்டு கற்றாளை ஜெல்லை கால்களில் தடவி பின் கால் உரையை மாட்டிக் கொண்டு இரவில் தூங்க வேண்டும். மறுநாள் காலையில் எழுந்து கால்களை நன்கு கழுவி சுத்தம் செய்து துடைத்து ஈரத்தை போக்க வேண்டும். தொடர்ந்து இவ்வாறு செய்து வந்தால் நல்ல பலனைக் காணலாம்.




முடி வறட்சி நீங்க இயற்கையான முறைகள்


இயற்கையாகவே முடியில் ஈரப்பசை உள்ளது. அதிக இரசாயனம் உள்ள ஷாம்பூ பயன்படுத்துவதால் அந்த ஈரப்பசை நீங்கி முடி வறண்டு விடுகிறது. சில நேரம் அதிக வெயிலில் அலைவதால் முடியின் ஈரப்பசை குறைந்து வறண்டு விடுகிறது. வயதும் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது. வயது கூடும் பொழுது முடியின் ஈரப்பசை குறைய ஆரம்பிக்கிறது.
அதிகமாக இரசாயன ஷாம்பூ பயன்படுத்துவதை குறைக்க வேண்டும். தினமும் பயன்படுத்தினால் அதனை குறைத்து குளிக்கும் போது வாரம் இருமுறை மட்டும்  ஷாம்பு போட்டு குளிக்கலாம்.
வாரம் ஒருமுறை எண்ணெய் குளியல் எடுப்பதால் முடியின் வறட்சி நீங்குகிறது. நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் எடுத்து வெதுவெதுப்பாக சுட வைக்க வேண்டும். அதிகம் சூடு படுத்தக் கூடாது. அது கூந்தலில் வேர்க்கால்களை பாதிக்கும்.

 மிதமான சூட்டில் எண்ணையை தலையில் தேய்த்து மசாஜ் செய்து தலையில் ஒரு துண்டைக்கட்டிக் கொள்ள வேண்டும். அரை மணி நேரம் கழித்து மிதமான இரசாயனம் உள்ள ஷாம்பூ அல்லது இயற்கை ஷாம்பு பயன்படுத்தி தலைக்கு குளித்து வந்தால் முடி வறட்சி நீங்கி கேசம் பொலிவு பெறும்.


💟இரண்டு முட்டைகளை எடுத்துக் கொண்டு அதில் உள்ள மஞ்சள் கருவைத் தனியே எடுத்து நன்கு கலக்கிக்கொள்ள வேண்டும். அதனுடன் 3 ஸ்பூன் நீர் சேர்த்து கலக்கி தலையில் தேய்த்து முப்பது நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் தலைக்குக் குளிக்க வேண்டும். இவ்வாறு வாரம் ஒருமுறை செய்தால் தலையின் வறட்சி நீங்கி முடி பளபளப்பாகும்.

💟1 முட்டை , ஒரு ஸ்பூன் தயிர், ஒரு ஸ்பூன் தேன் எடுத்துக்கொள்ள வேண்டும். 1 முட்டையை நன்கு கலக்கி கொள்ள வேண்டும். அதனுடன் ஒரு ஸ்பூன் தயிர் மற்றும் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ள வேண்டும். இந்த கலவையை தலைக்குத் தேய்த்து இருபது நிமிடங்கள் கழித்து தலைக்கு ஷாம்பூ போட்டு குளிக்க வேண்டும். இதனை வாரம் ஒருமுறை செய்து வந்தால் முடி வறட்சி கண்டிப்பாக நீங்கும்.


💟தேங்காய் எண்ணெய் ஒரு ஸ்பூன் மற்றும் தேன் ஒரு ஸ்பூன் சேர்த்து நன்கு கலக்கிக்கொள்ள வேண்டும். இந்த கலவையை தலையில் தேய்த்து முப்பது நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் தலைக்குக் குளிக்க வேண்டும். இவ்வாறு வாரம் ஒருமுறை செய்தால் தலையின் வறட்சி நீங்கி முடி பளபளப்பாகும்.

💟3 ஸ்பூன் தயிர் மற்றும் 4  ஸ்பூன் கற்றாளை ஜெல் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். அந்த கலவையை தலையின் மேற்பரப்பு மற்றும் தலை முடியின் வேர் பகுதியிலும் படுமாறு தேய்த்து அரை மணிநேரம் கழித்து தலைக்கு ஷாம்பூ போட்டு குளிக்க வேண்டும். வாரம் ஒருமுறை இந்த முறையை பின்பற்றினால் முடி வறட்சி நீங்கும்.
💟தேங்காயை அரைத்து பால் எடுத்து அதனுடன் சிறிது கடலைமாவு சேர்த்து கலந்து அந்த கலவையை தலை முடி முழுவதும் தேய்த்து அரை மணி நேரம் கழித்து தலைக்கு ஷாம்பூ போட்டு குளித்து வந்தால் முடி வறட்சி பிரச்சினையில் இருந்து விடுபடலாம்.

💟ஒரு நன்கு பழுத்த வாழைப்பழத்தை எடுத்துக்கொண்டு அதனை நன்கு மசித்துக் கொள்ள வேண்டும். மசித்த வாழைப்பழத்தை முடியில் தேய்த்து ஒரு மணி நேரம் கழித்து தலைக்கு ஷாம்பூ போட்டு குளிக்க வேண்டும். வாரம் ஒருமுறை இவ்வாறு செய்தால் வறண்ட கூந்தலில் இருந்து விடுபடலாம்.

➡️ ஒரு அருமையான மருத்துவமுறை
4 ஸ்பூன் ஒலிவ் எண்ணையை எடுத்துக்கொண்டு அதனை தலையில் நன்கு தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். பின்பு அரை மணி நேரம் கழித்து தலைக்கு ஷாம்பூ போட்டு குளித்து வந்தால் முடி வறட்சி நீங்கும்.

💟இரண்டு ஸ்பூன் நெல்லிக்காய் பொடியுடன் இரண்டு ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து அந்த கலவையை தலையின் மேற்பரப்பிலிருந்து முடி நுனி வரை தேய்த்து பின்பு தலைக்கு ஷாம்பூ போட்டு குளிக்க வேண்டும். வாரம் ஒரு முறை இவ்வாறு செய்தால் முடி வறட்சி நீங்கி முடி பொலிவு பெறும்.

💟4 ஸ்பூன் வெந்தயத்தை எடுத்துக் கொண்டு இரவு முழுவதும் நீரில் ஊற வைத்து காலையில் அதை அரைத்து தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால் முடி வறட்சி நீங்குவதோடு உடலுக்கு குளிர்ச்சியையும் அளிக்கிறது.

💟வெங்காயத்தை சாறு எடுத்து ரொம்ப கொஞ்சமாக எடுத்து பட்டும் படாமலும் தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால் முடி வறட்சி நீங்குவதோடு தலையில் உள்ள பொடுகும் போகும். அதிகமாக தேய்க்க கூடாது. வெங்காய வாசம் விரும்பாதவர்கள் இந்த வெங்காய மருத்துவ முறையை அறவே தவிர்க்க வேண்டும். ஏனென்றால் குளித்த பின்னும் அன்றைய நாள் முழுவதும் வெங்காய வாசம் அடித்துக் கொண்டே இருக்கும்.

💟சுரைக்காயை நன்கு அரைத்து அதனை ஒரு சுத்தமான துணியில் போட்டு நன்கு பிழிந்து சாறு எடுக்க வேண்டும். அந்த சாறை தலை மற்றும் முடியின் வேர் பகுதியில் நன்கு தேய்த்து அரை மணி நேரம் கழித்து தலைக்கு ஷாம்பூ போட்டு குளிக்க வேண்டும். இவ்வாறு வாரம் ஒருமுறை செய்தால் முடி வறட்சி நீங்கும்.

கண் கருவளையம் மறைய எளிய மருத்துவ டிப்ஸ்..!

      அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்பது பழமொழி. நமது உடலில் உள்ள சத்து குறைபாடு மற்றும் நோய்கள் போன்றவற்றை நமது முகம் கண்ணாடி போல...