Tuesday, June 2, 2020

அழகான முகத்துல கரும்புள்ளி பிரச்சனையா, நிரந்தரமா சரியாக இதை செய்யுங்க!


முகத்தின் நிறம் மாநிறமாக இருந்தாலும், வெள்ளையாக இருந்தாலும், சிவப்பாக இருந்தாலும், கருப்பாக இருந்தாலும் அழகு குறைவதில்லை. ஆனால் முகத்தில் தோன்றும் சிறு குறைபாடுகள் கூட அழகை விகாரமாக்கி காட்டும்.
குறிப்பாக கரும்புள்ளிகள்.
கரும்புள்ளிகள் வருவதை உணர்ந்ததும் அவை மேலும் வராமல் தடுக்க முயற்சிக்க வேண்டும். அப்படியே அதை போக்கவும் உரிய பராமரிப்பு மேற்கொள்ள வேண்டும். ஒரு முறை செய்தாலே பலன் கிடைக்கும் என்று நினைக்கவேண்டாம். இயற்கை வழியில் முயற்சிக்கும் போது நிச்சயம் பொறுமை காக்க வேண்டும். ஆனால் பலனும் உண்டு.

➡️​மஞ்சள் + தேங்காயெண்ணெய் - கரும்புள்ளி நீங்க

தேங்காயெண்ணெயில் இருக்கும் ஆன்டி பாக்டீரியல் தன்மை முகத்தில் இருக்கும் கரும்புள்ளியை இலேசாக்கி மறைய செய்கிறது. மேலும் கூடுதலாக வேறு எங்கும் பரவாமலும் காக்க உதவுகிறது.
⏩️⏩️எப்படி பயன்படுத்துவது
சுத்தமான தேங்காயெண்ணெய் ஒரு டீஸ்பூன் எடுத்து அதனுடன் கால் டீஸ்பூன் அளவு விரலி மஞ்சள் பொடியை சேர்த்து பேஸ்ட் போல் குழைக்கவும். அதை கரும்புள்ளிகள் இருக்கும் இடத்தில் வட்ட வடிவில் தேய்க்கவும். பிறகு 20 நிமிடங்கள் கழித்து முகத்தை குளிர்ந்த நீரில் கழுவவும்.
முகத்தில் அநேக இடங்களில் கரும்புள்ளிகள் இருப்பதை உணர்ந்தால் முகம் முழுக்க தடவி மசாஜ் செய்யலாம். எண்ணெய் பசை இருப்பவர்கள் அந்த இடத்தில் மட்டும் செய்யலாம். இதை தொடர்ந்து செய்துவந்தால் 15 நாட்களில் குறைவதை நன்றாகவே உணரமுடியும்.
➡️​ஆப்பிள் சீடர் வினிகர் - கரும்புள்ளிகள் நீங்க
சிட்ரஸ் தன்மை நிறைந்த ஆப்பிள் சீடர் வினிகரை கரும்புள்ளிகளை போக்க கூடிய குணங்களை கொண்டவை. இதை பயன்படுத்துவதற்கு முன்பு ஆப்பிள் சீடர் வினிகர் தரமானதா என்பதை பரிசோதித்து கொள்ளுங்கள்.
⏩️⏩️எப்படி பயன்படுத்துவது
ஆப்பிள் சீடர் வினிகரை பயன்படுத்தும் போது பலரும் செய்யும் தவறு அப்படியே சருமத்தில் உபயோகிப்பதுதான். இவை சமயங்களில் சருமத்தில் எரிச்சலை உண்டாக்கிவிடும் என்பதால் நேரடியாக பயன்படுத்த கூடாது. இரண்டு டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகருடன் இரண்டு டீஸ்பூன் தண்ணீர் கலக்கவும்.
இதை முகத்தில் டோனர் போன்று சுத்தமான பஞ்சில் தொட்டு முகம் முழுக்க ஒற்றி எடுங்கள். குறிப்பாக கரும்புள்ளி இருக்கும் இடங்களில். பிறகு 20 முதல் 30 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவினால் பலன் கிடைக்கும். தினமும் காலை மாலை இரண்டு வேளையும் இப்படி செய்து வரலாம். இதை டோனராக பயன்படுத்தும் போது வேறு டோனர் பயன்படுத்த வேண்டாம்.

➡️​ஜாதிக்காய் பொடி - கரும்புள்ளிகள் நீங்க

ஜாதிக்காய் தரும் நன்மைகள் குறித்து பல முறை படித்திருக்கிறோம். நாட்டு மருந்து கடைகளில் விற்கும் ஜாதிக்காய் பொடியை வாங்கி பயன்படுத்தலாம். ஜாதிக்காய் எண்ணெயும் கிடைக்கும் என்றாலும் பொடி உபயோகிக்க எளிதாக இருக்கும்.
⏩️⏩️எப்படி பயன்படுத்துவது
தேவையான அளவு ஜாதிக்காய் பொடியை நீரில் குழைத்து பேஸ்ட் போல் சற்று இறுக்கமாக கலக்குங்கள். இதை முகம் முழுக்கவோ அல்லது முகத்தில் கரும்புள்ளிகள் இருக்கும் இடத்திலோ வட்ட வடிவில் தேய்த்து மிதமாக மசாஜ் செய்து விடுங்கள். பிறகு அவை காய்ந்ததும் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவ வேண்டும். தினம் ஒருமுறை இதை செய்தால் கரும்புள்ளிகள் நிரந்தரமாக மறையும். சற்று பொறுமை வேண்டும். அவை மறையும் வரை பயன்படுத்த வேண்டும்.

➡️​கொத்துமல்லி - கரும்புள்ளிகள் மறைய

மேற்கண்ட பொருள்கள் இல்லாவிட்டாலும் கொத்துமல்லி இல்லாமல் இருக்காது. பச்சைபசேலென்று இருக்கும் கொத்துமல்லி தழைகள் முகத்தில் கரும்புள்ளிகளை போக்குவதோடு இளமையாகவும் வைத்திருக்கும்.கொத்துமல்லி போன்று வெந்தயக்கீரை, புதினாவையும் பயன்படுத்தலாம்.
⏩️⏩️எப்படி பயன்படுத்துவது
கொத்துமல்லித் தழையை நீர்விடாமல் மைய அரைத்து அதன் சாறை பிழிந்து சிட்டிக விரலி மஞ்சள் தூளை சேர்த்து குழைக்கவும். இதை முகம் முழுக்க தடவி 30 நிமிடங்கள் கழித்து உலர்ந்ததும் முகத்தை கழுவுங்கள். 15 நாட்கள் கழித்து பார்த்தால் கரும்புள்ளிகளை தேட தொடங்குவீர்கள். அவ்வளவு பலன். கூடுதல் போனஸாக முகத்தின் இளமையும் அதிகரித்திருக்கும்.


➡️​சந்தனம் + எலுமிச்சை+ தயிர் - கரும்புள்ளிகள் மறைய

சந்தனம் கோடையிலும் முகத்தை குளுகுளுவென வைத்திருக்க உதவக்கூடியது. சந்தனம் போல் மேனி என்று சொல்லும் வகையில் சந்தனம் சருமத்துக்கு பயன் தரும். முகத்தில் அழற்சி காரணமாக நீண்ட நாட்களாக தங்கியிருக்கும் கரும்புள்ளியை போக செய்ய சந்தனம் பெருமளவு உதவுகிறது.
⏩️⏩️எப்படி பயன்படுத்துவது
சந்தனத்தை பொறுத்த வரை அப்படியே முகம் முழுக்கவே பயன்படுத்தலாம். நாட்டு மருந்து கடைகளில் தரமான சந்தனபொடி வாங்கி பயன்படுத்தலாம். சந்தனபொடியை தயிர் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து பேஸ்ட் போல் குழைத்து முகம், மற்றும் கழுத்து பகுதியிலும் தடவி கொள்ளலாம். இவை உலர்ந்ததும் வெதுவெதுப்பான நீரில் கழுவினால் கரும்புள்ளிகளும் நீங்கும். முகமும் பளிச்சென்று இருக்கும்.

உள்ளங்கை தோல் உரியுதா? வீட்ல இருக்கிற பொருளை கொண்டு சரிசெய்யலாம்!


வறட்சி என்பது சருமத்துக்கு மட்டும் அல்ல. நம்முடைய உள்ளங்கைகளுக்கும் அவ்வபோது உண்டாவதுதான். இதனால் அழகான விரல்கள் பார்க்கவே மோசமானதாக இருக்கும்..
வறட்சியான உள்ளங்கை வலியை உண்டாக்குவதில்லை. ஆனால் ஒருவித எரிச்சலையும், அழகான வெண்டை பிஞ்சு விரல்களின் அழகையும் கெடுத்துவிடுகிறது. பருவநிலை மாற்றத்தின் போது எப்போதாவது இத்தகைய தோல் உரிதல் உண்டானாலும் கூட அடிக்கடி ஏற்பட்டால் அவை பராமரிப்பின்மையையே காண்பிக்கிறது.
சில நேரங்களில் நீண்ட நேரம் தண்ணீரில் நனைந்திருந்தாலும் இத்தகைய பிரச்சனை உண்டாகும். சருமத்தில் ஈரப்பதம் குறையும் போது சருமம் வறட்சிக்குள்ளாவதை போன்று உள்ளங்கைகளிலும் வறட்சியை சந்திக்கின்றன. இதனால் உள்ளங்கையில் நமிச்சல், தோல் உரிதல், வெடிப்பு போன்றவை உண்டாகும். வீட்டிலிருக்கும் பொருள்களை கொண்டு உங்களால் இதை குணப்படுத்திவிட முடியும். எப்படி செய்வது பார்க்கலாம்.

⏩️​பால்
சருமத்துக்கு பால் இயற்கையான மாய்சுரைசராக செயல்படுகிறது. உள்ளங்கை தோல் உரிதல் இருக்கும் போது அடிக்கடி கைகளை ஈரப்பதமாக்கி கொள்வதன் மூலம் தோல் உரிதலை தடுத்து நிறுத்த முடியும். நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்..
பால் - 5 டீஸ்பூன்
தேன் - 2 டீஸ்பூன்
பாலை இலேசாக சூடு செய்து அகலமான குழியுள்ள தட்டில் ஊற்றி அதில் தேன் சேர்த்து கலக்குங்கள். சற்று வெதுவெதுப்பாக இருக்கும் போது கைகளை அந்த நீரில் முக்கிவிடுங்கள். சூடு ஆறும் வரை கைகளை அதில் மூழ்கவிடுங்கள். பாலில் இருக்கும் சத்து உங்கள் உள்ளங்கைகளை மிருதுவாக மாற்றும். தினமும் இரண்டு அல்லது மூன்று முறை இதை செய்தாலே மாற்றம் நன்றாக இருக்கும்.

⏩️​வைட்டமின் இ ஆயில்

வறட்சியான உள்ளங்கைக்கு தேவை ஈரப்பதமும் சிறந்த மாய்சுரைசரும் தான். இவை தொடர்ந்து கிடைத்தாலே உள்ளங்கை தோல் உரிதல் முற்றிலும் குறையும் கூடும். நீங்கள் ஆயில் பயன்படுத்த நினைத்தால் செய்ய வேண்டியது இதுதான்.
வைட்டமின் இ ஆயில்- 4 டீஸ்பூன்
வெதுவெதுப்பான நீர் - தேவைக்கு
வெதுவெதுப்பான நீரில் உங்கள் இரண்டு உள்ளங்கைகளையும் 10 நிமிடங்கள் வைத்திருக்கவும். பிறகு கைகளை சுத்தமான மெல்லிய துண்டில் மென்மையாக துடைக்கவும். சற்று உலர்ந்ததும் வைட்டமின் இ ஆயில் கொண்டு இலேசாக மசாஜ் செய்யவும். உள்ளங்கை அழுத்தம் ஆரோக்கியத்துக்கும் நல்லது. வைட்டமின் இ ஆயிலுக்கு பதிலாக ஆலிவ் எண்ணெயும் கூட பயன்படுத்தலாம். இந்த ஆயில் மசாஜ் உள்ளங்கையை நீண்ட நேரம் ஈரப்பதமாக வைத்து வறட்சி உண்டாவதை தடுக்கும்.

⏩️கற்றாழை

கற்றாழைசாறு போன்று வழவழப்பையும் மென்மையையும் இயற்கையாக தரும் பொருள் வேறு எதுவுமில்லை. கற்றாழை ஜெல் அல்லது கற்றாழையை அப்படியே பயன்படுத்தலாம். இவை கூடுதலாக உள்ளங்கையில் இருக்கும் அழுக்கையும் வெளியேற்றும் தன்மை கொண்டது. நீங்கள் கற்றாழையை தேர்வு செய்தால்
கற்றாழை மடலாக இருந்தால் அதன் தோலை சீவி அதை தண்ணீரில் போட்டு பத்து நிமிடங்கள் ஊறவிடவும். கற்றாழையில் இருக்கும் மஞ்சள் திரவம் வெளியேறிவிடும். பிறகு அதில் இருக்கும் நுங்கு பகுதியை எடுத்து கைகளில் மசாஜ் செய்யவும். இரவு படுக்கும் போது செய்துகொள்ளலாம். ஜெல்லாக இருந்தாலும் அப்படியே பயன்படுத்தலாம். மறுநாள் காலை வெதுவெதுப்பான நீரில் 5 நிமிடங்கள் உள்ளங்கை வைத்து எடுத்து உலரவிடலாம்.

⏩️வெள்ளரிக்காய்

வைட்டமின் சி, பி, கே, பொட்டாசியம் மற்றும் நீர்ச்சத்து நிறைந்த வெள்ளரிக்காய் சருமத்துக்கு பல நன்மைகளை அளிக்கிறது. வறட்சியான உள்ளங்கைக்கு நீர்ச்சத்து தாரளமாக கிடைக்க வேண்டுமெனில் நீங்கள் வெள்ளரிக்காயை பயன்படுத்தலாம். இதனால் அதிகப்படியான தோல் உரிதலில் தோல் சிவப்பு, தடித்தல் இருந்தாலும் எரிச்சல் உணர்ந்தாலும் அவை குறையும்.

வெள்ளரி துண்டுகள் - 6
வெள்ளரிக்காயை வட்ட வடிவில் வெட்டி உடனே அதை உள்ளங்கையில் வட்டவடிவமாக தேய்த்து மசாஜ் செய்யுங்கள். உள்ளங்கை முழுவதும் விரல்கள் இடுக்கு வரை ஒரு உள்ளங்கைக்கு 5 நிமிடங்களாவது செலவிடுங்கள். இவை தோல் உரிதலை கட்டுப்படுத்தி அழகிய தோற்றத்தை கொடுக்க உதவும். தோலை கெட்டிப்படுத்தும்.

⏩️ஓட்ஸ்

ஓட்ஸை பொடித்து வெதுவெதுப்பான நீரில் கலந்து 3 நிமிடங்கள் வரை ஊறவிட்டு பிறகு நன்றாக கலக்க வேண்டும். ஓட்ஸ் கலக்கிய பிறகு நீரின் கொழகொழப்பை உணர முடியும். இதை அகலமான பாத்திரத்தில் ஊற்றி உள்ளங்கையை அதில் மூழ்க விடவும். பிறகு கைகளை துடைத்து உலர்ந்தது மாய்சுரைசர் தடவி உள்ளங்கைகளை ஈரப்பதமாக்கவும். தோல் உரிதல் பிரச்சனை அதிகமாக இருந்தால் தினமும் காலை, மாலை இரண்டு வேளையும் செய்துவரலாம். தோல் உரிதல் படிப்படியாக குறையும்

⏩️வெந்நீர்

உள்ளங்கை தோல் உரிதலை எந்த பொருள்களும் இன்றி வெதுவெதுப்பான நீரை கொண்டே விரட்டவும் செய்யலாம். இவை எளிமையான பராமரிப்பும் கூட. அகலமான பாத்திரத்தில் வெதுவெதுப்பான நீர் ஊற்றி (தேவையெனில் இரண்டு துளி எலுமிச்சை சாறு சேர்த்துகொள்ளலாம்) அதில் 10 நிமிடங்கள் உள்ளங்கைகளை வைத்து எடுங்கள். பிறகு கைகளை மிதமாக துடைத்து உலர்ந்ததும் மாய்சுரைசர் பயன்படுத்துங்கள்.
தினமும் உங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் இதை செய்துவந்தால் தோல் உரிதல் பிரச்சனை வேகமாக நீங்கும். அதே நேரம் நீங்கள் பராமரிப்போடு அதிக அளவு தண்ணீர் குடிக்கவும் மறந்துவிடாதீர்கள்.

முகப்பருக்களை நீக்க என்ன செய்யணும் தெரியுமா?


முகம் பளிச்சென்று இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டால் மட்டும் போதுமா. அதற்கு உரிய பராமரிப்பு இருந்தால் தான் மாசு மருவற்ற சருமத்தைப் பெற முடியும். குறிப்பாக முகப்பருக்களை...
முகப்பருக்கள் பெண்களை மட்டும் அல்ல ஆண்களையும் பாடாய்ப்படுத் துகிறது என்றே சொல்லலாம். முகப்பருக்களைக் கட்டுப்படுத்துவதிலும் மேலும் அதிகரிக்காமல் தடுப்பதிலும் அதிக நேரங்களைச் செலவிடுபவர்கள் நம்மில் பலர் உண்டு.

அழகான முகத்தில் முதன் முதலில் முகப்பருக்களைப் பார்த்ததுமே சிலர் அதைக் கிள்ளி எறிய முயற்சி செய் வார்கள். இதனால் பருக்கள் அதிகமாகுமே தவிர குறையாது. மேலும் சமயங்களில் அவை கருப்பு நிற தழும் பாக மாறி முகத்தின் நிறத்தையும் பொலிவையும் கெடுத்துவிட வாய்ப்புண்டு.
அழகு குறித்த எந்த சிகிச்சையும் தொடங்குவதற்கு முன்பு அது எதனால் வருகிறது என்கிற காரணத்தை முத லில் கண்டறிந்து அதன் பிறகு அதற்கேற்ப தீர்வு காண்பது பலனையும் அதிகமாக கொடுக்கும். அந்த வகை யில் முகப்பருக்கள் வருவதற்கான காரணத்தை அறிந்து அதை எளிதில் போக்குவதற்கான வழிமுறைகளை யும் காணலாம்.
முகப்பருக்களுக்கு காரணம்
💎எண்ணெய்ப் பசை சருமம் உள்ளவர்களுக்கு இயல்பாகவே முகப்பரு பிரச்சனை அவ்வப்போது தலை தூக்கும். இவை தவிர வெளியில் செல்லும் போது முகத்தில் படியும் தூசுகள் சரும துளைகளை அடைத்து பருக்களை உண்டாக்கிவிடும்.
💎பருக்களைக் கிள்ளி அல்லது கைகளால் உடைக்கும் போது அதிக அளவு பருக்கள் வந்துவிட வாய்ப்புண்டு என் பதால் இயன்ற அளவில் பருக்களைத் தொடாமல் அதை நீக்குவதற்கு முயற்சிப்பதுதான் சிறந்த வழி.
💎பொடுகுத்தொல்லை, மலச்சிக்கல், அடுத்தவர் உபயோகித்த சோப், டவல், படுக்கையை பகிர்தல், சுகாதார மில்லாத நீர், 
💎அதிக கெமிக்கல் நிறைந்த க்ரீம்கள் பயன்படுத்துவது, மன அழுத்தம், செரிமான கோளாறு, முகத்தில் படியும் அதிகப்படியான அழுக்கு, எண்ணெய் அதிகம் நிறைந்த உணவுகள், போதிய நீர் குடிக்காதது, 💎இளம்பெண்களுக்கு மாதவிடாய்க் காலங்களில் உண்டாகும் ஹார்மோன் மாற்றங்கள் போன்றவற்றை இதற்கு காரணமான சொல்லலாம்.
இவற்றில் ஒன்று உங்களிடம் இருந்தாலும் கண்டிப்பாக முகப்பருக்களைக் கட்டுப்படுத்துவது கடினமாக இருக் கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இப்போது முகப்பருவை விரட்டுவது எப்படி என்பதைப் பார்க்கலா மா?

⏩️சுத்தமான தண்ணீரால் கழுவுங்கள்
வெளியில் சென்று வந்த பிறகுதான் முகத்தை கழுவ வேண்டும் என்றில்லை. வீட்டில் இருந்தாலும் தினமும் ஐந்து முறையாவது சுத்தமான நீரில் முகத்தை கழுவுங்கள். இது முகத்தில் இருக்கும் அழுக்கை நீக்கி பருக்கள் வராமல் தடுக்கும். சரும துவாரங்களுக்குள் அழுக்குகள் சேராமல் இறந்த செல்களை வெளிக்கொண்டுவரும

⏩️தக்காளி

தக்காளி தங்கம் போல் சருமத்தை வைத்திருக்கும் என்று சொல்லலாம். பழுத்த தக்காளியைக் கூழ்போல் மசித்து கொள்ளவும். சுத்தமான நீரில் முகத்தைக் கழுவவும். மசித்த தக்காளி கூழை எடுத்து முகத்தில் கீழி ருந்து மேல் நோக்கி மசாஜ் செய்து குளிர்ந்த நீரால் முகம் கழுவினால் முகப்பருக்கள் மறையும். மேலும் முகப் பருக்கள் வருவதைத் தடை செய்யும்.

⏩️வாழைப்பழத்தின் தோலே போதும்
வாழைப்பழத்தின் தோலுடன் பசுவின் பாலேடு அல்லது தயிர் சேர்த்து மிக்ஸியில் மைய அரைத்து பரு உள்ள இடத்தில் தடவி வரவும். தொடர்ந்து செய்யும் போது பருக்கள் வேரோடு உதிர்ந்துவிடும். கருமை நிறமும் தங் காது.

⏩️வெள்ளரிக்காய்
வெள்ளரிப்பிஞ்சை மிக்ஸியில் அரைத்து பருக்கள் உள்ள இடத்தில் பூசி காய்ந்ததும் குளிர்ந்த நீரால் கழுவி னால் பருக்களின்றி முகம் பளிச்சென்றி மின்னும். வெள்ளரிக்காயுடன் தக்காளி அல்லது பப்பாளிப் பழம் சேர்த்தும் மசித்து போடலாம்.

⏩️எலுமிச்சைச்சாறு
எலுமிச்சையை சாறு பிழிந்து தண்ணீர் விடாமல் முகப்பரு உள்ள இடத்தில் தடவி நன்றாக காயந்ததும் ஐஸ் கட்டிகள் வைத்து மசாஜ் செய்து அதன் பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவினால் முகப்பருக்கள் ஓடி விடும்.
⏩️பாசிப்பயறு மாவு

பாசிப்பயறு மாவில் பசும்பால் கலந்து நன்றாக குழைத்து பரு உள்ள இடத்தில் தடவி காயவைத்து குளிர்ந்த நீரால் முகம் கழுவினால் முகத்தில் இருக்கும் பருக்கள் நீங்கிவிடும். பாசிப்பயறு மாவுடன் கற்றாழை நுங்கை யும் பயன்படுத்தலாம். முகத்துவாரங்களில் இருக்கும் அழுக்குகளை முற்றிலும் நீக்கி முகப்பருக்களைத் தடுப் பதோடு முகத்தை பளிச்சென்றும் வைத்திருக்க உதவும்.
⏩️கற்றாழையும் மஞ்சளும்.


கற்றாழை மருத்துவத்துறையில் மட்டுமல்ல அழகுத் துறையிலும் முக்கிய இடம் பெறுகிறது. இதில் இருக்கும் என்சைம்கள் தோலுக்கு நெகிழ்வுத்தன்மையைக் கொடுக்கிறது. சரும துவாரங்களில் இருக்கும் அழுக்கு, கிருமிகளை வெளியேற்றி பளிச் சருமத்துக்கு துணைபுரிகிறது.
கற்றாழை மடலின் உள்ளே இருக்கும் நுங்கு போன்ற சதைப்பகுதியை எடுத்து சுத்தமான மஞ்சள் தூளை சேர்த்து நன்றாக குழைத்து பருக்கள் மீது தடவி வந்தால் எரிச்சல் மிகுந்த பருக்களாக இருந்தாலும் எரிச்சலைக் குறைத்து குளிர்ச்சியை உண்டாக்கும்.
வறண்ட சருமத்தில் இருக்கும் பருக்கள் மறைவதோடு சருமமும் மிருதுவாகும். பருக்கள் மறைந்த பிறகும் அந்த இடத்தில் கருப்பு நிறம் வராமல் முகத்தின் அழகை பாதுகாக்கும். மாதவிடாய்க் காலங்களில் மட்டும் வரும் முகப்பருவைக் கட்டுப்படுத்தவும் அதிகரிக்காமல் இருக்கவும் இதனைப் பயன்படுத்தலாம்.

⏩️தேன்

சுத்தமான தேனை சுத்தமான மஞ்சள் தூள் சேர்த்து குழைத்து பருக்களின் மீது தடவி வந்தால் பருக்களில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றி முகப்பருக்களை ஒன்றும் இல்லாமல் செய்துவிடும்.
தேனுடன் பேக்கிங் சோடாவும் கலந்து குழைத்து போடுவதுண்டு. ஆனால் பின் விளைவை உண்டாக்காத மஞ் சள் தூளே சிறந்தது என்கிறார்கள் அழகுக்கலை நிபுணர்கள். தேனுடன் க்ரீன் டீ, ஆப்பிள் சீடர் வினிகரும் கலந்து பருக்கள் மீது தடவலாம்.


➡️➡️குறிப்பு
பருக்களின் மீது தடவும் போது சுத்தமான பஞ்சை சுத்தமான தண்ணீர் அல்லது ரோஸ் வாட்டரில் நனைத்து இலேசாக மசாஜ் செய்தபடி வைக்க வேண்டும். அழுத்தமில்லாமல் கட்டை விரலில் மிதமாக அழுத்தி வட்ட வடிவில் மசாஜ் செய்யும் போது பருக்களில் இருக்கும் அழுக்குகள் அனைத்தும் வெளியேறும்.
மேலும் முகத் தில் மசாஜ் செய்யும் போது கீழிருந்து மேல் நோக்கி தேய்த்து மசாஜ் செய்வது தான் சிறந்த பயிற்சியாக இருக்கும். அப்படி செய்யும் போது சருமங்கள் விரைவில் சுருக்கமில்லாமல் இருக்கும்.

முகப்பரு பிரச்சனையைத் தொடக்கத்தில் சந்திக்காவிட்டால் நாளடைவில் அதிகரித்துவிட வாய்ப்புண்டு. அத னால் தொடக்கத்திலேயே சரும அழுக்கை நீக்க மாதம் ஒரு முறை அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை ஆவிபிடிப்பது நல்லது.

சருமத்தில் இருக்கும் இறந்த செல்கள் மற்றும் அழுக்குகளைப் போக்குவதில் முகத்துக்கு ஆவிப்பிடிப்பது முக் கிய இடம் பிடிக்கிறது. மாதம் ஒருமுறையேனும் ஆவிப்பிடிப்பதை பழக்கமாக்கி கொண்டால் முகத்துவாரங்க ளில் இருக்கும் அழுக்குகள் வெளியேறும் சருமத்தில் இறந்த செல்கள் தளர்ந்திருக்கும். பருக்கள் வேரோடு நீங்குவதோடு மேலும் பருக்கள் வராமலும் தடுக்கும்.
முகத்தைப் பராமரிக்க இந்த குறிப்புகள் மட்டும் போதாது. எண்ணெய் பொருள்களைத் தவிர்ப்பதும் நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகளும், பழங்களும், அன்றாடம் போதுமான தண்ணீரும் எடுத்துக்கொள்வதும் முகப்பருவை வராமல் தடுக்கும்.

முகப்பரு இல்லாத மின்னும் சருமத்துக்கு இவை மட்டுமே போதும் என்கிறார்கள் அழகுக்கலை நிபுணர்கள்.

கண் கருவளையம் மறைய எளிய மருத்துவ டிப்ஸ்..!

      அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்பது பழமொழி. நமது உடலில் உள்ள சத்து குறைபாடு மற்றும் நோய்கள் போன்றவற்றை நமது முகம் கண்ணாடி போல...