Tuesday, May 5, 2020

நாள் கணக்கில் மாதவிடாய் தள்ளிப் போகிறதா?


 இந்த வீட்டுக் குறிப்பை செஞ்சு பாருங்க..!

மாதவிடாய் தள்ளிப் போவது பெண்களுக்கு பொதுவானப் பிரச்னைதான் என்றாலும் அதை கவனிக்காமல் விடுவது  ஆபத்தை உண்டாக்கும். இப்படி ஒவ்வொரு மாதமும் நாள் கணக்கில் தள்ளிப்போவதைத் தடுக்க இந்த வீட்டுக் குறிப்புகளைச் செய்து பாருங்கள்.

கொத்தமல்லி : கொத்தமல்லி மாதவிடாய்க்குப் பாரம்பரியமாகப் பயன்படுத்தப்பட்டு வரும் மருத்துவம். 3 கிராம் கொத்தமல்லியை 150 ml தண்ணீரில் கொதிக்க வைத்து தினமும் இரண்டு முறை குடித்தால் மாதவிடாய் நாட்கள் சீராகும். இதேபோல் சீரகத்தையும் கொதிக்க வைத்துக் குடிக்கலாம்.

பப்பாளி : இது கருப்பையைத் தூண்டி மாதவிடாய் வருவதற்கு உதவும். பப்பாளியை அப்படியே உண்டால் ஈஸ்ட்ரோஜின் ஹார்மோனைத் தூண்டு மாதவிடாயைத் தூண்டும். இதற்குத் தினமும் இரண்டு வேளை பப்பாளி உண்ணுங்கள்

இஞ்சி : இஞ்சி டீ மிகவும் சக்தி வாய்ந்த மருத்துவ முறை எனலாம். இஞ்சுடன் சிறிதளவு கொத்தமல்லித் தழை சேர்த்துக் கொதிக்க வைத்து அருந்தினால் கருப்பை சுற்றிலும் வெப்பம் அதிகரிக்கும். பின் இரத்த போக்கும் தடையின்றி வரும். தேவைப்பட்டால் டீயில் தேன் கலந்துகொள்ளலாம். வெறும் வயிற்றில் மாதவிடாய்க்கு 3 நாட்களுக்கு முன்னரே குடிக்கத் துவங்குங்கள்.

வெந்தையம் : வெந்தையத்தைத் தண்ணீரில் கொதிக்க வைத்துக் குடித்தால் மாதவிடாய் தள்ளிப் போவது நிற்கும். வெந்தையத்தை இரவு ஊற வைத்து மறுநாள் மென்று விழுங்கலா அல்லது அரைத்து தண்ணீரில் கரைத்தும் குடிக்கலாம். இதே முறையைப் பயன்படுத்திச் சோம்பும் உண்ணலாம்.

வைட்டமின் C : இது உடலின் ஈஸ்ட்ரோஜினை உற்பத்தி செய்யக் கூடியது. இதனால் மாதவிடாய் இரத்த போக்கும் எதிர்பார்த்த தேதியில் சரியாக வரும். எனவே வைட்டமின் C நிறைந்த காய்கறிகள், பழங்களை உண்ணலாம். உதாரணமாக சிட்ரஸ் பழங்கள், கிவி , தக்காளி, புரக்கோலி என தினசரி உணவோடு உண்ணலாம்.

இப்படி வெல்லம் , மஞ்சள், பேரிச்சை . மாதுளை , காரட் , பாதாம், அன்னாசி, திராட்சை, முட்டை, தயிர் போன்ற புரோட்டீன் நிறைந்த உணவுகள், கருப்பு எள், கருஞ் சீரகம் என உண்டு வந்தாலும் மாதவிடாய் தள்ளிப் போவதைத் தடுக்கலாம்.

குறிப்பு : மேலே குறிப்பிட்டுள்ள குறிப்புகள் அனைத்தையும் மாதவிடாய் வரும் நாட்கள் தள்ளிப் போனாலோ அல்லது மாதவிடாய் நாட்களுக்கு முன்னரே வர வேண்டுமெனில் 10 அல்லது 5 நாட்களுக்கு முன்னரே செய்ய வேண்டும். சீரான முறையில் தடையின்றி இரத்த போக்கு வேண்டுமென்றாலும் இந்தக் குறிப்புகளை மூன்று நாட்களுக்கு முன்னரே செய்யலாம். இந்தக் குறிப்புகளைச் செய்தும் மாதவிடாய் வரவில்லை, மாதம் கணக்கில் தள்ளிப் போகிறதெனில் கட்டாயம் மருத்துவரை அணுகவும்.



கண் கருவளையம் மறைய எளிய மருத்துவ டிப்ஸ்..!

      அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்பது பழமொழி. நமது உடலில் உள்ள சத்து குறைபாடு மற்றும் நோய்கள் போன்றவற்றை நமது முகம் கண்ணாடி போல...