Sunday, June 7, 2020

வெள்ளரிக்காய் ஃபேஸ் பேக் தெரியும், எந்த சருமத்துக்கு எப்படி பயன்படுத்தணும்னு தெரிஞ்சுக்கங்க!


எண்ணெய்பசை முதல் வறட்சி சருமம் வரை அனைவருமே முகத்தை நீரேற்றமாக வைத்துகொள்வது அவசியம்.

முகத்தின் வறட்சியை தடுக்க ஃபேஸ் பேக் பயன்படுத்துபவர்கள் பருவ நிலைக்கேற்ப பயன்படுத்தவேண்டும். தற்போது கோடைக்காலம் என்பதால் முகத்தின் வறட்சியை போக்குவதோடு அவை முகத்தை நீரேற்றமாகவும் வைக்க உதவும் கோடையில் உடலை குளிர்விக்க உதவும் வெள்ளரிக்காய் சருமத்தையும் குளிரப்படுத்துகிறது. நார்ச்சத்து, கரோட்டின், வைட்டமின் சி, ஏ, போன்ற சத்துக்கள் கொண்டிருக்கிறது. இவை சருமத்தின் எரிச்சல், அரிப்பு, தடிப்பு போன்றவற்றை நீக்ககூடியது. 

கண்களின் கரும்புள்ளிகளை மறையச்செய்யகூடியது பெரும்பாலான குளிர்ந்த ஃபேஸ் பேக்குகளில் வெள்ளரிக்காயை மிக முக்கியமான பொருளாக பயன்படுத்தப்படுகிறது. எந்த சருமத்திற்கு சருமத்தில் இருக்கும் பிரச்சனைக்கு எப்படி எதனுடன் பயன்படுத்த வேண்டும் தெரிந்துகொள்வோம்.

➡️​முகம் ஃப்ரெஷ்ஷாக இருக்க - வெள்ளரிக்காய் ஃபேஸ் பேக்

வெள்ளரிக்காய் - பாதி அளவு,
கற்றாழை - தேவைக்கு
கற்றாழை முள்ளை நீக்கி மடலை எடுத்து ஜெல்லை மட்டும் வெளியே எடுத்து சாறாக்கவும். அதே போன்று வெள்ளரியை தோல் நீக்கி அரைக்கவும். இரண்டையும் கலந்து முகத்திலும் கழுத்துப்பகுதியில் தேய்க்கவும்.
பிறகு 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவி முகத்தை உலர வைக்கவும். இந்த வெள்ளரி ஃபேஸ் பேக் முகத்தை புத்துணர்ச்சியாக வைத்திருக்க உதவும். எல்லோரும் இந்த பேக் பயன்படுத்தலாம் ஆண்களும் கூட. முகம் சோர்வில்லாமல் ஃப்ரெஷ்ஷாக வைத்திருக்க உதவும்.


​➡️வறண்ட முகம் இருந்தால் - வெள்ளரிக்காய் ஃபேஸ் பேக்

கேரட் - பாதி அளவு
வெள்ளரிக்காய் - பாதி அளவு
வெண்ணெய் - 1 டீஸ்பூன்
கேரட்டை தோல் நீக்கி சாறு எடுக்கவும். அதே போன்று வெள்ளரிக்காயை தோல் நீக்கி அரைக்கவும் இந்த விழுதுடன் கேரட் சாறு வெண்ணெய் சேர்த்து நன்றாக கலக்கவும்.
இதை முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவி நன்றாக மசாஜ் செய்து உலரவிடவும் 30 நிமிடங்கள் கழித்து முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவி விடவும். வறண்ட முகத்தை நீரேற்றமாக வைத்திருக்க உதவும் இந்த பேக் வாரத்துக்கு இரண்டு நாட்களாவது செய்வது நல்லது.

​நிறம் மங்கிய முகம் - வெள்ளரிக்காய் ஃபேஸ் பேக்.

தேவை
தக்காளி பழுத்தது - 1
வெள்ளரிக்காய் - பாதி அளவு
தக்காளியை மசிக்கவும். வெள்ளரிக்காயை தோல் சீவி அரைத்து அதனுடன் தக்காளியை சேர்த்து நன்றாக கலந்து முகத்திலும் கழுத்திலும் தடவ வேண்டும். பிறகு வட்டவடிவத்தில் இரண்டு நிமிடம் மசாஜ் செய்யவேண்டும். இந்த கலவையை முகத்தில் 30 நிமிடங்கள் வரை ஊறவிட்டு பிறகு முகத்தை கழுவினால் முகத்தில் இருக்கும் கருமை நிறம் மறைந்து நிறம் மேன்மைப்படும். பிரகாசமான முகத்தை பெற இந்த பேக் வாரம் ஒருமுறை பயன்படுத்துங்கள்.

​பருக்கள் இருக்கும் முகம் - வெள்ளரிக்காய் ஃபேஸ் பேக்

வெள்ளரிக்காய் - பாதி அளவு,
முல்தானி மெட்டி பொடி - 1 டீஸ்பூன்
பன்னீர் - தேவைக்கு
வெள்ளரிக்காயை தோல் நீக்கி அரைத்து அதில் முல்தானி மிட்டி பொடி கலந்து நன்றாக மசிக்கவும். இதில் தண்ணீருக்கு பதிலாக பன்னீர் சேர்த்து கலந்து வைக்கவும். அதிகம் நீர்த்துபோகாமல் சற்று இறுக்கமாக இருக்க வேண்டும். அதை முகத்தில் தடவி அரைமணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகம் கழுவினால் முகத்தில் இருக்கும் பருக்கள் குறையும். வாரம் இருமுறை இந்த பேக் போடலாம்.

​எண்ணெய்பசை சருமத்துக்கு - வெள்ளரிக்காய் ஃபேஸ் பேக்


வெள்ளரிக்காய் - பாதி அளவு,
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்,
மஞ்சள் தூள்- அரை டீஸ்பூன்
வெள்ளரிக்காயை அரைத்து அதில் எலுமிச்சைசாறு, மஞ்சள் தூள் சேர்த்து கலக்கவும். இதை முகம் மற்றும் கழுத்துப்பகுதியில் தடவி 20 நிமிடங்கள் கழித்து முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இவை சருமத்திலிருக்கும் அதிக எண்ணெய் பசையை உறிஞ்சி சருமத்தை அழகாக்கும். வாரத்துக்கு இரண்டு முறை செய்யலாம்.

​சுருக்கம் இருப்பவர்கள் - வெள்ளரிக்காய் ஃபேஸ் பேக்

வெள்ளரிக்காய் -பாதி அளவு,
முட்டை - 1 (வெள்ளைகரு மட்டும்)
வெள்ளரிக்காயதோல் நீக்கி மசித்து அதில் முட்டையின் வெள்ளைக்கருவை மட்டும் தனியாக பிரித்தெடுத்து நன்றாக கலக்கவும். இதை முகம் மற்றும் கழுத்துப்பகுதியில் தடவி 30 நிமிடங்கள் கழித்து முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவலாம். இவை சருமத்தின் சுருக்கங்களை படிபடியாக போக்கும். வாரத்துக்கு இரண்டு நாள் இந்த பேக் பயன்படுத்தினால் போதுமானது.
வெள்ளரிக்காய் சருமத்துக்கு மிகவும் நன்மை செய்யகூடியது. ஆனால் எப்படி எதனுடன் பயன்படுத்த வேண்டும் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.

கண் கருவளையம் மறைய எளிய மருத்துவ டிப்ஸ்..!

      அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்பது பழமொழி. நமது உடலில் உள்ள சத்து குறைபாடு மற்றும் நோய்கள் போன்றவற்றை நமது முகம் கண்ணாடி போல...