Monday, April 20, 2020

உருளை கிழங்கு வய்ட்னிங் மேஜிக்


Pigmentation எனும் கருந்திட்டுகள் போக்கும் மேஜிக் பேக்.

வெயிலாலும் இர‌சாய‌ன‌ கார‌ணிக‌ளாலும் முக‌த்தில் தோன்றும் க‌ரும்திட்டுக‌ளை ப்ளீச்சிங் இல்லாம‌ல் இல‌குவில் ம‌றைய‌ செய்யும் இயற்கையான மாஜிக் பெக் ஐ ப‌ற்றி தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்.
உருளைகிழங்கு அவித்தது-1
எலுமிச்சை -1பாதி.
சோள மா -2தே க (corn  flour )
பசும்பால் /தேங்காய் பால் -3 தே. க
ஆலிவ் எண்ணெய் -1தே. க (வறண்ட சருமம் உள்ளவர்கள் மாத்திரம்.
புதினா or துளசி -3 இலைகள் (கட்டாயம் இல்லை. )

தோல் நீக்கிய உருளைகிழங்கை மற்ற பொருட்களுடன் சேர்த்து  துண்டுகள்  இல்லாமல் நன்றாக மசித்து கொள்ளவும். கிரைண்டர் மூலம் அரைத்தும் எடுக்கலாம்.

இதை ஒரு பாத்திரத்தில் போட்டு ஒரு வாரம் வரை பிரிட்ஜ் இல் வைத்து உபயோகிக்கலாம்.

இரவில் தூங்கும் முன் இந்த பேஸ்ட் ஐ பூசி 20 நிமிடம் காய  விட்டு  லேசான சுடுநீரால் கழுவி முகத்தை பருத்தி (காட்டன் )துணியால் துடைத்து விடவும்...
இதற்கு மேலால் இயற்கை கற்றாழை  சாறு or வெள்ளரி சாறு பூசி இரவு முழுவதும்  விட  முடியுமாயின்  மிக மிக விரைவில்  மாற்றத்தை காணலாம்.

பயன்கள் :
#கருந்திட்டுகள் தழும்புகளை மறைய செய்யும்.
#even tone எனப்படும் முகம் முழுதும் மாசற்ற ஒரு நிறத்தை கொடுக்கும்
#கருமையை நீக்கி முகத்தை பொலிவாக்கும்

#Hafza fiaz

No comments:

Post a Comment

கண் கருவளையம் மறைய எளிய மருத்துவ டிப்ஸ்..!

      அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்பது பழமொழி. நமது உடலில் உள்ள சத்து குறைபாடு மற்றும் நோய்கள் போன்றவற்றை நமது முகம் கண்ணாடி போல...