Thursday, May 7, 2020

தக தக என மின்ன செய்யும் தக்காளி face கிரீம்





தேவையான பொருட்கள்.
1.நன்கு பழுத்த தக்காளி பழம் -1
2. கற்றாழை ஜெல் -1 தே. கரண்டி
3. பாதாம் எண்ணெய் -5துளி (எண்ணெய் சருமத்தினர் வேண்டாம்
4. சோள மா -1/2 தே. க. (Corn flour)


செய்முறை :
#தக்காளி பழத்தை நன்கு மசித்து 3 தே. கரண்டி  சாறை வடித்து எடுங்கள்.
#இதை கட்டி இல்லாத வண்ணம் சோள மாவுடன் நன்கு கலந்து கொள்ளுங்கள்.
#Double boil முறையில் இவையிரண்டையும் அடுப்பில் வைத்து கிளறவும். பேஸ்ட் வடிவில் கெட்டியாக  ஆனதும் அடுப்பை விட்டு இறக்கி ஆற விடவும்.
#நன்கு ஆறியதும் கற்றாழை ஜெல் மற்றும் பாதாம் எண்ணெய் கலந்து கொள்ளவும்.
#ஈரமில்லா மூடிய பாத்திரம் ஒன்றில் இட்டு ஒரு கிழமை வரை குளிர்சாதன பெட்டியில் வைத்து  உபயோகிக்கலாம்.


பூசும் முறை :இரவில் தூங்கும் முன் நன்கு கழுவி துடைத்த முகத்தில்  மற்றும் கழுத்தில் நன்கு பூசி சில வினாடிகள் மசாஜ் செய்து விடுங்கள். காலையில் கழுவிவிடலாம்.

பயன்கள் :
1)முகத்தில் உள்ள துளை,  மேடு பள்ளங்களை சரி செய்கிறது
2)முகம் கருமை அடைவதை தடுக்கிறது
3)அதிக எண்ணெய் பசையை நீக்குகிறது
4)சூரிய ஒளியால் வறண்ட கருத்த சருமத்தை சரி செய்கிறது.
💁‍♀️ தக்காளி பழம் ஒவ்வாமை உள்ளவர்கள் முகம் எரிச்சல் போல் தோன்றினால் உடனே கழுவி விடுங்கள்

By :hafza fiaz

No comments:

Post a Comment

கண் கருவளையம் மறைய எளிய மருத்துவ டிப்ஸ்..!

      அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்பது பழமொழி. நமது உடலில் உள்ள சத்து குறைபாடு மற்றும் நோய்கள் போன்றவற்றை நமது முகம் கண்ணாடி போல...