Saturday, May 9, 2020

பாதங்களை பராமரிப்பதில் கவனம் செலுத்துங்கள்!


ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே பாதங்களில் கவனம் செலுத்தச் சொல்லி வலியுறுத்தி இருக்கிறது ஆயுர்வேத மருத்துவம். 3000 வருடங்களுக்கு முன்பே உடல் உறுப்புகளை இணைக்கும் வர்ம முடிச்சுகள் கால் பாதங்களில் இருப்பதால் வர்ம சிகிச்சையின் மூலம் பாதம் பராமரிப்பதன் முக்கியத்துவத்தை சரகர், சிசுகர் போன்ற ஆயுர்வேத மருத்துவ மகான்கள் விரிவாக சொல்லியிருக்கிறார்கள்.
பாதப் பராமரிப்பு ஆரோக்கியத்தில் அந்த அளவுக்கு மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது’’ என்கிறார் ஆயுர்வேத மருத்துவரான சிவகுமார்.ஆயுர்வேதத்தில் செய்யப்படும் பாத சிகிச்சைகளைப் பற்றியும், நாம் அன்றாட வாழ்வில் பின்பற்ற வேண்டிய சில எளிய வழிமுறைகளையும் தொடர்ந்து
விளக்குகிறார்.

மனித உடலில் கை, கால்களே இயக்கத்திற்கான உறுப்புகள். அதிலும் கால்களால்தான் இடத்திற்கிடம் பெயர்ந்து இன்று கம்ப்யூட்டர் யுகம் வரை மனித குலம் பரிணாமம் அடைய முடிந்திருக்கிறது. ‘பாதகாத்திரம்’ அதாவது காலணி அணிவது, கால் அலம்புவது, காலையில் பல்துலக்குவது போல தினசரி காலை எழுந்தவுடன் எண்ணெய் தேய்த்து பாதங்களின் தசைகளை பிடித்துவிடுவது(Oil Massage) போன்றவற்றை ‘தினச்சரியம்’ எனப்படும் தினசரி அனுசரிக்கவேண்டிய சடங்காக சொல்கிறார்கள்.


கால் அலம்புவதின் நோக்கம்...
பாதங்களில் நிறைய வர்மப்புள்ளிகள் இருப்பதால் கால் பராமரிப்பில் முதல் விஷயமாக கால் அலம்புவதைச் சொல்கிறார்கள். காலை அலம்புவதால் நோய்க்கிருமிகள் அண்டுவதை தடுக்க முடியும் என்பது நமக்கு நன்றாக தெரிந்த விஷயம். ஆனால், கால் அலம்புவதால் ‘உடல் அசதி போகும், கண்பார்வை மேம்படும், ஆண்மைக்குறைவு ஏற்படாது மற்றும் மனச்சோர்வைப் போக்கி சந்தோஷம் கொடுக்கும்’ போன்ற நாம் அறியாத பல விஷயங்களையும் ஆயுர்வேதம் கூறுகிறது.

பாதங்களில் எண்ணெய் தேய்ப்பதன் அவசியம்...

தோற்றத்தில் இளமையாக இருந்தாலும் சிலரின் பாதத்தைப் பார்த்தால் தோல் வறண்டுபோய் சுருக்கங்களோடு, பித்தவெடிப்பு, சேற்றுப்புண் போன்றவற்றால் வயதானவர்களின் காலைப் போல் காணப்படும். தினசரி ஆயில் மசாஜ் செய்வதால் பாதத்தில் ஏற்படும் வெடிப்புகள், கொப்புளங்கள் நம்மிடம் வரவே பயப்படும்.


அப்படி வந்தாலும் அவற்றைப் போக்கி அழகான பாதங்களைப் பெறலாம். பாதத்தில் முடியும் ஒவ்வொரு நரம்பும் உடலின் ஒவ்வொரு உறுப்போடு தொடர்புடையவை என்பதால், பாதத்தில் ஆயில் மசாஜ் செய்யும்போது, கால் விரல்களில் உள்ள மூட்டு எலும்புகளில் இருக்கும் பசைத்தன்மையை அதிகரித்து, காலில் ஏற்படும் உணர்வின்மை மற்றும் காலில்  ஏற்படும் மற்ற வலிகளை போக்கலாம்.


மேலும் கூரிய கண்பார்வை பெற, மூளை சுறுசுறுப்படைய மற்றும் குழந்தையின்மைப் பிரச்னைக்கு தீர்வாகவும் ஆயில் மசாஜ் உதவுகிறது. வாயு, நரம்பு சம்பந்தப்பட்ட வாத நோய்களான முடக்குவாதத்தை தவிர்க்கலாம். முக்கியமாக இரவில் பாதங்களுக்கு எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்வதால் நீண்டநேரம் நின்றுகொண்டு வேலை செய்பவர்களுக்கு காலில் ஏற்படும் அசதியைப் போக்கி, நல்ல தூக்கத்தை வரவழைக்கும்.


உடலில் ஏதேனும் பிரச்னை இருந்தால் மட்டும் இதைச்செய்யாமல் தினசரி வேலையாகச் செய்வதால் பாதங்கள் மூலம் வரும் எந்தவொரு நோயையும் அண்ட விடாமல் செய்வதோடு, மற்ற பாதசிகிச்சைகளை செய்துகொள்ள வேண்டிய அவசியமும் ஏற்படாது.


மனப்பதற்றம், மன அழுத்தம், பெருமூளை வாதம் மற்றும் மைக்ரேன் தலைவலி போன்ற நோய்களுக்கு தீர்வாக பாதங்களில் மசாஜ் செய்ய வேண்டியதன் முக்கியத்துவத்தை தற்போது நவீன மருத்துவமும் பரிந்துரைக்கிறது. Diabetic Neuropathy சிகிச்சையில் நீரிழிவு நோயாளிகளுக்கு வரும் பாத எரிச்சல், கால்குடைச்சல், வலி போன்றவற்றை குறைக்க ஆயில் மசாஜை பரிந்துரைக்கிறார்கள்.


Trans Dermal Drug Delivery System என்ற ஆய்வில், பாதங்களில் எண்ணெய் தேய்ப்பதன் மூலம் உடல் கிரகித்துக்கொள்ளும் எண்ணெயை 48 மணிநேரம் கழித்து சிறுநீரின் மூலம் வெளிவருவதை நிரூபித்திருக்கிறார்கள். வெளியே எண்ணெயைத் தேய்ப்பதால் உடலினுள்ளே மாற்றம் நேருமா என்ற சந்தேகத்தையும் இந்த ஆய்வு உடைத்திருக்கிறது.
ஆயுர்வேத ஆயில் மசாஜ் முறைதான் தற்போது பிரபலமாகியுள்ள ரெஃப்லக்ஸாலஜி,
அக்குபங்சர் போன்ற மருத்துவங்களுக்கு முன்னோடி என்பதை நாம் உணர வேண்டும்.

🚫யாரெல்லாம் ஆயில் மசாஜ் செய்யக்கூடாது?
பாதங்களில் கட்டிகள், வீக்கம் இருந்தாலோ, சளி, காய்ச்சல் இருந்தாலும் பாதங்களில் எண்ணெய் தேய்த்து நீவக்கூடாது. செரிமானக் கோளாறு உள்ளவர்கள், தொற்று நோய் இருப்பவர்கள் மற்றும் மாதவிலக்கு ஆன பெண்கள் தவிர்த்துவிட வேண்டும். நீண்டநாளுக்கு முன் எலும்பு முறிவு ஏற்பட்டவர்கள் பாதங்களுக்கு எண்ணெய் தடவி நீவி விடலாம். ஆனால், சமீபத்தில் காலில் அடிபட்டவர்கள் நீவக்கூடாது. படை, சொறி, சிரங்கு போன்ற தோல் வியாதி உள்ளவர்கள் ஆயில் மசாஜ் செய்தால் மேலும் அதிகரிக்க வாய்ப்புண்டு.

⏩️வெந்நீர் சிகிச்சை
பாதங்களில் குருத்தெலும்பு நீட்டிக்கொள்வதாலோ, வயதின் காரணமாகவோ மற்றும் அதிக எடையுள்ள, மாதவிடாய் நின்ற (Menopause) பெண்களுக்கும் குதிகாலில் வலி உண்டாகும். இவர்கள் காலையில் எழுந்தவுடன் தரையில் நடக்க மிகவும்
சிரமப்படுவார்கள். ஒரு பக்கெட்டில் மிதமான வெந்நீரில் உப்பு போட்டு பாதங்களை முக்கி எடுப்பதால் வீக்கங்களில் உள்ள நீர் குறைந்து, குதிகால் வலி நீங்கிவிடும்.

⏩️குளிர் நீர் சிகிச்சை
மூட்டுவலி, முழங்கால்வலி இருப்பவர்கள் குளிர்ந்த நீரை ஒரு பக்கெட்டிலும், மிதமான வெந்நீரை ஒரு பக்கட்டிலும் வைத்துக் கொண்டு, கால்களை குளிர்நீர், சுடுநீர் என மாறி, மாறி முக்கி எடுக்கலாம். இதனால் மூட்டுகளில் ஏற்பட்டுள்ள அழற்சி நீங்கி வலி குறைந்துவிடும். பாதங்களில் சோர்வு நீங்கி நல்ல தூக்கம் வரும்.

⏩️சுடு ஒத்தடம்
சுடுநீரில் டவலை முக்கி பாதத்தில் ஒத்தடம் தரும்போது பாதிக்கப்பட்ட இடத்தில் ரத்தஓட்டம் அதிகரித்து தசைகள் தளர்ச்சி அடைகின்றன. வாத தோஷம் சீரடைகிறது. கால் தசை, நரம்புகளின் இறுக்கம் குறைந்து ரிலாக்ஸாகின்றன. ரத்த ஓட்டம் மேம்படுகிறது. 

⏩️குளிர் ஒத்தடம்
குளிர்ச்சியான நீரில் ஒரு டவலை முக்கி எடுத்து பாதத்தில் ஒத்தடம் தருவதால் பாதத்தில் உள்ள வீக்கம், அழற்சி குறையும். தசைகள் மரத்துப் போவது மற்றும் பாதத்தில் ஏற்படும் வலி குறையும். இந்த சிகிச்சைகள் தவிர, குதிகால் வலிகளுக்கென இருக்கும் யோகாசனங்களை முறையாக கற்று செய்வதால் பாதத்தில் ஏற்படும் வலிகளை குறைத்துக் கொள்ள முடியும்.

நன்றி :விகடன் ஹெல்த் 

கருத்த உதடுகளா.. கவலைய விடுங்க..


 ரோஜா நிறத்தில் இருந்த உங்கள் உதடுகளில் கருமை படர்ந்திருந்தால் ஆரோக்கியம், உணவுப் பழக்கம், வாழ்வியல் முறை போன்றவற்றில் ஒழுங்குமுறை இல்லாதிருப்பதே காரணம். ஆண்களுக்கு உதடுகள் கருப்பாக புகைப்பழக்கமும் ஒரு காரணம். பெண்கள் பயன்படுத்தும் அழகு சாதனப் பொருட்களில் இரசாயணங்கள் இருப்பதாலும் உதடுகள் கருப்பாகும்.
உடலில் வைட்டமின் குறைபாடு காரணமாகவும் உதட்டில் கருமை படர்ந்திருக்கும். உதட்டின் கருமையை எப்படி போக்குவது என்பது குறித்த கட்டுரைதான் இது.

💚எலுமிச்சை
எலுமிச்சையை பிழிந்து அதன் சாற்றை எடுத்து தினமும் உதட்டில் தடவி வரலாம். அல்லது எலுமிச்சை பழத்தை மெல்லிதாக நறுக்கி அதில் சர்க்கரையை தூவி அதனை உங்கள் உதட்டின் மேல் வைத்து தேய்க்கவும். இது உதட்டில் உள்ள இறந்த செல்கள் மற்றும் கருமையை நீக்கி உதட்டை சிவப்பாகவும் மென்மையாகவும் வைக்கும். ஒரு வாரத்திற்கு தினமும் செய்து வரலாம்.
💚ஆலிவ் ஆயில்
அரை தேக்கரண்டி சர்க்கரை மற்றும் சில துளிகள் ஆலிவ் எண்ணெய் இரண்டையும் கலந்து உதட்டில் ஸ்க்ரப் செய்யவும். ஆலிவ் எண்ணெய் உங்கள் உதட்டை வறண்டு போகாமல் பார்த்து கொள்ளும். ஒரு வாரம் தொடர்ந்து செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.
💚ரோஸ் வாட்டர்
ஒரு தேக்கரண்டி தேனில் ஒரு துளி ரோஸ் வாட்டரை சேர்த்து கலந்து உதட்டின் மேல் தடவலாம். ஒரு நாளிற்கு இரண்டு அல்லது மூன்று முறை தொடர்ச்சியாக உதட்டின் மீது பூசலாம். ரோஜா இதழை அரைத்து ஒரு மேஜைக்கரண்டியும் ஒரு தேக்கரண்டி வெண்ணெய், தேன் அல்லது மிக்ல் க்ரீம் சேர்த்து கலந்து வைக்கவும். இந்த கலவையை தினமும் இரண்டு வேளை உதட்டில் தடவி வந்தால் உதடு மிகவும் அழகாக மாறிவிடும்.


💚மாதுளை
மாதுளை சாறு, பீட்ரூட் சாறு மற்றும் கேரட் சாறு ஆகிய மூன்றிலும் ஒவ்வொரு மேஜைக்கரண்டி எடுத்து கொள்ளவும். தினமும் இதனை உதட்டில் தடவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும். அரைத்த மாதுளை விதைகள் மற்றும் பால் இரண்டையும் சேர்த்து உதட்டிற்கு ஸ்க்ரப்பாக பயன்படுத்தலாம். இதனை தினமும் கூட செய்து வரலாம்.

💚பாதாம் எண்ணெய்.
பாதாம் எண்ணெய் உதட்டின் கருமையை போக்கி மென்மையாக வைத்து கொள்ளும். இரவு தூங்க போகும் முன் உதட்டில் தடவி வரலாம். இத்துடன் எலுமிச்சை சாறு சேர்த்து தேய்த்து வந்தால் உதடு புத்துணர்ச்சி பெற்றிருக்கும்.

கூந்தல் மினுமினுக்க முட்டை.... எப்படி !!


கூந்தல் என்று வரும் போது வறட்சியின்றி மென்மையாக பட்டுப்போல் இருக்க வேண்டும் என்பது தான். குறிப்பாக பெண்கள் பட்டுப்போன்ற கூந்தலைப் பெற கெமிக்கல் கண்டிஷனர்களை அதிகம் பயன்படுத்துவார்கள். அப்படி கண்டிஷனர்களை அதிக அளவில் கூந்தலுக்குப் பயன்படுத்தும் போது, கூந்தல் தற்காலிகமாகத் தான் மென்மையாகுமே தவிர, அதனை அன்றாடம் பயன்படுத்தி வந்தால், நாளடைவில் கூந்தல் இயற்கை பொலிவை இழந்து, ஆரோக்கியமற்றதாக காணப்படும்.


ஆகவே கூந்தலை இயற்கை வழியில் மென்மையாக வைத்துக் கொள்ள உதவும் சமையலறைப் பொருட்களில் ஒன்றாக முட்டை விளங்குகிறது. 

கூந்தலைப் பராமரிக்க முட்டையைப் பயன்படுத்தினால், கூந்தல் இயற்கையாகவே மென்மையாவதோடு, கூந்தலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்து, கூந்தலின் வளர்ச்சியும் அதிகரிக்கும். சரி, இப்போது அந்த முட்டையைக் கொண்டு எப்படியெல்லாம் மாஸ்க் போடுவது என்று பார்ப்போம்.

➡️முட்டை, எலுமிச்சை மற்றும் ஆலிவ் ஆயில்
முட்டை, எலுமிச்சை மற்றும் ஆலிவ் ஆயில்
ஒரு பௌலில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு அடித்து, பின் அதில் எலுமிச்சை சாறு சேர்த்து மீண்டும் நன்கு கலந்து, 2 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, தலையில் தடவி 1/2 மணிநேரம் நன்கு ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் ஷாம்பு பயன்படுத்தி அலச வேண்டும்.

➡️முட்டை, தயிர் மற்றும் ஆலிவ் ஆயில்
முட்டை, தயிர் மற்றும் ஆலிவ் ஆயில்
முட்டையில் புரோட்டீன் அதிக அளவில் நிறைந்திருப்பதால், முட்டையின் மூலம் மயிர்கால்களுக்கு வேண்டிய புரோட்டீன் கிடைக்கும். அதிலும் தயிரிலும் புரோட்டீன் இருப்பதால், இந்த மாஸ்க் இன்னும் சிறப்பாக செயல்படும். அதற்கு முட்டையை ஒரு பௌலில் உடைத்து ஊற்றி நன்கு அடித்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் தயிர் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, தலைடியில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் அலச வேண்டும்.

➡️முட்டை, கடலை மாவு மற்றும் ஆலிவ் ஆயில்
முட்டை, கடலை மாவு மற்றும் ஆலிவ் ஆயில்
இந்த மாஸ்க்கிலும் புரோட்டீன் அதிகம் உள்ளது. இந்த மாஸ்க் செய்ய ஒரு பௌலில் 1 முட்டையை உடைத்து ஊற்றி நன்கு அடித்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் கடலை மாவு மற்றும் 2 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, தலைக்கு மாஸ்க் போட வேண்டும்.

➡️முட்டை, வாழைப்பழம் மற்றும் ஆலிவ் ஆயில்
முட்டை, வாழைப்பழம் மற்றும் ஆலிவ் ஆயில்
வாழைப்பழம் மிகவும் சிறப்பான ஒரு மாய்ஸ்சுரைசர். ஆகவே முட்டையுடன் வாழைப்பழத்தை சேர்த்து மாஸ்க் போட்டால் இன்னும் நல்ல மாற்றத்தை உடனே காணலாம். அதற்கு முட்டையை ஒரு பௌலில் உடைத்து ஊற்றி நன்கு அடித்து, அதில் வாழைப்பழத்தை நன்கு மசித்து சேர்த்து, அத்துடன் சிறிது ஆலிவ் ஆயில் ஊற்றி கலந்து, தலைக்கு மாஸ்க் போட வேண்டும்.

➡️முட்டை நாற்றத்தைப் போக்க...
முட்டை மாஸ்க் போட்ட பின்னர், கூந்தலில் இருந்து முட்டையின் நாற்றம் வீசும். அத்தகைய நாற்றத்தைக் போக்க, ஷாம்பு பயன்படுத்தி கூந்தலை அலசிய பின்னர், வினிகரை குளிர்ந்த நீரில் கலந்து, அதனைப் பயன்படுத்து கூந்தலை இறுதியில் அலச வேண்டும். இதன் மூலம் கூந்தலில் இருந்து வீசும் முட்டை நாற்றத்தைப் போக்கலாம்.

கொரிய பெண்களின் அழகு ரகசியம்



முகம் அழகாக இருக்க வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருக்கும். பெரும்பாலும் பலர் தங்களது முகத்தில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் வீட்டிலேயே தீர்வு கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று தான் நினைப்பார்கள். ஆனால் அவர்களுக்கு எந்தெந்த பொருளை எப்படி பயன்படுத்தினால் நல்ல தீர்வு கிடைக்கும் என்பது பற்றி சுத்தமாக தெரியாது.
நீங்கள் வீட்டில் அன்றாடம் பயன்படுத்தக் கூடிய ஒரு பொருள் அரிசி. ஆனால் இந்த அரிசியை அழகிற்காக பலவிதமாக பயன்படுத்துவதால் கிடைக்கும் ஆச்சரியமூட்டும் அழகு பற்றி உங்களுக்கு தெரியுமா? அரிசியை ஒரு சில பொருட்களுடன் கலந்து பயன்படுத்தும் போது உங்களது முகம் மிகவும் அழகாக மாறும். அரிசியை எந்தெந்த பொருட்களுடன் கலந்து எப்படி பயன்படுத்துவது என்று தெரியாதவர்கள் இதை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

1. அரிசி மாவு, பால்
சருமம் வெயிலினால் கருமையாகி இருக்கும். இந்த கருமையை போக்கி உங்களது உண்மையான நிறத்தை வெளிக் கொண்டு வர. பாலில் அரிசி மாவை கலந்து அதனை முகத்திற்கு மாஸ்க் போட வேண்டும். இதனை அப்படியே 15 நிமிடங்கள் விட்டு பின்னர் கழுவினால் முகம் இழந்த நிறத்தை ஒரே மாதத்தில் பெரும். அரிசியை கழுவிய தண்ணீரில் முகத்தை கழுவி வந்தாலும் இதே போன்ற பலனை பெறலாம்.

2. கருவளையங்கள்
கண்களுக்கு அடியில் கருவளையங்கள் இருந்தால், நீங்கள் மிகவும் சோர்வாகவும், ஒரு நோயாளியை போலவும் தோன்றுவீர்கள். அதற்கு வாழைப்பழம், விளக்கெண்ணை, அரிசி மாவு போன்றவற்றை ஒன்றாக கலந்து கருவளையங்களுக்கு மேல் அல்லது கருமையாக உள்ள சருமத்தின் மீது தடவலாம். இது உங்களது கருமையான இடங்களை இயல்பு நிலைக்கு கொண்டு வரும். உங்களை இளமையாக காட்டும் தன்மையும் இதற்கு உண்டு.
3. தலைமுடிக்கு
அரிசி மாவு மற்றும் முல்தாணி மட்டியை சம அளவு எடுத்து கொண்டு, அதை நன்றாக மிக்ஸ் செய்து, தலைமுடிக்கு பேக் போல போட வேண்டும். இதனால் தலைமுடி வலிமையாக காணப்படும்.

4. கருமை போக
அரிசி மாவுடன் வெள்ளரிக்காய் சாறு, எலுமிச்சை சாறு போன்றவற்றை கலந்து முகத்திற்கு பேக் போட வேண்டும். இது நன்றாக காயும் வரை விட்டுவிட்டு பின்னர் முகத்தை நன்றாக கழுவி விட வேண்டும். இதனால் முகம் பளிச்சிடும். வெயிலினால் கருப்பான கலையிழந்த முகத்திற்கு அழகு கூடும்.

5. பொலிவான முகம்
உங்களது முகம் மிருதுவாகவும், பொழிவாகவும் இருக்க, அரிசி மாவில் தயிர் மற்றும் தேன் கலந்து முகத்திற்கு பேக்காக போட வேண்டும். இது நன்றாக காய்ந்ததும், இதை சுத்தமாக கழுவி விட வேண்டும். இதனால் முகம் புதுப்பொழிவுடன் இருக்கும்.

6. பாசிப்பயறு, அரிசி மாவு
தயிரில் பாசிப்பயறு தூள் அல்லது அரிசி மாவு கலந்து பயன்படுத்தினால் முகம் எப்போதும் இல்லாத அளவிற்கு அழகாக மின்னும்.

7. மேக்கப் போக
2 ஸ்பூன் அரிசி மாவு, 2 ஸ்பூன் தயிர் கலந்து இரவில் முகத்தில் தேய்த்து பிறகு நன்றாக கழுவி விடுங்கள். இதனால் பகலில் போட்ட மேக் அப் கலைந்து இயல்பு நிலைக்கு திரும்பும்.

8. அழுக்குகள் நீங்க
சோப்புப் போட்டு போகாத அழுக்குகள், மூக்கு நுனியிலும், மூக்கின் ஓரங்களிலும் தேங்கி நின்றுவிடும். பால் கலந்த அரிசி மாவு கொண்டு ஸ்கிரப் போல தேய்த்தால் அழுக்குகள் எல்லாம் காணாமல் போய்விடும்.

9. சுருக்கங்கள்
அரிசி மாவில், ஆலிவ் ஆயில் மற்றம் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, முகத்திற்கு மாஸ்க் போட்டால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, சரும சுருக்கங்கள் நீங்கும்.

10. ஆடை தழும்புகள்
மிக இறுக்கமாக உள்ளாடை அணிவதால், பிரேஸியரின் ஸ்ட்ராப் எனப்படும் பட்டை, தோள்களில் அழுந்தப் பதிந்து கருமையும், நாளடைவில் புண்ணாக மாறி தழும்பும் ஏற்பட வாய்ப்புள்ளது. இதற்கு உள்ளாடை விற்கும் கடைகளில் கிடைக்கக்கூடிய ஸ்ட்ராப் குஷனை வாங்கிப் பொருத்திக்கொள்ளலாம். தவிர, குளிக்கும் முன், ஒரு நாள் விட்டு ஒரு நாள் ஒரு ஸ்பூன் அரிசி மாவுடன் சிறிதளவு பால் கலந்து கருமை படிந்த இடத்தில் தேய்த்துக் கழுவவும். இது இறந்த செல்களை நீக்கும். பின்னர் பால் ஏடு அல்லது வெண்ணெயைக் கொண்டு கருமை படர்ந்த இடத்தில் தேய்த்து மசாஜ் கொடுக்கவும். நாளடைவில் கருமை மறைந்துவிடும்.

11. மஞ்சளுடன்...
2 ஸ்பூன் அரிசி மாவு, 1 ஸ்பூன் கஸ்தூரி மஞ்சள், 2 ஸ்பூன் பால் மூன்றையும் நன்றாக கலந்து பேஸ்ட் போல செய்து, முகம் மற்றும் கழுத்து பகுதிகள் இரண்டிலும் தடவி 10 நிமிடங்கள் கழித்து ஸ்கிரப் போல மசாஜ் செய்து முகத்தை கழுவினால் முகம் பளபளப்பாக மாறிவிடும். இதனை வாரத்திற்கு இரண்டு முறை செய்தாலே முகம் பட்டு போல மாறிவிடும்.

12. வெள்ளரி ஜூஸ்
3 டீஸ்பூன் அரிசி மாவு, 1 சிட்டிகை மஞ்சள் தூள் , 1 டீஸ்பூன் தேன் மற்றும் வெள்ளரிக்காய் ஜூஸ் சேர்த்து பேஸ்ட் போல செய்து சருமத்திற்கு பயன்படுத்தினால் முகம் பளிச்சென்று அழகாக மாறும்.

13. ஸ்கிரப்
கடலை மாவு, அரிசி மாவு, சர்க்கரை, தேன் மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்ந்த இந்த கலவையை முகத்தில் அப்ளை செய்து வட்ட வடிவமாக மசாஜ் செய்ய வேண்டும். இதை மூன்று நிமிடங்கள் செய்ய வேண்டும். பின்னர் குளிர்ந்த நீரினால் முகத்தை கழுவினால் பட்டு போன்ற மென்மையான முகம் கிடைக்கும்.

*எப்பொதும் பச்சரிசியை கழுவி காயவைத்து அரைத்து அந்த  மாவை பயன்படுத்தவும். கடை மா வேண்டாம். 

வெயில் கால சரும பராமரிப்பு



வெயிலில் இருந்து முகம், சருமத்தைக் காக்க எளிய வழிகள்!

`வெயில் நேரத்துல வெளிய போகாதே, ஒடம்பு கறுத்துப்போயிடும்', 'நிறைய தண்ணி குடிக்கணும். இல்லைன்னா வயித்துப் பிரச்னை ஏதாவது வந்திடும்' என்பது போன்ற அறிவுரைகளை கோடைக்காலத்தில் அதிகம் கேட்டிருக்கலாம். கோடை காலத்தில் சருமம் தடித்துக்காணப்படுதல், முகமும் சருமமும் கருமை நிறமடைதல் போன்ற சருமப் பிரச்னைகள் அதிகம் ஏற்படும். சிலருக்கு இயற்கையாகவே  சரும வறட்சி (Dry Skin) இருக்கும். கோடையில் அவர்களது நிலைமை மிகவும் சிரமம். 

ஏற்கெனவே சருமப் பிரச்னை உள்ளவர்கள் சருமப் பாதுகாப்புக்கு என்னென்ன செய்யலாம்... எந்த ஃபேஸ் பேக்  பயன்படுத்தலாம் .
*"சருமம் எந்த இடத்தில் கறுத்திருக்கிறதோ, அந்த இடத்தில்
எலுமிச்சைச் சாறு - தயிர் - தக்காளி பேஸ்ட் அல்லது எலுமிச்சைச் சாறு - உருளைக்கிழங்கு பேஸ்ட் போன்ற இரண்டில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தலாம்.


எலுமிச்சையிலுள்ள ஆல்ஃபா-ஹைட்ராக்சில் அமிலம் (Alpha hydroxyl acids), வைட்டமின் சி மற்றும் சிட்ரிக் அமிலம் (Citric acid) போன்றவை சரும நிறம் மாற்றமடைவதைச் சரிசெய்யும்.
முகத்தை `பளிச்'சென ஆக்குவதற்கு, பலரும் பிளீச்சிங் செய்வார்கள். அதற்கு தேன் சிறந்த தீர்வு. வெறும் தேனையோ, பப்பாளிச் சாறு கலந்த தேனையோ தினமும் சருமத்தில் தேய்த்துக்கொள்ளலாம். 

அன்னாசிப்பழத்தை தேனில் கலந்தும் தேய்த்துக்கொள்ளலாம். அன்னாசிப்பழத்திலிருக்கும் புரோமலைன் (Bromelain) என்ற என்சைம், தோலிலிருக்கும் இறந்த செல்களை நீக்கி, முகத்தைப் பளிச்சென மாற்றும். அன்னாசிப்பழம்-தேன் கலவையை இரண்டு மூன்று முறை தேய்த்துக்கொள்வது நல்லது.

சிலருக்கு கண், மூக்கு, உதடு பகுதிகளைச் சுற்றிக் கருவளையம் இருக்கும். புளித்த தோசை மாவுடன் தக்காளி சேர்த்து முகத்தில் தேய்த்தால் கருவளையம் நீங்கி பொலிவான சருமத்தைப் (Eventone) பெறலாம். இன்ஸ்டன்ட் பிளீச்சராக ( Instant Bleacher) இது இருக்கும். தக்காளி - தயிர் பேஸ்ட், தக்காளி - கடலை மாவு - கற்றாழை பேஸ்ட் போன்றவை  மிகவும் நல்லவை.
பெண்கள், மஞ்சளுடன் கடலை மாவு சேர்த்து ஃபேஸ் பேக் போட்டுக்கொண்டால், வெயிலின் புறஊதாக் கதிர்கள் ஏற்படுத்தும் பாதிப்புகளிலிருந்து விடுபடலாம். தினமும் சோப்புக்குப் பதில் மஞ்சள் தேய்த்துக் குளிப்பது, சருமம் கருமையடைவதிலிருந்து தடுக்கும்; சூரிய ஒளியால் சருமத்தில் ஏற்படும் அனைத்துப் பிரச்னைகளையும் தடுக்கும்.

* தேங்காய்ப்பாலில் அதிக கொழுப்புச்சத்து இருப்பதால், சருமத்துக்கு நீர்ச்சத்து கிடைக்கவும், நிறம் கருமையாவதையும் தடுக்கும். , கற்றாழைச் சாற்றுடன் தேங்காய்ப்பால் சேர்த்து முகத்தில் தேய்த்துக்கொள்ளலாம். சந்தனத்துடன் தேங்காய்ப்பால் கலந்து, ஃபேஸ் பேக்காக பயன்படுத்துவது முகப்பொலிவை அதிகரிக்கும். வெயில் காலத்தில் வியர்வை நாற்றத்தால் சிரமப்படுபவர்கள், சந்தனத்தைத் தேய்த்துக்கொண்டாலே அந்தப் பிரச்னையிலிருந்து விடுபட்டுவிடலாம்.


* `முகத்துல எண்ணெய் வழியுது’ என்பவர்கள் கடலை மாவு, ரோஸ் வாட்டர், முல்தானி மெட்டி போன்றவற்றைச் சேர்த்து பேஸ்ட் ஆக்கி, தினமும் முகத்தில் தேய்த்து வந்தால், அதிலுள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் முகத்தைப் பளிச்சென மாற்றிவிடும்.

* தயிர், உடலுக்கு மட்டுமன்றி சருமத்துக்கும் நல்லது. தயிரை அப்படியே பயன்படுத்துவதற்குப் பதிலாக, தக்காளியுடன் இரண்டு டீஸ்பூன் தயிர் சேர்த்து பயன்படுத்தலாம். ஆரஞ்சுப் பழத்தின் தோலை அரைத்து, அதனுடன் தயிர் சேர்த்தும் பூசலாம்’’
உடலின் சருமப் பகுதியைப் பாதுகாக்க 'ஃபேஸ் பேக்' யோசனைகள் பயன்பட்டாலும், உடலின் உட்பகுதியை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளவேண்டியதும் அவசியமே. அதற்கான சில யோசனைகள் ..

"கோடைக்காலத்தில், சருமத்தைப் பாதுகாக்க இரண்டு வகையான முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும். சருமத்தின் பராமரிப்புக்காக கொடுக்கப்படவேண்டிய வெளிப்புறப் பாதுகாப்பு (External Care), மற்றொன்று, உடல் குளுமைக்காக கொடுக்கப்படவேண்டிய உடலின் உள்புற பாதுகாப்பு (Internal Care).

* உடை விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். அடர் நிறங்களைத் தவிர்த்துவிட்டு பச்சை, மஞ்சள், நீலம் போன்ற மங்கலான நிறமுள்ள உடைகளை மட்டுமே அணிய வேண்டும். உடைகள் உடலை இறுக்காதபடி இருக்கவேண்டியது அவசியம். கோடையில் பருத்தி உடைகள்தான் பெஸ்ட்.! இவை அனைத்தும் உள்ளாடைகளுக்கும் பொருந்தும்.

* குளிர்ந்த நீரில், தினமும் மூன்று முறை முகம் கழுவ வேண்டும். அதேபோல காலை, மாலை என இரண்டு முறை குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும்.

* மதியம் 12 முதல் 4 மணி வரை  கட்டாய வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும். வெளியே வந்தே ஆக வேண்டும் என்ற சூழலில் இருப்பவர்கள், உடலில் வெயில்படும் இடங்களில் தேங்காய் எண்ணெயை தேய்த்துக்கொள்ளலாம். எண்ணெய்ப் பசை உள்ள சருமம் (Oily Skin) உள்ளவர்கள், குளிர்ந்த நீரால் தோலை அடிக்கடி சுத்தப்படுத்திக்கொள்ளவும்.
* தக்காளி, தயிர், எலுமிச்சை, பப்பாளி, வெள்ளரிக்காய்... இவற்றில் ஏதாவது இரண்டை அரைத்து, தினமும் சருமத்தில் தேய்த்து வருவது நல்லது. கண்ணுக்குக் கீழே கருவளையம், தோலின் குறிப்பிட்ட பகுதி நிறம் மாறுதல் போன்ற பிரச்னை இருப்பவர்கள், உருளைக்கிழங்கை மையாக அரைத்து, அந்த இடத்தில் தேய்த்துவந்தால், பிரச்னை மெள்ள நீங்கும்.

* கோடையில் உடலிலிருந்து அதிக நீர் வெளியேறும் என்பதால், ஒருநாளைக்கு மூன்று முதல் நான்கு லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். அதேபோல, உடலிலிருந்து அதிக நீர் வெளியேறும்போது, உள்ளுறுப்புகளில் நீர் வறட்சி ஏற்படும். குறிப்பாக, பெருங்குடலில் நீர் வறட்சி ஏற்படுவதால் மலச்சிக்கல் உண்டாக வாய்ப்பிருக்கிறது.

* நீர்வறட்சியைத் தடுக்க, நீர்ச்சத்து நிறைந்த பழங்கள், காய்கறிகள், பீட்ரூட் ஜூஸ், கற்றாழை ஜூஸ், நீர்மோர், கேரட் ஜூஸ் போன்றவற்றை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். கோடையில் அசைவ உணவுகளைத் தவிர்க்கலாம். தயிருக்குப் பதில் நீர்மோர் குடிப்பது நல்லது.

* 15 நாள்களுக்கு ஒருமுறை, ஒருநாள் முழுக்க உணவுக்குப் பதில் ஜூஸ் மட்டுமே சாப்பிட வேண்டும். இப்படிச் செய்வது, உடலிலுள்ள கழிவு வெளியேற உதவியாக இருக்கும். உடலில் கழிவுகள் வெளியேறிவிட்டாலே, சருமப் பிரச்னைகள் ஏற்படாமல் தவிர்க்க முடியும்’’

புதினாவை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் உண்டாகும் நன்மைகள்....!!

புதினாவை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் உண்டாகும் நன்மைகள்....!!



ஏராளமான மருத்துவக் குணங்கள் நிறைந்த ஒரு மூலிகை கீரை வகையாக புதினா இருக்கிறது. இந்த புதினாவை தினந்தோறும் சாப்பிடுவதால் மனிதர்களுக்கு ஏற்படும் அற்புதமான நன்மைகள் உண்டாகின்றன.

புதினாவை பக்குவம் செய்து சாப்பிட்டு வரும்போது ஆஸ்துமா நோயாளிகளுக்கு மூச்சுவிடுவதில் ஏற்படும் சிரமம் குறையும். அதே நேரம் ஒரு சமயத்தில் அளவுக்கதிகமாக புதினாவை ஆஸ்துமா நோயாளிகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
 
கடுமையான வயிற்றுப்போக்கு ஏற்பட்டவர்களும் சிறிதளவு புதினாவை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் வயிற்றுப்போக்கு நீங்குவதாக மருத்துவ ஆய்வுகளில்  தெரியவந்திருக்கிறது.
 
ஒவ்வொரு முறை சாப்பிட்ட பிறகும், சிறிது புதினா இலைகளை வாயில் போட்டு நன்கு மென்று தின்பதால் வாய் துர்நாற்றம் நீங்குகிறது. புதினாவை துவையல் செய்து சாதத்துடன் சாப்பிட்டு வர வயிற்றுப் பொருமல், வயிற்று வலி, செரியாமை ஆகியன தீரும்.
 
புதினா எண்ணெய் 2 மிலி அளவு 1 அல்லது 1 ½ டம்ளர் வெந்நீரில் கலந்து குடிக்க வயிற்று வலி அஜீரணம் குணமாகும். புதினாவை அரைத்து முகத்தில் பூசி  வந்தால் முகப்பரு, வீக்கம், தீப்புண், சொறி, சிரங்கு நீங்கும். 


புதினாவில் இருந்து தயாரிக்கப்படும் ‘மென்தால்’ என்ற எண்ணெய் தலைவலிக்கு நல்லது. புதினா இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து அருந்தலாம். 
 
புதினா, வயிற்றுவலி, அஜீரணம், வாயுத் தொல்லை, மலச்சிக்கல், உப்புசம், வயிற்றிப் போக்கு உள்பட பல வயிற்றுப் கோளாறுகளை தீர்த்து விடுகிறது. 
 
புதினா தண்டுகளையும், இலைகளையும் சேர்த்து தண்ணீரில் கொதிக்க வைத்து, அதில் தேன், எலுமிச்சை சாறு பிழிந்து இரவிலும், அதிகாலையிலும் குடித்து வந்தால் வயிற்றில் உள்ள கிருமிகள், புழுக்கள் நீங்கும்.
 
புதினாவில் இருந்து காதுவலி, வீக்கம், சைனஸ், மூட்டுவலி ஆகியவற்றுக்கான மருந்துகள் தயாரிக்கப்படுகிறது. தலைவலி குணமாக புதினா எண்ணெய் வலியுள்ள பகுதியில் மேல் பூச்சாக பூச வேண்டும். இரவில் படுக்கும் போது தடவிக் கொண்டு உறங்க மிகுந்த பலன் தரும்.
 
புதினா இலையை நிழலில் காயவைத்து, ஒரு பிடி அளவு 1 அல்லது 1 ½ லிட்டர் நீரில் காய்ச்சி குடிநீராக்கி வேளைக்கு 50 மிலி வரை குடிக்க காய்ச்சல் குணமாகும்.
 
கோடை காலங்களில் மக்கள் பெரும்பாலானவர்களுக்கு உடல் அதிக உஷ்ணமடைந்து கோடைக்கால ஜுரம், உஷ்ணக் கட்டிகள் ஏற்படுவது மற்றும் இன்னபிற உடல்  உபாதைகள் உண்டாகி துன்புறுத்துகின்றன. இத்தகைய பிரச்சனைகளை தவிர்ப்பதற்கு கோடைக்காலங்களில் புதினா இலைகளை தினமும் பக்குவம் செய்து  சாப்பிடுவதும், பானங்களில் சிறிது புதினா இலைச்சாறு கலந்து அருந்துவதாலும் உஷ்ண பாதிப்புகள் குறைகிறது.

அற்புத பயன்களை அள்ளி தரும் கஸ்தூரி மஞ்சள்...!!

அற்புத பயன்களை அள்ளி தரும் கஸ்தூரி மஞ்சள்...!!

கஸ்தூரி மஞ்சள் அடிபட்ட வலிகளுக்கும், மூக்கில் வரும் நோய்களுக்கும், குன்ம வயிற்று வலிக்கும், கட்டிகள் உடையவும், தேமலைப் போக்கவும் பயன்படுகிறது. மேலும், இது மணம் தரும் வாசனைப் பொடிகள் தயாரிக்கவும், குளிக்க உதவும் தைலங்களில் சேர்க்கவும் பயன்படுகிறது. 
* இளம் பெண்களில் சிலருக்கு முகத்தில் ஆண்களைப் போல மேலுதட்டின் மீது முடி வளர்வதுண்டு. இதைப் போக்க கஸ்தூரி மஞ்சளைப் பொடித்து அல்லது  குழைத்து முகத்தில் பூசிக் கழுவி வந்தால் முடி வளர்வது தடைப்படும். முகத்தில் பொலிவு ஏற்படும்.
* பெண்கள் கஸ்தூரி மஞ்சள் கிழங்கைப் பொடித்து, உடல் முழுவதும் பூசி, சற்று நேரம் கழித்து குளித்தால் தோல் நோய்கள் நீங்கும். கரப்பான் புண்கள் விரைவில்  குணமாகும்.

* கஸ்தூரி மஞ்சளை இடித்துத் தூள் செய்து துணியில் சலித்து எடுக்க வேண்டும். இதில் ஐந்து குன்றிமணி அளவு தேனில் கலந்து சாப்பிட்டால் குன்ம நோய்கள், மற்றும் வயிற்று வலி ஆகியவை குணமாகும்.

Kasthuri manjal



 கஸ்தூரி மஞ்சள் சாதாரண மஞ்சளை விடச் சற்று மணம் அதிகமுள்ளது. தோல் நோய்களைப் போக்கும் தன்மையைப் பெற்றது. கஸ்தூரி மஞ்சளை வெங்காயச்  சாற்றில் குழைத்துக் கட்டிகள் மீது பூசினால் கட்டிகள் உடையும்.

கஸ்தூரி மஞ்சளை அரைத்துச் சூடு படுத்தி அடிபட்ட இடத்தில் தடவினாலும், கட்டினாலும் வீக்கமும் வலியும் குறையும்.
* கஸ்தூரி மஞ்சள் தூளைத் தேங்காய் எண்ணெயில் கலந்து அடிபட்ட புண் அல்லது சிரங்குகளுக்கு மேல் பூசினால் விரைவில் குணமாகும்.
* சாதாரண மஞ்சளுக்குப் பதிலாக, பெண்கள் கஸ்தூரி மஞ்சளை இடித்துத் தூளாக்கியோ கல்லில் அரைத்தோ முகத்திற்குப் பூசி வந்தால், முகத்தில் பொலிவு ஏற்படும். முகப் பருக்கள், தேமல்கள் ஆகியவை வாராமல் பாதுகாக்கும்.

பாசிப்பயறு மாவை பயன்படுத்தி முகத்தை பொலிவாக்கும் எளிய குறிப்புக்கள்...!!

பாசிப்பயறு மாவை பயன்படுத்தி முகத்தை பொலிவாக்கும் எளிய குறிப்புக்கள்...!!


Beauty Tips

பெண்கள் அழகிற்கு அதிக முக்கியத்துவம் கொடுகின்றனர். அதற்காக அழகு நிலையங்கள் மற்றும் பல க்ரீம்களை தேடி அலைகின்றனர். ஆனால் நம் முன்னோர்கள் வீட்டின் சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டு தான் உடலைப் பராமரித்து வந்தார்கள். 

மஞ்சள் தூள், தயிர், பால், கடலை மாவு, பாசிப்பயறு மாவு போன்றவற்றை கொண்டே அழகை மேம்படுத்தி வந்தனர். பாசிப்பயறு மாவை தினமும் முகத்திற்கு  பயன்படுத்தினால், முகத்தில் ஆங்காங்கு உள்ள முகப்பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் மறைந்து, முகம் பொலிவாகும். 
 
1 ஸ்பூன் பாசிப்பயறு மாவை, எடுத்து அதனுடன் 1/2  ஸ்பூன் தேன் கலந்து முகத்தில் தடவுங்கள். 10 நிமிடம் கழித்து முகத்தை கழுவ வேண்டும். தினமும் இதனை  தொடர்ந்து செய்து வந்தால் ஒரே வாரத்தில் முகப்பருக்கள் மட்டுமின்றி அதன் தழும்புகளும் மறைந்து விடும்.
 
சில பெண்களுக்கு முழங்கை மற்றும் கழுத்துகளில் கருமையாக இருக்கும். இத்தகைய கருமையைப் போக்குவதற்கு ஒரு அருமையான மாஸ்க் என்றால் அது பாசிப்பயறு மாவு மாஸ்க் தான். அதற்கு பாசிப்பயறு மாவில் தயிர் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கருமையாக உள்ள இடங்களில் தடவி 30 நிமிடம் ஊற  வைத்து கழுவ வேண்டும். பின்னர் நல்லெண்ணெய் கொண்டு மசாஜ் செய்தால் கருமை விரைவில் போய்விடும்.
 
1 ஸ்பூன் பாசிப்பயறு பொடியுடன் 2 ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் மாஸ்க் போல் போடுங்கள். 10 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ  வேண்டும். தினமும் இதனை செய்து வந்தால் சரும நிறம் அதிகரிக்கும். உங்களுக்கு வறண்ட சருமமாக இருந்தால் எலுமிச்சை சாறுக்கு பதிலாக பால் கலந்து  பயன்படுத்தலாம். 

சில பெண்களுக்கு முகம் மற்றும் வாய்க்கு மேலே மீசை போன்று முடி வளரும். அத்தகைய முடியின் வளர்ச்சியை தடுப்பதற்கு பாசிப்பயறு மாவில் மஞ்சள் தூளை  சேர்த்து நீர் ஊற்றி பேஸ்ட் செய்து தினமும் காலை மற்றும் மாலையில் முடி வளரும் இடத்தில் தடவி ஊறவைத்து கழுவி வந்தால் நாளடைவில் முடியின்  வளர்ச்சி தடைபடுவதை உணரலாம்.

முக பராமரிப்பிற்கு உதவும் இயற்கை அழகு குறிப்புகள்...!!

முக பராமரிப்பிற்கு உதவும் இயற்கை அழகு குறிப்புகள்...!!



தினமும் காலையில் எழுந்ததும் ஒரு லிட்டர் தண்ணீர் குடித்து வந்தால் அன்றைய நாள் முழுவதும் சுறுசுறுப்பாக வலம் வருவீர்கள். சோர்வு என்பதே  எட்டிப்பார்க்காது. 

* தினமும் காலை, மாலை வேளைகளில் 5 நிமிடம் மூச்சுப்பயிற்சி செய்து வந்தால் அன்றைய தினம் முழுவதும் ‘ப்ரெஸ்’ ஆக காணப்படுவீர்கள்.
 
* பப்பாளி இலைகளின் சாறு காய்ச்சலைப் போக்கும் மருந்தாக பயன்படுகிறது. இதய நோயைக் குணப்படுத்தவும் இது உதவுகிறது.
 
* தினமும் காலையில் எழுந்ததும் பழங்கள் சாப்பிடுவது இளமையை அதிகரிக்கும். குறிப்பாக, ஆப்பிள், ஆரஞ்சு, பப்பாளிப் பழங்கள் சாப்பிடுவது நல்லது.
 
* தினமும் காலையில் ஒன்று அல்லது இரண்டு கேரட்டை பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடலில் ஒருவித மினுமினுப்பை பெறலாம்.

பப்பாளி தோலில் உள்ள மருக்கள் மற்றும் கரும் புள்ளிகளை நீக்குகிறது. இதன் விதைகளும் பூச்சிகளை அகற்றும் மருந்து தயாரிக்க பயன்படுகிறது.
 
* கறிவேப்பிலையின் இளம் தளிர்களை காய வைத்து பொடியாக்கி, அதை தேங்காய் எண்ணெயில் கலந்து தலையில் தேய்த்து வந்தால் முடி கருகருவென்று  வளரும்.
 
* தயிருடன் கடலை மாவு சேர்த்து முகத்தில் அப்ளை செய்து வந்தால் முகப்பரு தொல்லை வராது.

குட்டி தூக்கம் நல்லதா ?


பகலில் தூங்கினாலே உடல் குண்டாகி விடும் என்று பகலில் தூங்காமல் இருப்பவருக்கு ஒரு நற் செய்தி .

பகலில் தூங்கினால் உடல் குண்டாகிவிடும் என்பது தவறான கருத்து .வயிறு நிறைய சாப்பிட்டு விட்டு அளவுக்கு அதிகமாக தூங்கினால் தான் ஆபத்து என்கிறது ஆய்வு முடிவுகள் .
இரவில் 6 மணி முதல் 8 மணி நேரம் வரை தூங்குவது உடலுக்கு நல்லது .
நமது உடல் ஒரு நாளைக்கு இரண்டு வேலை தூங்கும் விதமாகதான்  அமைக்க பட்டுள்ளது    .

காலை முதல் மாலை வரை தொடர்ந்து வேலை செய்வதால் உடலும் மனமும் சோர்வடைகிறது . அந்த நேரத்தில் சிறிது நேரம் குட்டி தூக்கம்  நம் உடலையும் மனதையும் புத்துணர்ச்சி பெற வைக்கிறது .


கலிபோர்னிய ஆய்வின் முடிவில் தெரிவிக்கப்பட்டது  என்னவென்றால்  பகலில் போடும் குட்டி தூக்கம் மூளையின் செயல்  திறன் அதிகரித்து அறிவு திறன் வளர்கிறது என்கிறது .
பகல் நேரத்தில் தூங்குவது இதயத்திற்கும் நல்லது என்கிறது .
பகலில் அளவாக தூங்கினால் மட்டுமே நல்லது .வயிறு நிறைய சாப்பிட்டு விட்டு அரை மணி நேரம் என்பது ஒரு மணி நேரம் இரண்டு மணி நேரம் என்று நீண்டால்  நீரிழிவு நோய் ஏற்பட வாய்ப்புள்ளது .

அற்புத பலன் தரும் இயற்கை அழகு குறிப்புக்கள்...!!

அற்புத பலன் தரும் இயற்கை அழகு குறிப்புக்கள்...!!



இரவு படுக்கும் முன், புதினா சாறு இரண்டு தேக்கரண்டி, அரை மூடி எலுமிச்சம்பழ சாறு ஆகியவற்றுடன் பயிற்றம்பருப்பு மாவை கலந்து முகத்தில் தடவிக்  கொண்டு பத்து நிமிடம் ஊறிய பிறகு ஐஸ் ஒத்தடம் கொடுக்க முகம் சுத்தமாகும். பருவினால் ஏற்பட்ட தழும்பும் மறையும்.

நகங்களை வெட்டும் முன் எண்ணெயை தடவிவிட்டு, சிறிது நேரம் கழித்து நகத்தை வெட்டினால், விரும்பும் வடிவத்திலும், அழகாகவும் வெட்ட இயலும்.
 
கூந்தலில் எண்ணெய் பசை அதிகமாக இருந்தால், கோழி முட்டையில் கொஞ்சம் சர்க்கரையை கலந்து தலையில் லேசாக தடவிக்கொண்டு பிறகு தலைக்கு ஊற்ற  வேண்டும். இதனால் எண்ணெய் பசை நீங்கி முடி அழகு பெறும்.
 
தேநீரில் வடிகட்டிய பின், மிஞ்சும் தேயிலைத் தூளில் எலுமிச்சை சாறை பிழிந்து, தலையில் தேய்த்துக் குளித்தால், தலைமுடி பளபளப்பாகும்.
 
வேப்பிலை, புதினா, சிறிது மருதாணி மற்றும் குப்பைமேனி இலைகளை காயவைத்து, தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் சிறிது எடுத்து, பாலில் குழைத்து,  முகத்தில் பூசி, 20 நிமிடம் ஊற வைத்து குளித்தால், முகம் வோடிக்குரு வராமல், வெளியில் கறுத்துப் போகாமல் இருக்கும்.
 
இளம் சூடான ஒரு லிட்டர் நீரில், இரண்டு ஸ்பூன் உப்பைப் போட்டு, கண்களை கழுவினால் கண்கள் பிரகாசமாக இருக்கும்.
 
கை, கால் முட்டிகளில் கறுப்பு நிறம் அதிகமாக இருந்தால், தொடர்ந்து அந்த இடத்தில் எலுமிச்சம்பழ சாற்றை தேய்த்து சோப்பு போட்டு குளிக்க வேண்டும் நாளடைவில் கறுப்பு நிறம் போய் விடும். தோல் வறண்டும், சுருக்கமும் இருந்தால் ஆலிவ் ஆயிலைப் பூசி, சிறிது நேரம் ஊற வைத்து, சோப்பு போட்டு குளிக்க  வேண்டும்.

சரும பிரச்சனைகளுக்கு எளிதில் தீர்வு தரும் ஆவாரம் பூ....!!

சரும பிரச்சனைகளுக்கு எளிதில் தீர்வு தரும் ஆவாரம் பூ....!!


Aavaram Poo

வறண்ட சருமம் என்பது பல்வேறு நோய்களின் வெளிப்பாடு. தைராய்டு, சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு வறண்ட சருமம் ஏற்படும். இப்பிரச்னையை போக்க  அதிகளவில் பழங்கள் எடுத்து கொள்ள வேண்டும்.


ஆவாரம்பூ, பனங்கற்கண்டு, விளாமிச்சை ஆகியவற்றை கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி காலையில் வெறும் வயிற்றில் குடித்துவர வறண்ட சருமம் மாறும். தோல் மென்மையாகவும், பொலிவுடனும் இருக்கும். ஆவாரம் பூ பல்வேறு நன்மைகளை கொண்டது. வறண்ட சருமத்துக்கு மருந்தாக விளங்குகிறது.
 
அருகம் புல்லை பயன்படுத்தி மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: அருகம்புல், கீழாநெல்லி, தயிர். 100 மில்லி அருகம்புல் சாறுடன், பெரிய  நெல்லிக்காய் அளவுக்கு கீழாநெல்லி இலை பசை சேர்க்கவும். இதனுடன் ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்து கலந்து சாப்பிட்டுவந்தால் வறண்ட சருமம் மாறும். தோல்  பொலிவு பெறும். உடலுக்கு போதிய சத்துக்கள் கிடைக்கும். தோல் மென்மையாகும்.
 
வறண்ட சருமத்துக்கு கீழாநெல்லி மருந்தாகிறது. பல்வேறு நன்மைகளை கொண்ட கீழாநெல்லி ஈரலை பலப்படுத்தும் தன்மை கொண்டது. உடலுக்கு குளிர்ச்சி  தரக்கூடியது. மருத்துவ குணங்களை உடைய அருகம்புல் நோய் எதிர்ப்பு சக்தி உடையது. பூஞ்சை காளான்கள், நுண்கிருமிகளை போக்க கூடியது. ரத்தத்தை  சுத்திகரிக்க கூடியது. வயது முதிர்வை தடுக்கும் தன்மை உடையது. அருகம்புல் புரதச்சத்து கொண்டது.
 
ஆவாரம் மொட்டு, இலை ஆகியவற்றை வெயிலில் காயவைத்து பொடி செய்து கொள்ளவும். இந்த பொடியுடன் பால் சேர்த்து கலந்து வறண்ட சருமத்தில் பூசி சுமார் 15 நிமிடங்கள் கழித்து கழுவினால் வறண்ட சருமம் சரியாகும். தினமும் இவ்வாறு செய்வதால் தோல் எண்ணெய் பசை வர ஆரம்பிக்கும். தோல் மென்மையாகும்.
 
ஆவாரம் பொடி, கஸ்தூரி மஞ்சள், கசகசா ஆகியவற்றை நீரில் சேர்த்து கலந்து மேல் பூச்சாக பூசி சிறிது நேரம் கழித்து குளித்தால், வறண்ட சருமம் மாறும். தோல்  பளபளப்பாகும். தோல் ஆரோக்கியத்தை அடையும். எளிதில் கிடைக்க கூடிய அருகம்புல், கீழாநெல்லி, ஆவாரம்பூ போன்றவற்றை பயன்படுத்தி இல்லத்தில்  இருந்தவாறே வறண்ட சரும பிரச்னைகளுக்கு எளிதில் தீர்வு காணலாம்.

கழுத்தில் ஏற்படும் கருமையை நீக்கும் எளிய இயற்கை அழகு குறிப்புகள்...!!

கழுத்தில் ஏற்படும் கருமையை நீக்கும் எளிய இயற்கை அழகு குறிப்புகள்...!!


Health

பல பேருக்கு கழுத்துப் பகுதி மட்டும் கருப்பு நிறம் அதிகம் நிறைந்ததாக இருக்கும். உடல் முழுவதும் மாநிறத்திலிருந்து, கழுத்து, சற்று கருப்பு நிற தோற்றத்தில் இருந்தாலும் அவ்வளவாக வெளியில் தெரியாது. ஆனால் சிலபேருக்கு கழுத்தில், கருமை நிற வர்ணம் பூசியது போல் பளிச்சென்று வெளியில் தெரியும்.
தேன், எலுமிச்சை, சர்க்கரை இந்த மூன்று பொருட்களுக்கும் சருமத்தை அழகாக்கும் தன்மை அதிகமாகவே உள்ளது. ஆகவே தேன் ஒரு சிறிய மூடி அளவு,  எலுமிச்சைசாறு ஒரு சிறிய மூடி அளவு, சர்க்கரை 1/2 ஸ்பூன், என்ற அளவில் ஒன்றாகக் கலந்து கழுத்துப்பகுதியில் போட்டு தினம்தோறும் பத்து நிமிடங்கள் வரை  லேசாக மசாஜ் செய்து, அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவி விடுங்கள். 
 
வாரத்தில் மூன்று நாட்கள் இப்படி செய்யலாம். ஒரு வாரத்திலேயே நல்ல பலன் உள்ளதை உங்களால் கண்கூடாக காணமுடியும். இந்த முறையை கை முட்டி, கால்  முட்டி போன்ற இடங்களில் ஏற்படும் கருமை நிறம் மாறுவதற்கும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
 
கற்றாழை உள்ளே இருக்கும் ஜெல்லை தனியாக எடுத்து, இரவுநேரங்களில் கழுத்தில் போட்டு பத்து நிமிடங்கள் வரை மசாஜ் செய்து விட்டு, மறுநாள் காலை அதை  கழுவிக் கொள்ளலாம். இப்படி தொடர்ந்து செய்து வர 10 நாட்களில் கருமை நிறம் முழுமையாக உங்கள் கருத்தை விட்டுப் போய்விடும். இதே முறையை கை  முட்டி, கால் முட்டி கருமை நிறம் மாறுவதற்கும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
 
சூரியனின் ஒளி நேரடியாக படும் பாகம் ஒரு நிறமாக இருக்கும். சூரிய ஒளி படாமல் இருக்கும் பகுதி ஒரு நிறமாக இருக்கும். சூரியனின் ஒளி பட்டு நம்முடைய  சருமம் கருமை நிறம் அடைந்தால், அந்த இடங்களில் எல்லாம் ஆலிவ் எண்ணையை போட்டு நன்றாக மசாஜ் செய்து அரைமணி நேரம் ஊற வைத்து, அதன் பின்  குளிக்க வேண்டும். 


கற்றாழை எனும் அற்புத மூலிகை



உடலில் உள்ள அழுக்குகள் மற்றும் டாக்ஸின்களை அகற்ற உதவும் கற்றாழை 


முகத்திலுள்ள கரும்புள்ளிகள் தழும்புகள் வெயில் பாதிப்புகள் உலர்ந்த சருமம் என சரும நோய் எதுவாக இருந்தாலும் சிறிது கற்றாழைச் சாறை தினமும் தடவி வர நல்ல குணம் கிடைக்கும். ஆண்கள் சவரம் செய்யும் பொழுது ஏற்படும் கீறல்கள் காயங்களுக்கும் உடனடி நிவாரணம் பெற கற்றாழைச் சாறை பயன்படுத்தலாம். 

தீக்காயங்களுக்கும் உடனடி தீர்வு கற்றாழைச் சாறுதான். இதன் சாறை இரவு வேளையில் முகத்தில் தேய்த்து காலையில் வெந்நீரால் கழுவ முகத்தில் உள்ள கருமை நீங்கி முகம் பொலிவு பெறும்.

சருமத்தில் ஏற்படும் எரிச்சலை அடக்கி சருமத்திற்கு குளிர்ச்சி தரும். திசுக்களைப் புதுப்பித்து ஈரப்பதம் அளிக்கும். எல்லா வகை சருமத்திற்கும் ஏற்றது. முகத்தின் சுருக்கங்களைப் போக்கி புத்துணர்ச்சியையும் இளமைப் பொலிவையும் தக்க வைத்துக் கொள்ள உதவும்.

தலைமுடி பராமரிப்பில் கருப்பாகவும், வளர்ச்சியைத் தூண்டவும் பயன்படுகிறது. தலையில் ஏற்படும் கேசப் பிரச்னைகள் மற்றும் பொடுகை நீக்குகிறது. கற்றாழை சோற்று பகுதியை தேங்காய் எண்ணெயுடன் காய்ச்சி தலைக்குத் தேய்த்து வர கேசம் நன்கு செழித்து வளரும்.

எண்ணெய் குளியல் செய்ய கண் குளிர்ச்சி மற்றும் சுக நித்திரை உண்டாகும். கற்றாழை சாறு நமது தோலில் நீரை விட நான்கு மடங்கு வேகமாக கற்றாழைச் சாறு ஊடுருவக் கூடியது. வைட்டமின் சி மற்றும் பி சத்துகளும் தாதுக்களும் நிறைந்தது.
தோல் இறுக்கத்திற்கு சுகமளிக்கும் மருந்தாகிறது. 

சருமத்திலுள்ள கொலாஜன் எனப்படும்  புரோட்டீன் கற்றாழையில் அதிகம் காணப்படுவதால் முகத்திலுள்ள சுருக்கம் வயோதிக தோற்றத்தை குணப்படுத்துகிறது.

மலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்கள் கற்றாழை ஜூஸை தினமும் காலையில் குடித்து வரலாம். மேலும் கற்றாழை ஜூஸ் மலக்குடலின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும். உங்களுக்கு செரிமான கோளாறுகள் அடிக்கடி ஏற்படுமாயின், தினமும் ஒரு டம்ளர் கற்றாழை ஜூஸ் குடித்து வாருங்கள். இதனால் செரிமான பிரச்சனைகள் நீங்குவதோடு, வயிற்று வலி மற்றும் நெஞ்செரிச்சல் ஏற்படுவதும் விலகும்.

நீரிழிவு நோயாளிகள் கற்றாழை ஜூஸை தினமும் குடித்து வருவது நல்லது. ஏனெனில் கற்றாழை ஜூஸ் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராகப் பராமரிக்க உதவும்.

– அனைவருக்கும் பகிருங்கள்

கண் கருவளையம் மறைய எளிய மருத்துவ டிப்ஸ்..!

      அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்பது பழமொழி. நமது உடலில் உள்ள சத்து குறைபாடு மற்றும் நோய்கள் போன்றவற்றை நமது முகம் கண்ணாடி போல...