Thursday, May 7, 2020

சிவப்பழகு தரும் பீட்ரூட் கிரீம்



தேவையான பொருட்கள்
ஒரு பீட்ரூட் காய்
தேசிக்காய் or லெமன்  சாறு சில துளிகள்
கற்றாழை ஜெல் 3 or 4 தே. க
(கிரீம் வடிவில் வர   கடையில் விற்கும்  கற்றாழை ஜெல்   உபயோகிப்பது சிறந்தது )
செய்முறை :
#பீட்ரூட் தோல்நீக்கி கிரேட் பன்னிக்கொள்ளவும்.
அதை பிழிந்து சாறு இரண்டு கரண்டி வடித்து எடுத்து  கொள்ளவும்.
#இதை கற்றாழை ஜெல் உடன் கலந்து கொள்ளவும்.
#கடைசியாக சில துளி எலுமிச்சை சாறு சேர்க்கலாம்.
#ஈரமில்லா மூடிய பாத்திரம் ஒன்றில் இட்டு ஒரு கிழமை வரை குளிர்சாதன பெட்டியில் வைத்து  உபயோகிக்கலாம்.

பூசும் முறை :இரவில் தூங்கும் முன் நன்கு கழுவி துடைத்த முகத்தில்  மற்றும் கழுத்தில் நன்கு பூசி சில வினாடிகள் மசாஜ் செய்து விடுங்கள். காலையில் கழுவிவிடலாம்.

பயன்கள் :

சருமத்தின்  ஈரப்பதனை பேணுகிறது.
சருமத்தை ஜொலிக்க செய்வதுடன் சிவப்பழகு தருகிறது.
சருமத்திற்கு போசாக்களித்து சரும நிறத்தை பேணுகிறது.
இதை உதட்டில் பூசுவதன் மூலம் வறண்ட கருத்த உதடுகளை சரி செய்யலாம்
By :hafza fiaz

No comments:

Post a Comment

கண் கருவளையம் மறைய எளிய மருத்துவ டிப்ஸ்..!

      அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்பது பழமொழி. நமது உடலில் உள்ள சத்து குறைபாடு மற்றும் நோய்கள் போன்றவற்றை நமது முகம் கண்ணாடி போல...