Wednesday, April 29, 2020

சுகரை குணமாக்குமா எருக்க இலை செருப்பு?


 பரவும் போலி வைத்தியம்.. மருத்துவர்கள் எச்சரிக்கை!


முறையாகத் தெரிந்துகொள்ளாமல் வைத்தியம் செய்யும்போது ஒன்று வீண் முயற்சியாகப் போய்விடும் அல்லது பின்விளைவுகளை ஏற்படுத்திவிடும்" - என்கிறார் சித்தமருத்துவர் விக்ரம்குமார்.

`ஆயிரம் வேரைக் கொன்றால் அரை வைத்தியன்' என்பார்கள். பலரும் இப்போது அரைகுறையாய்த் தெரிந்துகொண்டு அறிவுரைகளை அள்ளித் தெளிக்கிறார்கள்.
இரண்டே நாள்களில் நோய் குணமாகும். இதைச் செய்தால் புற்றுநோய்க் கட்டி நீங்கும். இப்படியெல்லாம் போகிற போக்கில் யூடியூப், முகநூல், டிவி விளம்பரம் எனக் கிடைக்கும் ஊடகங்கள் வழியே பொய்ச் செய்திகளைப் பரப்பி வருகிறார்கள் என வேதனை தெரிவிக்கின்றனர் மருத்துவர்கள்.
சமீபத்தில் வீடியோ ஒன்று பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. அதில் ஒருவர் எருக்க இலைகளைச் செருப்பில் செருகி அதைக் கால்களில் மாட்டிக்கொள்கிறார். மேலும், தினமும் இப்படி ஒருமணிநேரம் நடந்தால் வாய்வு, நீர், மூட்டுவலி உள்ளவர்கள் குணமாவார்கள் என்கிறார்.
மேலும், இந்தச் சிகிச்சை சர்க்கரைநோயைப் போக்கும் என்று அவர் சொன்னது தான் ஹைலைட்டே. எருக்க இலை மருத்துவக் குணம் நிறைந்தது. ஆனால், அவர் சொல்கிற சிகிச்சைமுறையில் சந்தேகம் இருந்தது. இது பற்றி சித்த மருத்துவர் விக்ரம்குமார்.
குதிகாலில் வலி ஏற்பட்டால் எருக்க இலை சிகிச்சை செய்வது உண்டு. எருக்க இலைகள் இரண்டை எடுத்து எண்ணையில் வெதுவெதுப்பாக வாட்டிக்கொள்ள வேண்டும். செங்கல்லை அடுப்பில் வைத்து நன்றாகச் சூடுபண்ண வேண்டும். செங்கல்லைக் கொஞ்சம் ஆறவைத்து அதில் எண்ணெயில் வாட்டிய இலைகளை வைத்து அதன்மேல் குதிகாலை வைத்து வைத்து எடுக்க வேண்டும். இது ஒத்தடம் வைக்கும் முறைதான். மற்றபடி, முழுமையாய்க் குணப்படுத்துவதெல்லாம் இல்லை. மேலும், அந்த வீடியோவில் உள்ளதைப் போல வெறும் இலையை வைத்துக்கொண்டு நடந்தால் எந்தவிதப் பலனும் இல்லை. சர்க்கரைநோய், வாய்வு உள்ளிட்ட எதற்கும் இதைக்கொண்டு சிகிச்சை செய்ய முடியாது" என்றார்.

மேலும், ``கல் உப்பு மாரடைப்பைத் தடுக்கும் என்பது போன்ற போலி சிகிச்சைகளையும், அவற்றைப் பரப்புகிற போலி மருத்துவர்களையும் மக்கள் இனம் கண்டுகொள்ள வேண்டியது அவசியம். 

இப்போதெல்லாம் இணையதளங்களிலேயே எல்லா சிகிச்சைகளையும் தேடி சுயமருத்துவம் செய்துகொள்ள முயல்கிறார்கள்.
ஆனால், முறையாகத் தெரிந்துகொள்ளாமல் செய்யும்போது ஒன்று வீண் முயற்சியாகப் போய்விடும் அல்லது பின்விளைவுகளை ஏற்படுத்திவிடும்" என்று எச்சரிக்கிறார், விக்ரம்குமார்.


எல்லோரும் இயந்திர வாழ்க்கைக்குள் நுழைந்துவிட்டோம். அதனாலேயே போலிகள் வகைதொகை இல்லாமல் வளர்ந்துவிட்டன"
போலிகளிடம் கவனமாக இருக்க வேண்டும்.

நன்றி. விகடன் ஹெல்த்

No comments:

Post a Comment

கண் கருவளையம் மறைய எளிய மருத்துவ டிப்ஸ்..!

      அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்பது பழமொழி. நமது உடலில் உள்ள சத்து குறைபாடு மற்றும் நோய்கள் போன்றவற்றை நமது முகம் கண்ணாடி போல...