Sunday, September 13, 2020

தேங்காய் எண்ணெய் இருந்தால் போதும்…. முகத்தில் சுருக்கங்களே இல்லாமல் இளமையாக இருக்கலாம் தெரியுமா????




நமக்கு வயதான தோற்றத்தை தர ஆரம்பிப்பது முதலில் நம் முகத்தில் தோன்றும் சுருக்கங்களும், கோடுகளும் தான். இது போன்ற அறிகுறிகளை உங்களுக்கு உள்ளதா… கவலை வேண்டாம். அதனை சரி செய்ய வேண்டிய சரியான நேரம் இது. கடைகளில் விற்கப்படும் கிரீம்களை பயன்படுத்தும் போது முதலில் அது நமக்கு நன்மை அளிப்பது போல தெரிந்தாலும் அந்த கிரீம்களில் பயன்படுத்தப்படும் கெமிக்கல்கள் நம் சருமத்திற்கு பல பாதிப்புகளை ஏற்படுத்தும்.

எனவே இயற்கையான முறையில் இதனை சரி செய்வது தான் நமக்கு நல்லது. நம் வீட்டில் எளிதாக கிடைக்கும் தேங்காய் எண்ணெயை கொண்டு தான் நம் சருமத்தில் உள்ள சுருக்கங்களை போக்க இருக்கிறோம். ஆச்சரியமாக உள்ளதா…??? ஆம் தேங்காய் எண்ணெயில் உள்ள எக்கச்சக்க ஊட்டச்சத்துக்கள் சருமத்தை அழகாக்குவதோடு சுருக்கங்களையும் குறைக்கிறது.

ஆன்டி ஆக்ஸிடன்டுகள் கொண்ட தேங்காய் எண்ணெய் ஃப்ரீ ராடிக்கல்களால் ஏற்படும் பாதிப்புகளை போக்க வல்லது. சருமத்தில் கொலாஜென் உற்பத்தியை அதிகரித்து இளைமையான தோற்றத்தை தருகிறது. தேங்காய் எண்ணெயுடன் எதனை சேர்த்து பயன்படுத்தினால் மேற்கூறிய பலன்களை பெறலாம் என்பதை இப்போது தெரிந்து கொள்வோம்.

■மஞ்சள் தூளோடு தேங்காய் எண்ணெய்:




ஒரு பவுலில் தேங்காய் எண்ணெய் எடுத்து கொள்ளுங்கள். இதனோடு ஒரு சிட்டிகை அளவு மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த கலவையை உங்கள் முகத்தில் தடவி 15-20 நிமிடங்கள் காய விடுங்கள். பிறகு நன்றாக கழுவி விடலாம். நல்ல பலன் கிடைக்க இதனை தினமும் செய்ய வேண்டும்.

■பால், எலுமிச்சை சாற்றோடு தேங்காய் எண்ணெய்:

அடுப்பில் ஒரு தேக்கரண்டி அளவு பாலை காய்ச்சுங்கள். அதில் ஓரிரு துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்து பால் திரிந்து வரும்வரை கொதிக்கட்டும். இப்போது ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் சேர்த்து கொள்ளலாம். இது ஆறிய பிறகு முகத்தில் தடவி மசாஜ் செய்து கொள்ளுங்கள். பதினைந்து நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவி கொள்ளவும். இவ்வாறு ஒரு நாள் விட்டு ஒரு நாள் செய்து வர வேண்டும்.

■விளக்கெண்ணெயோடு தேங்காய் எண்ணெய்:


ஒரு தேக்கரண்டி விளக்கெண்ணெய் மற்றும் ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெயை கலந்து கொள்ளவும். இதனை நல்ல தாராளமாக எடுத்து முகத்தில் தடவி மசாஜ் செய்யுங்கள். இரவு முழுவதும் இதனை அப்படியே விட்டு விட்டு காலை எழுந்தவுடன் முகத்தை கழுவி கொள்ளலாம். சுருக்கங்கள் மறைய இவ்வாறு தினமும் செய்ய வேண்டும்.

      


No comments:

Post a Comment

கண் கருவளையம் மறைய எளிய மருத்துவ டிப்ஸ்..!

      அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்பது பழமொழி. நமது உடலில் உள்ள சத்து குறைபாடு மற்றும் நோய்கள் போன்றவற்றை நமது முகம் கண்ணாடி போல...