Friday, May 8, 2020

கூந்தல் வளர்க்கும் அற்புத எண்ணெய்

ஒரு வாரம் மட்டும் இதை பண்ணுங்க முடி கொட்டுறத நிறுத்துங்க

 ஆண்கள், பெண்கள் என்று இருவருக்கும் இருக்கின்ற ஒரே பிரச்சனை தான் இந்த முடி உதிர்வு பிரச்சனை, இந்த முடி உதிர்வு பிரச்சனைக்கு என்ன தான் பல செயற்கை முறைகள் இருந்தாலும், அவையெல்லம் நல்ல பலன் அளிந்துவிடுமா என்றால் நிச்சயம் இல்லை.

அவற்றை பயன்படுத்திவதினால் பலவகையான பின் விளைவுகளை தான் சந்திக்க வேண்டியதாக இருக்கும். இருப்பின்பும் இந்த முடி உதிர்வு பிரச்சனையை சரி செய்வதற்கு நம் வீட்டில் இயற்கை கூந்தல் எண்ணெய் தயார் செய்து ஒரு வாரம் மட்டும் பயன்படுத்தினால் போதும் முடி உதிர்வு பிரச்சனையை சரி செய்து, முடியை அடர்த்தியாக வளர வழிவகுக்கிறது இந்த (karunjeeragam oil) கூந்தல் எண்ணெய்.

சரி வாங்க இந்த இயற்கை கூந்தல் எண்ணெயை எப்படி தயார் செய்வது என்று இப்போது நாம் காண்போம்.


➡️கருஞ்சீரக எண்ணெய் செய்ய தேவையான பொருட்கள்:

கற்றாழை ஜெல் – ஒரு கப்
சுத்தமான தேங்காய் எண்ணெய் – ஒரு கப்
கருஞ்சீரகம் – ஒரு ஸ்பூன்
வெந்தயம் – இரண்டு ஸ்பூன்


➡️கருஞ்சீரக எண்ணெய் தயாரிக்கும் முறை

முதலில் கற்றாழையில் உள்ள தோல் பகுதியை நீக்கிவிட்டு. அவற்றில் உள்ள ஜெல்லை ஒரு பவுலில் தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.

பின்பு இரண்டு முறை தண்ணீர் ஊற்றி இந்த கற்றாழை ஜெல்லை அலசிக்கொள்ளவும். இவ்வாறு செய்வதினால் கற்றாழையில் இருக்கும் ஒரு வகையான அரிப்பு தன்மை நீங்கிவிடும்.

  பின்பு இந்த கற்றாழையை மிக்சியில் சேர்த்து  தண்ணீர் ஊற்றாமல் ஒரு கப் அளவிற்கு அரைத்து தனியாக வைத்து கொள்ளவும்.

இப்போது அடுப்பில் வாணலியை வைக்கவும் வாணலி சூடேறியது அடுப்பை மிதமான சூட்டில் வைத்து ஒரு கப் தேங்காய் எண்ணெயை ஊற்றவும் எண்ணெய் சூடேறியது, அவற்றில் ஒரு கப் கற்றாழை ஜெல்லை சேர்த்து கிளறி விடவும்.

 பின்பு ஒரு ஸ்பூன் கருஞ்சீரகத்தை இந்த எண்ணெயில் சேர்த்து கிளறிவிட வேண்டும். இந்த கருஞ்சீரகம் இயற்கையாகவே கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்க வழிவகுக்கிறது அதுமட்டும் இல்லாமல் கூந்தலுக்கு நல்ல போஷாக்காகவும் இருக்கிறது.

 பின்பு இந்த எண்ணெயில் இரண்டு ஸ்பூன் வெந்தயத்தை சேர்த்து நன்றாக கிளறிவிட வேண்டும் வெந்தயம் இயற்கையாகவே முடி உதிர்வு பிரச்சனையை சரி செய்வதற்கு வழிவகுக்கிறது, அதுமட்டுமின்றி பொடுகு பிரச்சனையை சரி செய்யும் தன்மையுடையது.

 அவ்வளவுதான் கலவைகள் அனைத்தையும் சேர்த்துவிட்டோம் இந்த கலவைகள் அனைத்தும் எண்ணெயில் நன்றாக சேரும் வரை அடுப்பை மிதமான சூட்டில் வைத்து நன்றாக கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.

எண்ணெய் நன்றாக அடங்கியதும் அடுப்பை நிறுத்திவிடவும்.

எண்ணெயை ஆறவைக்கவும், எண்ணெய் ஆறியதும் வடிகட்டி ஒரு பாட்டிலில் ஊற்றி பயன்படுத்தலாம்.


இந்த எண்ணெயை வாரத்தில் இரண்டு முறை பயன்படுத்தினால் போதும் நல்ல மாற்றத்தை தாங்களே உணருவீர்கள்.

அதுமட்டும் இன்றி இந்த எண்ணெய் குளிர்ச்சியாக இருக்கும் என்று பயப்பட தேவை இல்லை. இவற்றில் சேர்க்கப்பட்டுள்ள கருஞ்சீரகம் கூந்தலுக்கு எண்ணெயாக (karunjeeragam oil) பயன்படுத்தும்போது வெந்தயத்தின்  குளிர்ச்சி தன்மையை மறைக்கும்.

இந்த எண்ணெய் தயாரிக்கும் போது அடுப்பை மிதமான சூட்டில் தான் வைத்திருக்க வேண்டும். அதே போல் தேங்காய் எண்ணெய் ஒரு பங்கு என்றால் கற்றாழை ஜெல்லும் ஒரு பங்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.

➡️கருஞ்சீரகம் எண்ணெய் பயன்கள்

 முடி உதிர்வு பிரச்சனையை சரி செய்து. முடி அடர்த்தியா வளர உதவுகிறது.

➡️கருஞ்சீரக எண்ணெய் பயன்படுத்தும் முறை:
இந்த கருஞ்சீரக எண்ணெய் பயன்படுத்தும் முறை இந்த எண்ணெயினை வாரத்தில் மூன்று முறை பயன்படுத்தலாம்.



No comments:

Post a Comment

கண் கருவளையம் மறைய எளிய மருத்துவ டிப்ஸ்..!

      அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்பது பழமொழி. நமது உடலில் உள்ள சத்து குறைபாடு மற்றும் நோய்கள் போன்றவற்றை நமது முகம் கண்ணாடி போல...