Monday, May 11, 2020

ஸ்கினுக்கும் பாஸ்டிங் இருக்கு தெரியுமா !!



`ஸ்கின் ஃபாஸ்டிங்' - சருமத்துக்கு அழகு, ஆரோக்கியம் தரும் புது ட்ரெண்டு!
சருமத்துல ஏதாச்சும் அப்ளை செய்துட்டே இருக்கிறவங்க எல்லாம், `ஸ்கின் ஃபாஸ்டிங்' முறையை ஃபாலோ பண்றது அவசியம்.


சமீபகாலமாக, `ஸ்கின் ஃபாஸ்டிங்' எனும் சருமப் பராமரிப்பு முறை ட்ரெண்டாகிவருகிறது. குறிப்பாக, சருமத்தின் அழகு மற்றும் ஆரோக்கியத்தின்மீது அக்கறையுள்ளவர்களிடையே வேகமாகப் பரவிவரும் இந்தப் பராமரிப்பு முறை குறித்து, சரும மருத்துவர் சேது விளக்குகிறார்.

ஸ்கின் ஃபாஸ்டிங் என்றால் என்ன?


வயிற்றை சில மணி நேரம் காலியா விட்டு, செரிமான உறுப்புகளுக்கு ஓய்வுகொடுக்கிறது, விரதம். அதுபோல, சருமத்தின்மீது எந்த காஸ்மெடிக் பூச்சும் இல்லாம, அதன் துவாரங்கள் அடைபடாம, குறைந்தபட்சம் சில மணி நேரம், சில நாள்கள் வரை விடுறது சரும விரதம்.''


இது எதற்காகச் செய்யப்படுகிறது?
நம்ம உடம்புல இருக்கிற எல்லா உறுப்புகளைவிடவும் பெரிய உறுப்பு, சருமம். ஆனா, அதை நாம சரியா பராமரிக்கிறோமா? அந்தக் காலத்துல தினமும் குளிக்கிறதைத் தவிர பெருசா எந்த விதமான சருமப் பராமரிப்பையும் யாரும் பண்ணதில்லை. அதிகபட்சம், பெண்கள் மஞ்சள் தேய்ச்சுச் குளிப்பாங்க அவ்வளவுதான். ஆனா இந்தக் காலத்துல, ஆணோ, பெண்ணோ யாரா இருந்தாலும் தங்களை அழகுபடுத்திக்கிற விஷயத்துல ரொம்பவே அக்கறை காட்டுறாங்க.

அழகா இருக்கணும்னு நினைக்கிறது நல்ல விஷயம்தான். ஆனா, அதுக்காக நாம பண்ற விஷயங்கள் சரியானதுதானான்னு புரிஞ்சு பண்றது நல்லது. சரியில்லாத விஷயங்களைச் சரி பண்ணிக்கணும். அதுக்கான வழிதான் இந்த `ஸ்கின் ஃபாஸ்டிங்'.
யாரெல்லாம் இதைச் செய்யலாம்?
தினசரி மேக்கப் பொருள்களைப் பயன்படுத்துறவங்க, எந்நேரமும் மாய்ஸ்ச்சரைஸர், சன் ஸ்க்ரீன் லோஷன் போன்ற ஸ்கின்கேர் பொருள்களைப் பயன்படுத்துறவங்கன்னு சருமத்துல ஏதாச்சும் அப்ளை செய்துட்டே இருக்கிறவங்க எல்லாம், `ஸ்கின் ஃபாஸ்டிங்' முறையை ஃபாலோ பண்றது அவசியம்.

மேக்கப்
சிலர், வெளியே போனாலும் வீட்டுல இருந்தாலும், எந்நேரமும் பவுடர் போட்டுட்டுதான் இருக்கணும், லிஃப்ஸ்டிக் போடாம இருக்க முடியாதுனு கிட்டத்தட்ட அந்தப் பழக்கங்களுக்கு அடிமையா மாறிடுவாங்க. அந்த அடிக்‌ஷனிலிருந்து அவங்களை மீட்க, ஸ்கின் ஃபாஸ்டிங் கைகொடுக்கும்.


⏩️⏩️⏩️எப்படிச் செய்யணும்
* தினமும் குளிக்கிறது, முகம் கழுவுறதைத் தவிர வேற எந்த ஸ்கின் கேர் புராடக்ட்ஸையும் பயன்படுத்தாம சருமத்தை அப்படியே விடலாம். வீட்டுல இருக்கிறவங்களுக்கான வழிமுறை இது.
சருமப் பராமரிப்பு அவசியம்
இது, சருமத்தில் உள்ள அழுக்குகளை வெளியேற்றி, இறந்த செல்களை நீக்கி, சருமத்தை ஆரோக்கியமா வெச்சிருக்க உதவும். ஓய்வு நேரங்களில், சருமத் துவாரங்களை (skin pores) அடைக்கும் விதமா சருமத்தில் காஸ்மெட்டிக், ஸ்கின் கேர் புராடக்ட் எதையும் பயன்படுத்தாம, சருமத்தை அப்படியே விடணும். பணிக்குச் செல்லும் பெண்களுக்கான வழிமுறை இது.


🚫🚫யாரெல்லாம் ஸ்கின் ஃபாஸ்டிங் மேற்கொள்ளக் கூடாது?
நார்மல், ஆய்லி, டிரை, காம்பினேஷன், சென்சிட்டிவ் போன்றவை முக்கியமான சரும வகைகள்.
ஆனா, சிலருக்கு சருமத்துல சோரியாசிஸ், பிக்மென்டேஷன், முகப்பருன்னு சில பிரச்னைகள் இருக்கும். இவங்க, `ஸ்கின் ஃபாஸ்டிங்கை'த் தவிர்த்து, சரும மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில், அவங்க பரிந்துரைத்த மருந்துகளை சருமத்தில் தவறாமல் பயன்படுத்தணும்.


⏩️⏩️ஸ்கின் ஃபாஸ்டிங்கின் பலன்கள் என்னென்ன?
நிறைய பேர் விளம்பரங்கள், ஆன்லைன்ல புராடக்ட் ரிவ்யூ எல்லாம் பார்த்து, தங்களோட சருமத்துக்குப் பொருந்தாத ஸ்கின் கேர், மேக்கப் அயிட்டங்களைத் தொடர்ந்து பயன்படுத்திட்டு வருவாங்க. தங்கள் சருமத்தோட ப்ளஸ், மைனஸ் என்னன்னே தெரியாம, அதை ஒரு நிபுணரிடம் கேட்டும் தெரிந்துகொள்ளாமல் இப்படி கண்ணில் படும் புராடக்ட்டுகளை எல்லாம் பயன்படுத்துவதால், அவங்க சருமம் தன் இயற்கையான தன்மையை இழந்துடும்.

தொடர்ந்து எல்லா புராடக்ட்டுகளையும் பயன்படுத்திட்டே வந்தால், சருமத்தின் இம்யூனிட்டியும் குறைஞ்சிடும். இதனால சருமத்தில் தொற்றுகள் ஏற்பட வாய்ப்பு உண்டாகும். மேலும், சருமம் தன் பிரச்னைகளை வெளிப்படுத்த வாய்ப்பே தராத வகையில் இந்த காஸ்மெட்டிக் கோட்டிங்குகள் அமையும்.

ஆனா, ஸ்கின் ஃபாஸ்டிங்கை கடைபிடிக்கும்போது, சருமத்தை அதன் இயல்போடு இருக்கவிடுவது மற்றும் தன் பிரச்னைகளை வெளிப்படுத்திக்க அனுமதிக்கிறது மூலமா, அதன் தற்போதைய தன்மை, சிக்கல்கள் என்னன்னு கண்டுபிடிச்சு சரிசெய்யலாம்.

அதாவது, குறைந்தது ஒரு வாரத்துக்கு எந்த காஸ்மெட்டிக் அயிட்டத்தையும் பயன்படுத்தாம இருக்கும்போது, சருமத்தின் ப்ளஸ், மைன்ஸ் மற்றும் பிரச்னைகளைத் தெரிஞ்சுக்கலாம். சருமம் இடையூறு இல்லாம சுவாசிக்கும்போது, இயல்பா சுரக்கும் சீபம், சருமத்தின் ஈரப்பதம்னு இதில் எது தேவையான அளவுக்கு சுரக்குது, எது தேவைக்கும் அதிகமா/குறைவா சுரக்குதுனு கண்டுபிடிக்க முடியும்.


மேலும், நீங்க இதுவரை பயன்படுத்திட்டு வந்த காஸ்மெட்டிக் அயிட்டங்களை நிறுத்தும்போது, அதன் விளைவா முகப்பரு, அலர்ஜி, சருமம் கறுத்துப்போவது மாதிரியான பிரச்னைகள் வந்தா, உடனடியா சரும மருத்துவரை அணுகி பிரச்னையைக் கண்டறிந்து சரிசெஞ்சுக்கலாம்.
மொத்தத்துல, ஒருவர் தன் சருமத்தின் தன்மை என்ன, ஏதாச்சும் பிரச்னை இருக்கான்னு கண்டுபிடிச்சு சரிசெய்றதுக்கு ஸ்கின் ஃபாஸ்ட்டிங் ரொம்பவே அவசியம்" என்று விளக்கமாகச் சொல்லி முடித்தார், டாக்டர் சேது ராமன். 

No comments:

Post a Comment

கண் கருவளையம் மறைய எளிய மருத்துவ டிப்ஸ்..!

      அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்பது பழமொழி. நமது உடலில் உள்ள சத்து குறைபாடு மற்றும் நோய்கள் போன்றவற்றை நமது முகம் கண்ணாடி போல...