Monday, May 11, 2020

அழகுக்கு இரும்பு கீரை


முருங்கை மரத்தின் எல்லா பகுதிகளும் மனிதனுக்கு உதவுகின்றன. அதன் இலைகள், பூக்கள், காய்கள் என்று எல்லா பகுதிகளும் ஊட்டச்சத்து மற்றும் மினரல்கள் அடங்கியது. பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை தன் வசம் கொண்டுள்ளது முருங்கை. அது சரி. இதன் ஆரோக்கிய நன்மைகள் பற்றி ஓரளவிற்கு நாம் அனைவரும் அறிந்துள்ளோம்.


⏩️⏩️ஆனால் முருங்கைக்காய் அழகு சிகிச்சையில் கூட பயன்படுத்தப்படுகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?

அழகை அதிகரிப்பதற்காக முருங்கை பேஸ் மாஸ்க் இன்று பல்வேறு அழகு சிகிச்சையில் உலகெங்கிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. உங்கள் சரும அழகை பாதுகாக்க, முருங்கை இலை மற்றும் எண்ணெய் எவ்வாறு பயன்படுகிறது என்பதை பற்றி இந்த பதிவில் இப்போது நாம் காணலாம்.
♥️வயது முதிர்வு
முருங்கை எண்ணெய் அல்லது முருங்கை இலை தூள் போன்றவற்றை முகத்தில் தடவுவதால் முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள் மற்றும் சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும் கூறுகள் தடுக்கப்படுகிறது. உங்கள் முகத்தின் தோல் பகுதியை இறுக்கமாக வைக்க முருங்கை உதவுகிறது. மேலும் சுருக்கங்கள், கொப்பளங்கள் போன்றவை மறைந்து உங்கள் முகம் இளமையாக மாறுகிறது.


♥️நிறத்தை மேம்படுத்த
முருங்கைக்காயை மேல்புறமாக சருமத்தில் தடவுவதால், உங்கள் சரும நிறத்தை மேம்படுத்த உதவுகிறது. சருமத்தில் ஏற்படும் கொப்பளங்கள் போன்றவற்றை தடுத்து, சருமத்தின் சமச்சீரற்ற தன்மையைப் போக்க உதவுகிறது. முருங்கை இலைகளின் விழுதை முகத்தில் உள்ள கருந்திட்டுகள் அல்லது கொப்பளங்களில் தடவுவதால் அவை எளிதில் மறைகின்றன.

♥️கட்டிகள் மற்றும் பருக்கள்
முருங்கையில் இருக்கும் பக்டீரியா எதிர்ப்பு தன்மை காரணமாக, முருங்கை எண்ணெய்யை பருக்கள் மற்றும் கட்டிகளில் தடவுவதால் அவை மறுபடி தோன்றாமல் தடுக்கப்படுகின்றன. முருங்கை எண்ணெய்க்கு மாற்றாக முருங்கை இலைகளை அரைத்தும் கட்டிகளில் தடவலாம். ஆனால் சருமத்திற்கு சுயமாக எதாவது சிகிச்சை அளிக்கும் முன்னர்,தோல் சிகிச்சை நிபுணரிடம் ஆலோசனை பெற்று பின்னர் சிகிச்சையைத் தொடங்கலாம்.


♥️நச்சுகளை வெளியேற்ற
உடலில் உள்ள இரத்தத்தில் நச்சுகள் படிவதன் விளைவாக பருக்கள் மற்றும் கட்டிகள் தோன்றலாம். முருங்கை விதைகள் அல்லது முருங்கை தூளை தினமும் உட்கொள்வதால் இரத்தம் சுத்தம் அடைகிறது. இதனால் உங்கள் சருமம் சுத்தமாக மற்றும் ஆரோக்கியமாக மாறுகிறது.

♥️சருமத் துளைகள்
சருமத்தில் பெரிதாக காணப்படும் துளைகளின் மீது செயல்பட்டு சருமத்தை இறுக்கமாக்கி துளைகளின் அளவைக் குறைக்க முருங்கை உதவுகிறது. முருங்கையில் சரும ஆரோக்கியத்தை அதிகரிக்கும் கொலோஜென் புரதம் அதிகமாக இருப்பதால் துளைகளைக் குறைக்க உதவுகின்றன.

⏩️⏩️ஆரோக்கியமான சருமம் பெற முருங்கை பேஸ் மாஸ்க் தயாரிப்பது எப்படி?
முருங்கை தூளில் உள்ள சரும ஆரோக்கியத்தை அதிகரிக்கும் வைட்டமின்கள் காரணமாக இதனை பேஸ் மாஸ்க் தயாரிப்பில் பயன்படுத்தலாம்.
முருங்கை பேஸ்பேக்
முருங்கை இலைகளை நிழலில்  காயவைத்து பொடியாக்கினால் முருங்கை தூள் கிடைக்கும். இது அடர் பச்சை நிறத்தில் இருக்கும். 

➡️இந்த பேஸ் மாஸ்க் செய்வதற்கு உங்களுக்கு தேவையான பொருட்கள்,
முருங்கை இலை தூள்,
தேன்,
பன்னீர்,
எலுமிச்சை சாறு
தண்ணீர்.
முருங்கை இலை தூளை அரை ஸ்பூன் எடுத்துக் கொள்ளவும். இத்துடன் ஒரு ஸ்பூன் தேன் மற்றும் ஒரு ஸ்பூன் பன்னீர் சேர்த்து கலக்கவும். இதனுடன் அரை ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்க்கவும்.
ஒரு பேஸ்ட் பதம் வரும் வரையில் நன்றாக கலக்கவும். தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளவும்.
இந்த பேஸ்டை உங்கள் முகத்தில் காலையில் தடவி, 10 நிமிடங்கள் ஊற விடவும். பின்பு வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவவும்.
காய்ந்தவுடன் முகத்தை டவலில் துடைத்து பின்னர் மாயச்ச்சரைசெர் பயன்படுத்தவும். இதனால் உங்கள் முகம் பளிச்சென்று மிருதுவாக மாறும்.

➡️கூந்தல் பராமரிப்பு
கூந்தல் பராமரிப்பிலும் முருங்கை இலை தூள் பயன்படுகிறது. ஆரோக்கியமான நீளமான கூந்தல் பெற இந்த தூளை நீங்கள் பயன்படுத்தலாம். முருங்கை தூளில் உள்ள பக்டீரியா எதிர்ப்பு தன்மை காரணமாக பொடுகு மற்றும் கூதல் தொடர்பான பிரச்சனைகளைப் போக்கவும் இவை நல்ல முறையில் உதவுகிறது.

No comments:

Post a Comment

கண் கருவளையம் மறைய எளிய மருத்துவ டிப்ஸ்..!

      அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்பது பழமொழி. நமது உடலில் உள்ள சத்து குறைபாடு மற்றும் நோய்கள் போன்றவற்றை நமது முகம் கண்ணாடி போல...