Thursday, April 23, 2020

மருத்துவ பார்வையில் நோன்பு


மருத்துவ பார்வையில் நோன்பு


முஸ்லிம்கள் ரமலான் மாதம் முழுவதும் நோன்பு நோற்பதில் பல மருத்துவ பயன்கள் உள்ளன என்று இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் முஸ்லிம்கள் யாரும் தாங்கள் இப்படி நோன்பு வைப்பதால் மருத்துவ பயன்கள் அடையவேண்டும் என்ற நோக்கத்திலோ அல்லது உடம்பை குறைக்க வேண்டும் என்ற நோக்கத்திலோ நோன்பு பிடிப்பதில்லை... தன் இரட்சகன் குறிப்பிட்ட நாட்களில் குறிப்பிட்ட மணி நேரங்களில் உண்ண, பருக உடலுறவு கொள்ள தடைசெய்து உத்தரவு பிறப்பித்துள்ளான் என்ற கட்டளைக்கு அடிபணிய முஸ்லிம்கள் நோன்பு நோற்கின்றனர் ..


ஆனால் அவர்களுக்கு இரட்சகனின் கட்டளையை அடிபணிந்த நன்மை முதல் நிலையாக கிடைத்தாலும் இரண்டாம் நிலை பயனாக (secondary benefit )மருத்துவ பயன்களும் கிடைக்கின்றது பொதுவாக மருத்துவத்தில் பட்டினி இருப்பது, உணவு கட்டுப்பாடு கொள்வது எல்லாமே உடல் எடையை குறைக்கவோ அல்லது ஜீரன மண்டலத்திற்கு ஓய்வு அளிக்கவோ அல்லது இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை குறைக்கவோ மேற்கொள்ளபடுகிறது. 

முழுநேர விரதத்திலும், crash diet எனப்படும் உணவு கட்டுப்பாடு முறைகளிலும் அநேக பக்க விளைவுகள் வரலாம்.
இஸ்லாம் கூறும் நோன்பு என்பது இவைகளை விட முற்றிலும் வித்தியாசமானது. இதில் ஊட்டசத்து குறைபாடு நிலை வந்ததாக இன்று வரை எந்த ஆதாரங்களும் இல்லை. 
முஸ்லிம்கள் ரமலான் மாதம் மேற்கொள்ளும் நோன்பின் போது,( தினமும் ஒவ்வொரு வகையான மனிதன், இவ்வளவு கலோரி அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற வழிகாட்டுதல்உள்ளது ), தினம் தேவையான கலோரியை விட சிறுது குறைவாக மட்டும் எடுத்து கொள்ளுகிறார்கள். இதுபோக ரமலான் நோன்பு என்பது ஒவ்வொரு முஸ்லிம்களும் எந்தவித நிர்பந்தமும் இல்லாமல், எந்த மருத்துவர்களாலும் அறிவுருத்தபடாமல், தானாக முன்வந்து மேற்கொள்ளப்படும் கடமை.

ரமலான் மாதம் ஒருவனுக்கு சுய கட்டுப்பாடு மற்றும் சுய பயற்சி அளித்து, அப்படி அளிக்கப்பட்ட கட்டுபாடுகளும், பயிற்சிகளும் அந்த மாதத்திற்கு அப்பாலும் மற்ற காலங்களிலும் தொடரும் நம்பிக்கை தரும் மாதம். ரமலானில் பெற்ற பாடம் அது ஆகாரம் விசயத்திலும் சரி அல்லது நேர்மையிலும் சரி, அந்த மாதத்திற்கு பிறகும் மற்ற காலங்களிலும் பின்பற்றினால், அது ஒரு மனிதனின் வாழ்நாள் பூரா பயன் தரும். மற்ற விரதங்களை விட ராமலான் நோன்பு வேறுபடுவது, ரமலானில் நாம் சூரியன் உதயம் முதல் அஸ்தம் வரை (தோரயமாக ), நம் உண்ணு தல், பருகுதல், உடலுறவு கொள்வதை தவிர்க்கிறோம். இந்த நேரங்களில், நாம் தண்ணீர் அருந்துவதை முழுவதுமாக தவிர்ப்பாதல் உடலுக்கு கேடு உண்டாகும் என்று பலர் நினைக்கின்றனர். உண்மையில் தண்ணீரை முழுவதுமாக தவிர்ப்பதால், உடலில் உள்ள இரத்தம் போன்ற திரவங்கள் மிக அடர்த்தி தன்மை அடைகிறது. இதனால் சிறுது நீர்சத்து குறைவு ஏற்படலாம். ஆனால் மனித உடல், நீர்சத்து குறைவு ஏற்பட்டாலோ அல்லது நீர் அதிகம் ஆனாலோ இயல்பாகவே உடலின் நீரை பராமரிக்கும் பொறிமுறை .(water conservation mechanism )பெற்றுள்ளது.
ஒரு உண்மை என்னவென்றால், சிறுது நீர்சத்து குறைவும் மற்றும் அதனால் உடலில் ஏற்படும் நீரை பராமரிக்கும் தன்மையும் சேர்ந்து. நீண்ட ஆயுளை தரும் வல்லமை உள்ளது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

நோன்பு நோற்பதினால் உடலியல் என்னும் physiological ரீதியான நன்மைகளான, இரத்த சர்க்கரை அளவு கட்டுபடுதல், இரத்தத்தில் உள்ள கொலேஸ்டேரால் குறைதல் மற்றும் இரத்த அழுத்தம் (systolic )குறைதல் ஆகியவை ஏற்படுகிறது. உண்மையில், ரமலான் நோன்பு என்பது, மிதமான லேசான, கட்டுபாட்டில் உள்ள type 2 சர்க்கரை நோய் (இன்சுலினை சார்ந்து இராத சர்க்கரை நோய்), உடல் பருமன மற்றும் இரத்த கொதிப்பு ஆகிய நோய்களுக்கு சிறந்த பரிந்துரையாகும்.
இந்த நோய் உள்ளவர்கள் நோன்பு நோற்கும் முன், தங்களது மருத்துவர்களை ஆலோசித்து உணவு முறை, மாத்திரை சாப்பிடுவது தொடர்பாக ஆலோசனை பெறவேண்டும். (இது பற்றி பிறகு விவரமாக பார்போம் ) 1994 ஆம் ஆண்டு மொரோக்கா தலைநகர் casablanca வில் நடந்த "ஆரோக்கியமும் ரமளானும்" என்ற தலைப்பில் முதல் சர்வதேச கூட்டமைப்பு அமர்வு நடந்தது. 

அதில் உலகம் முழுவதில் இருந்தும் முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிம்கள் அல்லாத ஆராய்ச்சியாளர்கள், மருத்துவ நெறிமுறையில் ரமலான் பற்றி சுமார் 50 ஆராய்ச்சி படைப்புகளை சமர்பித்தனர். எல்லா ஆய்வுகளும் ரமலான் நோன்பால் பல மருத்துவ நோய்களின் சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்பட்டதை சுட்டிக்காட்டி இருந்தது. இதில் எந்த ஆய்விலும் நோன்பால் நோயாளியின் ஆரோக்கியம் மற்றும் அடிப்படை மருத்துவ இயல்பு நிலை (baseline medical condition ) பாதிப்பு அடைந்தாக, முடிவு இல்லவே இல்லை. எனினும் மிக மோசமான, கட்டுப்பாட்டில் இல்லாத சர்க்கரை நோயாளிகள், இன்சுலின் போடும் சர்க்கரை நோயாளிகள், இதய இரத்தக்குழாய் அடைப்பு நோய் (ஹார்ட் அட்டாக் ) நோயாளிகள், கிட்னி கல் உள்ள நோயாளிகள் நோன்பை தவிர்க்கும்போடி அறிவுறுத்தியது.


இந்த நோன்பால் உளவியல் ரீதியான நன்மைகளும் உண்டு. நோன்பு நோற்கும் போது மன அமைதியும், சாந்தியும் கிடைக்கிறது (peace and tranquility ). தனிப்பட்ட விரோதம் (personal hostility ) மற்றும் குற்ற விகிதங்கள் (crime rates ) குறைகிறது. ஏனெலில் அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள் "ஒருவன் உன்மீது அவதூறு கூறினால் அல்லது அத்துமீறினால், நீ கூறு 'நான் நோன்பு நோற்றுள்ளேன்' என்று". நோன்பினால் உளவியல் ரீதியான முன்னேற்றம் கிடைக்க காரணம், இரத்தத்தில் சர்க்கரை அளவு நல்லமுறையில் கட்டுபடுவதால். நோன்பு காலங்களில் இரவில் உபரியாக தொழுவாதல், சில நன்மைகள் கிடைக்கின்றன.


இது நோன்பு திறந்த பின்னர் உட்கொண்ட உணவு நல்ல முறையில் ஜீரணித்து, உடல் அதை உபயோக்கிக்கவும், அதனால் உண்டான அதிக கலோரி எரிக்கபடவும் உதவுகிறது. ஒரு ஆய்வு முடிவு படி, ஒவ்வொரு ரக்அத் தொழுகையும் 10 கூடுதல் கலோரிகளை நீக்குகிறது நாம் தொழுவது உடற்பயிற்சிக்காக இல்லை என்றாலும், தொழுவதன் மூலம், கூடுதல் கலோரி எரிவதுடன், மூட்டுகளுக்கு மிதமான அசைவு கிடைப்பதால், இது நல்ல படியான உடல்பயிற்சியாக அமைகிறது ரமலானில் அதிகமாக குர்ஆன் ஓதும் நடைமுறை உள்ளது. குர் ஆன் ஓதுவதால் மன அமைதி கிடைப்பதோடு, ஞாபக சக்தி அதிகரிக்கிறது. ஆகவே முஸ்லிம் நோயாளிகள் தங்கள் மருத்துவரின் மேற்பார்வையில் நோன்பு நோற்பதை மருத்துவ அறிவியல் ஊக்க்படுத்துகிறது. ஆரோக்கியமான வயது வந்த முஸ்லிம்கள், நோன்பினால் வலுவிழந்து போவோம் என்று என்ன வேண்டாம் மாறாக நோன்பு ஆரோக்கியத்தையும், சகிப்புதன்மையையும் மேம்படுத்துகிறது

மருத்துவ நெறியின் பார்வையில் - ரமலான் நோன்பு - டாக்டர் த முஹம்மது கிஸார்.(இந்தியா )

No comments:

Post a Comment

கண் கருவளையம் மறைய எளிய மருத்துவ டிப்ஸ்..!

      அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்பது பழமொழி. நமது உடலில் உள்ள சத்து குறைபாடு மற்றும் நோய்கள் போன்றவற்றை நமது முகம் கண்ணாடி போல...