Tuesday, April 28, 2020

என்ன செய்தும் உடல் எடை குறையவில்லையா?



என்ன  செய்தும் எடை குறையவில்லையா? சப்ஜா விதைகளை தினமும் சாப்பிடுங்கள்!

தற்போதைய நவீன காலத்தில் உடல் எடை அதிகரிப்பால் பலர் அவதியுறுகின்றனர். கடைகளில் விற்கும் புட்டிகளில் அடைத்த உணவுகள், குளிர் பானங்கள், பீட்ஸா, பர்கர் ஆகியவை உடல் எடை அதிகரிக்க முக்கிய காரணிகளாக உள்ளது. இதனால் சின்ன வயதிலேயே உடல் எடை பிரச்சனை ஏற்படுகிறது.  உடல் எடை அதிகமாக இருப்பவர்கள் பல்வேறு முறைகளை பின்பற்றியும் எடை குறையவில்லை என வருத்தப்படுகிறீர்களா? இதோ இயற்கையாக கிடைக்கும் சப்ஜா விதைகளை(sabja seeds) பயன்படுத்தி உடல் எடையை (weight loss)விரைவில் குறைக்கலாம்.


சப்ஜா விதைகள்  என்றால் என்ன? (About sabja seeds)
சப்ஜா விதைகள்(sabja seeds) கருப்பு நிறத்தில் எள் போன்று காணப்படும். . இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா போன்ற நாடுகளிலும் தற்போது பரவலாக சப்ஜா விதை பயன்படுத்தப்படுகிறது. இது சூப்பர் புட் என்று அங்கு அழைக்கப்படுகிறது. இந்த விதைகள் (seeds) பலூடாக்களில் பயன்படுத்தபடுவதால் இதனை பலூடா விதைகள் (falooda seeds)என்றும் அழைக்கப்படுவதுண்டு. சியா விதைகளும், சப்ஜா விதைகளும் ஓன்று என்ற கருத்து நிலவுகிறது ஆனால் இரண்டும் வேறு வேறு என்பது குறிப்பிடத்தக்கது. சப்ஜா விதைகள் கருப்பு நிறத்தில் மட்டுமே இருக்கும். சியா விதைகள் கருப்பு, சாம்பல் மற்றும் வெள்ளை நிறத்தில் கிடைக்கிறது. ஆனால் இரண்டு விதைகளுமே மருத்துவ குணங்கள் நிறைந்தது.

உடல் எடையை குறைக்க (for weight loss)
ஊற வைத்த சப்ஜா விதையை சாப்பிடுவதால் நீண்ட நேரத்திற்கு பசி எடுக்காமல் இருக்கும். இதனால் அடிக்கடி நொறுக்குத்தீனி சாப்பிடுவது கட்டுக்குள் வைக்கப்படும். மேலும் உடலுக்கு தேவையான ஆற்றலை இந்த விதை கொடுக்கும். ஒமேகா 3 அமிலம் இருப்பதால் உடலில் உள்ள கொழுப்புகள் குறைக்க சப்ஜா விதைகள் பயன்படுத்தப்படுக்கிறது. உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைக்கும் சக்தி இந்த விதைகளுக்கு உண்டு. சப்ஜா விதையில் குறைந்த அளவு எரிசக்திகளே (calories) உள்ளது. ஒரு ஸ்பூன் சப்ஜா விதையில் இரண்டில் இருந்து நான்கு சதவிகித எரிசக்திகள் மட்டுமே உள்ளது. இதனால் தினமும் காலை வெறும் வயிற்றில் சப்ஜா விதைகளை சாப்பிட்டு வந்தால் உடல் எடை weight loss) கட்டுக்குள் வைப்பதோடு தொப்பையும் குறையும்.


பயன்படுத்தும் முறை (how to use)
சப்ஜா விதையை நீரில் ஊற வைத்து பயன்படுத்த வேண்டும் முதல் நாள் இரவில் ஊற வைத்து பின்னர் அடுத்த நாள் பயன்படுத்தலாம். சுமார் 6 மணி நேரம் வரை ஊற வைத்தால் நல்லது. அல்லது வெதுவெதுப்பான நீரில் சிறிது நேரம் ஊற வைத்தால் போதுமானது. இதில் அதிகளவு பைபர் காணப்படுகிறது. இந்த பைபர் தண்ணீரை அதிகமாக உறிஞ்சும் தன்மை கொண்டது. தண்ணீரை உறிஞ்சி ஜெல் போன்று காணப்படும். வழவழப்பாக காணப்படுவதை வெறுதாக விதையை மட்டும் சாப்பிட சிலருக்கு பிடிக்காது அதனால் ஊறிய விதையை லெமன் ஜூஸ், பலூடா மற்றும் நன்னாரி சர்பத்தில் கலந்து குடிக்கலாம்.
!.உடல் மெலிய சாப்பிடுபவர்கள் சீனி சேர்க்க வேண்டாம்.

💎மருத்துவ பயன்கள்

உடல் எடையை குறைக்கவேண்டும் என்று நினைப்பவர்கள் இரவில் ஒரு தேக்கரண்டி சப்ஜா விதையை நீரில் ஊறவைத்து மறுநாள் காலை வெறும் வயிற்றில் தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் எடை விரைவில் குறையும்.

வயிற்றுப்புண் பிரச்சனைக்கு சப்ஜா விதை நல்ல ஒரு மருந்து.

சர்க்கரை நோய்(Diabetes) உள்ளவர்கள் தினமும் ஒரு டீஸ்பூன் சப்ஜா விதையை நீரில் ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரையின் அளவு குறையும்.
சப்ஜா விதை உடலுக்கு குளிர்ச்சி அளிக்கிறது. உடல் சூட்டை குறைத்து நமது உடலை சீரான வெப்பநிலைக்கு கொண்டுவர உதவுகிறது. எனவே இதை கோடைகாலத்தில் மட்டுமல்லாமல் உடல் சூட்டை குறைக்கவும் பயன்படுத்தலாம். உடல் சூடு அதிகம் உள்ளவர்கள் இதை மதியம் இளநீரில் போட்டு குடிக்கலாம்.

பெண்களுக்கு மாதவிலக்கு நேரத்தில் ஏற்படும் அடிவயிற்று வலியை குறைக்க உதவுகிறது. பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதலை(LEUCORRHEA) குணப்படுத்த உதவுகிறது.

மூலநோயால்(Hemorrhoids) பாதிக்கப்பட்டவர்கள் இந்த சப்ஜா விதையை தினமும் சாப்பிட்டு வந்தால் விரைவில் குணம் பெறலாம். மூலநோய்க்கு நல்ல ஒரு மருந்து.

மலச்சிக்கல்(Constipation) நோயால் அவதிப்படுபவர்கள் பாலில் ஒரு தேக்கரண்டி சப்ஜா விதையை போட்டு சாப்பிட்டு வந்தால் சரியாகும்.

சிறுநீர் பாதையில் ஏற்படும் புண், சிறுநீரக எரிச்சல்(Kidney irritation) மற்றும் சிறுநீர் தொற்று(Urinary tract infection) போன்ற பிரச்சனைகளை குணப்படுத்த உதவுகிறது.

வயிற்று எரிச்சல், வயிற்று பொருமல், வாயு பிரச்சனை மற்றும் நெஞ்சு எரிச்சல் ஆகியவற்றை குணப்படுத்த உதவுகிறது.
உஷ்ணத்தால் ஏற்படும் கண் எரிச்சலை குணப்படுத்த உதவுகிறது.
ஜீரண பாதையில் ஏற்படும் புண்களை ஆற்ற உதவுகிறது.

🚫🚫யாரெல்லாம் சாப்பிடக்கூடாது (who do not eat?)
குழந்தைகளுக்கு சப்ஜா விதையை அதிகம்  (sabja seeds) கொடுப்பதை தவிர்க்கலாம்.  கர்ப்பிணி பெண்கள் சாப்பிட்டால் கரு கலைந்துவிடும் வாய்ப்புகள் இருப்பதால் கர்ப்பிணி பெண்களுக்கு கொடுக்க கூடாது. அதே போல் அறுவை சிகிச்சை செய்தவர்கள் மற்றும் செய்ய இருப்பவர்கள் சப்ஜா விதையை தவிர்ப்பது நல்லது. சைனஸ் பிரச்சனை இருப்பவர்கள் சப்ஜா விதையை சாப்பிடுவதை முற்றிலுமாக தவிர்ப்பது நல்லது.

📍யாருமே ஒரு நாளைக்கு ஒரு தே.கரண்டி க்கு மேல் எடுத்து கொள்ள கூடாது

No comments:

Post a Comment

கண் கருவளையம் மறைய எளிய மருத்துவ டிப்ஸ்..!

      அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்பது பழமொழி. நமது உடலில் உள்ள சத்து குறைபாடு மற்றும் நோய்கள் போன்றவற்றை நமது முகம் கண்ணாடி போல...