Saturday, May 16, 2020

முடி வறட்சி நீங்க இயற்கையான முறைகள்


இயற்கையாகவே முடியில் ஈரப்பசை உள்ளது. அதிக இரசாயனம் உள்ள ஷாம்பூ பயன்படுத்துவதால் அந்த ஈரப்பசை நீங்கி முடி வறண்டு விடுகிறது. சில நேரம் அதிக வெயிலில் அலைவதால் முடியின் ஈரப்பசை குறைந்து வறண்டு விடுகிறது. வயதும் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது. வயது கூடும் பொழுது முடியின் ஈரப்பசை குறைய ஆரம்பிக்கிறது.
அதிகமாக இரசாயன ஷாம்பூ பயன்படுத்துவதை குறைக்க வேண்டும். தினமும் பயன்படுத்தினால் அதனை குறைத்து குளிக்கும் போது வாரம் இருமுறை மட்டும்  ஷாம்பு போட்டு குளிக்கலாம்.
வாரம் ஒருமுறை எண்ணெய் குளியல் எடுப்பதால் முடியின் வறட்சி நீங்குகிறது. நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் எடுத்து வெதுவெதுப்பாக சுட வைக்க வேண்டும். அதிகம் சூடு படுத்தக் கூடாது. அது கூந்தலில் வேர்க்கால்களை பாதிக்கும்.

 மிதமான சூட்டில் எண்ணையை தலையில் தேய்த்து மசாஜ் செய்து தலையில் ஒரு துண்டைக்கட்டிக் கொள்ள வேண்டும். அரை மணி நேரம் கழித்து மிதமான இரசாயனம் உள்ள ஷாம்பூ அல்லது இயற்கை ஷாம்பு பயன்படுத்தி தலைக்கு குளித்து வந்தால் முடி வறட்சி நீங்கி கேசம் பொலிவு பெறும்.


💟இரண்டு முட்டைகளை எடுத்துக் கொண்டு அதில் உள்ள மஞ்சள் கருவைத் தனியே எடுத்து நன்கு கலக்கிக்கொள்ள வேண்டும். அதனுடன் 3 ஸ்பூன் நீர் சேர்த்து கலக்கி தலையில் தேய்த்து முப்பது நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் தலைக்குக் குளிக்க வேண்டும். இவ்வாறு வாரம் ஒருமுறை செய்தால் தலையின் வறட்சி நீங்கி முடி பளபளப்பாகும்.

💟1 முட்டை , ஒரு ஸ்பூன் தயிர், ஒரு ஸ்பூன் தேன் எடுத்துக்கொள்ள வேண்டும். 1 முட்டையை நன்கு கலக்கி கொள்ள வேண்டும். அதனுடன் ஒரு ஸ்பூன் தயிர் மற்றும் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ள வேண்டும். இந்த கலவையை தலைக்குத் தேய்த்து இருபது நிமிடங்கள் கழித்து தலைக்கு ஷாம்பூ போட்டு குளிக்க வேண்டும். இதனை வாரம் ஒருமுறை செய்து வந்தால் முடி வறட்சி கண்டிப்பாக நீங்கும்.


💟தேங்காய் எண்ணெய் ஒரு ஸ்பூன் மற்றும் தேன் ஒரு ஸ்பூன் சேர்த்து நன்கு கலக்கிக்கொள்ள வேண்டும். இந்த கலவையை தலையில் தேய்த்து முப்பது நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் தலைக்குக் குளிக்க வேண்டும். இவ்வாறு வாரம் ஒருமுறை செய்தால் தலையின் வறட்சி நீங்கி முடி பளபளப்பாகும்.

💟3 ஸ்பூன் தயிர் மற்றும் 4  ஸ்பூன் கற்றாளை ஜெல் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். அந்த கலவையை தலையின் மேற்பரப்பு மற்றும் தலை முடியின் வேர் பகுதியிலும் படுமாறு தேய்த்து அரை மணிநேரம் கழித்து தலைக்கு ஷாம்பூ போட்டு குளிக்க வேண்டும். வாரம் ஒருமுறை இந்த முறையை பின்பற்றினால் முடி வறட்சி நீங்கும்.
💟தேங்காயை அரைத்து பால் எடுத்து அதனுடன் சிறிது கடலைமாவு சேர்த்து கலந்து அந்த கலவையை தலை முடி முழுவதும் தேய்த்து அரை மணி நேரம் கழித்து தலைக்கு ஷாம்பூ போட்டு குளித்து வந்தால் முடி வறட்சி பிரச்சினையில் இருந்து விடுபடலாம்.

💟ஒரு நன்கு பழுத்த வாழைப்பழத்தை எடுத்துக்கொண்டு அதனை நன்கு மசித்துக் கொள்ள வேண்டும். மசித்த வாழைப்பழத்தை முடியில் தேய்த்து ஒரு மணி நேரம் கழித்து தலைக்கு ஷாம்பூ போட்டு குளிக்க வேண்டும். வாரம் ஒருமுறை இவ்வாறு செய்தால் வறண்ட கூந்தலில் இருந்து விடுபடலாம்.

➡️ ஒரு அருமையான மருத்துவமுறை
4 ஸ்பூன் ஒலிவ் எண்ணையை எடுத்துக்கொண்டு அதனை தலையில் நன்கு தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். பின்பு அரை மணி நேரம் கழித்து தலைக்கு ஷாம்பூ போட்டு குளித்து வந்தால் முடி வறட்சி நீங்கும்.

💟இரண்டு ஸ்பூன் நெல்லிக்காய் பொடியுடன் இரண்டு ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து அந்த கலவையை தலையின் மேற்பரப்பிலிருந்து முடி நுனி வரை தேய்த்து பின்பு தலைக்கு ஷாம்பூ போட்டு குளிக்க வேண்டும். வாரம் ஒரு முறை இவ்வாறு செய்தால் முடி வறட்சி நீங்கி முடி பொலிவு பெறும்.

💟4 ஸ்பூன் வெந்தயத்தை எடுத்துக் கொண்டு இரவு முழுவதும் நீரில் ஊற வைத்து காலையில் அதை அரைத்து தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால் முடி வறட்சி நீங்குவதோடு உடலுக்கு குளிர்ச்சியையும் அளிக்கிறது.

💟வெங்காயத்தை சாறு எடுத்து ரொம்ப கொஞ்சமாக எடுத்து பட்டும் படாமலும் தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால் முடி வறட்சி நீங்குவதோடு தலையில் உள்ள பொடுகும் போகும். அதிகமாக தேய்க்க கூடாது. வெங்காய வாசம் விரும்பாதவர்கள் இந்த வெங்காய மருத்துவ முறையை அறவே தவிர்க்க வேண்டும். ஏனென்றால் குளித்த பின்னும் அன்றைய நாள் முழுவதும் வெங்காய வாசம் அடித்துக் கொண்டே இருக்கும்.

💟சுரைக்காயை நன்கு அரைத்து அதனை ஒரு சுத்தமான துணியில் போட்டு நன்கு பிழிந்து சாறு எடுக்க வேண்டும். அந்த சாறை தலை மற்றும் முடியின் வேர் பகுதியில் நன்கு தேய்த்து அரை மணி நேரம் கழித்து தலைக்கு ஷாம்பூ போட்டு குளிக்க வேண்டும். இவ்வாறு வாரம் ஒருமுறை செய்தால் முடி வறட்சி நீங்கும்.

No comments:

Post a Comment

கண் கருவளையம் மறைய எளிய மருத்துவ டிப்ஸ்..!

      அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்பது பழமொழி. நமது உடலில் உள்ள சத்து குறைபாடு மற்றும் நோய்கள் போன்றவற்றை நமது முகம் கண்ணாடி போல...