Saturday, May 9, 2020

கருத்த உதடுகளா.. கவலைய விடுங்க..


 ரோஜா நிறத்தில் இருந்த உங்கள் உதடுகளில் கருமை படர்ந்திருந்தால் ஆரோக்கியம், உணவுப் பழக்கம், வாழ்வியல் முறை போன்றவற்றில் ஒழுங்குமுறை இல்லாதிருப்பதே காரணம். ஆண்களுக்கு உதடுகள் கருப்பாக புகைப்பழக்கமும் ஒரு காரணம். பெண்கள் பயன்படுத்தும் அழகு சாதனப் பொருட்களில் இரசாயணங்கள் இருப்பதாலும் உதடுகள் கருப்பாகும்.
உடலில் வைட்டமின் குறைபாடு காரணமாகவும் உதட்டில் கருமை படர்ந்திருக்கும். உதட்டின் கருமையை எப்படி போக்குவது என்பது குறித்த கட்டுரைதான் இது.

💚எலுமிச்சை
எலுமிச்சையை பிழிந்து அதன் சாற்றை எடுத்து தினமும் உதட்டில் தடவி வரலாம். அல்லது எலுமிச்சை பழத்தை மெல்லிதாக நறுக்கி அதில் சர்க்கரையை தூவி அதனை உங்கள் உதட்டின் மேல் வைத்து தேய்க்கவும். இது உதட்டில் உள்ள இறந்த செல்கள் மற்றும் கருமையை நீக்கி உதட்டை சிவப்பாகவும் மென்மையாகவும் வைக்கும். ஒரு வாரத்திற்கு தினமும் செய்து வரலாம்.
💚ஆலிவ் ஆயில்
அரை தேக்கரண்டி சர்க்கரை மற்றும் சில துளிகள் ஆலிவ் எண்ணெய் இரண்டையும் கலந்து உதட்டில் ஸ்க்ரப் செய்யவும். ஆலிவ் எண்ணெய் உங்கள் உதட்டை வறண்டு போகாமல் பார்த்து கொள்ளும். ஒரு வாரம் தொடர்ந்து செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.
💚ரோஸ் வாட்டர்
ஒரு தேக்கரண்டி தேனில் ஒரு துளி ரோஸ் வாட்டரை சேர்த்து கலந்து உதட்டின் மேல் தடவலாம். ஒரு நாளிற்கு இரண்டு அல்லது மூன்று முறை தொடர்ச்சியாக உதட்டின் மீது பூசலாம். ரோஜா இதழை அரைத்து ஒரு மேஜைக்கரண்டியும் ஒரு தேக்கரண்டி வெண்ணெய், தேன் அல்லது மிக்ல் க்ரீம் சேர்த்து கலந்து வைக்கவும். இந்த கலவையை தினமும் இரண்டு வேளை உதட்டில் தடவி வந்தால் உதடு மிகவும் அழகாக மாறிவிடும்.


💚மாதுளை
மாதுளை சாறு, பீட்ரூட் சாறு மற்றும் கேரட் சாறு ஆகிய மூன்றிலும் ஒவ்வொரு மேஜைக்கரண்டி எடுத்து கொள்ளவும். தினமும் இதனை உதட்டில் தடவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும். அரைத்த மாதுளை விதைகள் மற்றும் பால் இரண்டையும் சேர்த்து உதட்டிற்கு ஸ்க்ரப்பாக பயன்படுத்தலாம். இதனை தினமும் கூட செய்து வரலாம்.

💚பாதாம் எண்ணெய்.
பாதாம் எண்ணெய் உதட்டின் கருமையை போக்கி மென்மையாக வைத்து கொள்ளும். இரவு தூங்க போகும் முன் உதட்டில் தடவி வரலாம். இத்துடன் எலுமிச்சை சாறு சேர்த்து தேய்த்து வந்தால் உதடு புத்துணர்ச்சி பெற்றிருக்கும்.

No comments:

Post a Comment

கண் கருவளையம் மறைய எளிய மருத்துவ டிப்ஸ்..!

      அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்பது பழமொழி. நமது உடலில் உள்ள சத்து குறைபாடு மற்றும் நோய்கள் போன்றவற்றை நமது முகம் கண்ணாடி போல...