Saturday, April 18, 2020

ஐஸ் கட்டிகளை முகத்தில் தேய்க்கலாமா?



வெயில் காலத்திலும் உங்கள் சருமத்தை பாதுகாக்கும் எளிய பொருள் உங்கள் வீட்டிலே உள்ளது. . உங்களுடையது எந்த வகையான சருமமாக இருந்தாலும் சரி, ஐஸ் கட்டி உங்கள் சருமத்தில் மாயம் செய்யும்.

சருமத்தில் ஐஸ் கட்டிகளை தேய்க்கலாமா?

நாள் முழுவதும் அலைந்து வேலை செய்வதால் உடலும் சருமமும் சோர்ந்து விடுகிறது. சருமத்தின் சோர்வுகளை ஐஸ் கட்டி கொண்டு நீக்கி விடலாம்.
இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தி முகத்தை ஐஸ் பொலிவு பெற செய்யும். ஐஸ் பேஷியல் தான் தற்போதைய டிரெண்டிங்காக உள்ளது.

ஐஸ் பேஷியலின் பயன்கள்;
ஐஸ் கட்டியை முகத்தில் தேய்ப்பதால் இரத்த ஓட்டம் அதிகமாகி முகம் பளிச்சென்று ஆகிவிடும். ஐஸ் கட்டியை தேய்ப்பதால் இரத்த குழாய்கள் முதலில் சுருங்கி இரத்த ஓட்டம் குறையும். பின்னர் இதை ஈடு செய்ய நம்முடைய உடல் அதிகமாக இரத்த ஓட்டத்தை முகத்தில் ஏற்படுத்தும். இது முகத்தை பொலிவாக மற்றும் உயிர்ப்பாக மாற்றும்.

கருவளையம் நீங்க:
சிறிதளவு ரோஸ் வாட்டரை கொதிக்க வைத்து பின்னா் அதில் வெள்ளரிக்காய் சாறு கலந்து இதை ஐஸ் ட்ரேயில் வைத்து ஃபிரிசரில் வைத்து விடுங்கள். இதை முகத்தில் தொடர்ந்து தேய்த்து வந்தால் கருவளையம் மறைந்து விடும்.

முகப்பரு மறைய:
ஐஸ் கட்டியை முகத்தில் தடவுவதால் சருமத்தில் உற்பத்தியாகும் எண்ணெய் பசை குறையும். அதனால் முகப்பருவும் மறையும். அதுமட்டுமல்ல முகப்பருவினால் ஏற்படும் வலி மற்றும் வீக்கங்களையும் ஐஸ் கட்டி குறைக்கும்.

உதடுகள்:
ஐஸ் கட்டி கொண்டு உதடுகளை தேய்க்க வேண்டும். இதனால் உதடுகள் மென்மையாக மாறும். அதுமட்டுமல்லாமல் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்

ஆயில் ஸ்கின்:
ஆயில் ஸ்கின் உள்ளவர்களுக்கு முகம் எப்போதும் எண்ணெய் படையுடன் காணப்படும். ஐஸ் கட்டி பேஷியல் செய்வதால் முகத்தில் உள்ள நுண்ணிய துளைகள் சுருங்கி அதிகப்படியான எண்ணெய் சுரப்பு கட்டுப்படுத்தப்படும்.

செய்ய வேண்டியவை:
1. அளவிற்கு மீறினால் எல்லாமே நஞ்சு தான். எனவே ஒரே நாளில் பலமுறை ஐஸ் கட்டிகளை கொண்டு முகத்தில் தேய்ப்பதை தவிர்க்க வேண்டும். மேலும் எப்போதும் ஐஸ் கட்டிகளை நேரடியாக முகத்தில் தடவ கூடாது. ஒரு காட்டன் துணியில் சுற்றி தான் பயன்படுத்த வேண்டும்.
2. ஐஸ் கட்டி பேஷியல் செய்யும் முன் முகத்தில் உள்ள மேக்கபை நீக்கி விட வேண்டும். முகம் தூய்மையாக இருக்க வேண்டும்.
3. தொடர்ந்து ஒரு நிமிடத்திற்கு மேலாக ஐஸ் கட்டிகளை ஒரே இடத்தில் வைக்க கூடாது.

4. கண்களை சுற்றி ஐஸ் பேஷியல் செய்யும் போது கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக ஐஸ் கட்டியில் வேறு ஏதும் மூலிகை இருந்தால் அவை கண்களுக்குள் செல்லாமல் பார்த்து கொள்ளுங்கள்.

5. வட்ட வட்டமாக மசாஜ் செய்யுங்கள்.
6. ஐஸ் கட்டி பேஷியலை 10-15 நிமிடங்களுக்கு மேலாக தொடர்ந்து செய்வதை தவிர்க்க வேண்டும். நல்ல மாற்றத்திற்கு இந்த பேஷியலை மாலை அல்லது காலை செய்து பாருங்கள்.

No comments:

Post a Comment

கண் கருவளையம் மறைய எளிய மருத்துவ டிப்ஸ்..!

      அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்பது பழமொழி. நமது உடலில் உள்ள சத்து குறைபாடு மற்றும் நோய்கள் போன்றவற்றை நமது முகம் கண்ணாடி போல...