Sunday, June 14, 2020

கர்ப்பத்தின் முகமூடி


கர்ப்ப காலம் என்பதுஒரு சிறந்த அனுபவமாகும். அதே சமயம் கர்ப்ப காலத்தில் தோல் அழற்சி, வறண்ட சருமம் மற்றும் எடை அதிகரிப்பு, நிற மாற்றம் போன்ற தோல் பிரச்சனைகளும் ஏற்படுகிறது. இந்த தோல் பிரச்சனைகளில் ஒன்று தான் மெலஸ்மா. அதாவது உங்கள் சருமத்தில் கருப்பு நிற, பழுப்பு நிற, கறைபடிந்த திட்டுக்கள் இருந்தால் உங்களுக்கு மெலஸ்மா வந்திருக்கலாம். 


இது பெரும்பாலும் "கர்ப்பத்தின் முகமூடி" என்று அழைக்கப்படுகிறது. இந்த மெலஸ்மா பெரும்பாலும் 50 முதல் 75 சதவீதம் கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படுகிறது. இதற்காக நீங்கள் கவலைக் கொள்ளத் தேவையில்லை.

காரணங்கள்
மெலஸ்மா அல்லது கர்ப்ப கால முகமூடி இது உடலில் உள்ள ஈஸ்ட்ரோஜன் அளவு அதிகரிக்கும் போதும் மெலனின் உற்பத்தியைத் தூண்டும்போது ஏற்படுகிறது. இந்த செயல்முறை ஹைபர்பிக்மென்டேஷன் என்றும் அழைக்கப்படுகிறது. மெலஸ்மா ஏற்படும் போது உங்கள் சருமம் சற்று நிறம் மாறி இருக்கும் மற்றும் அடிவயிற்றின் மையத்தில் ஒரு இருண்ட அல்லது கருமை நிற கோடு இருக்கும். மெலஸ்மா ஏற்படுவதற்கு சூரியஒளி மிக முக்கியமான காரணமாக உள்ளது. கோடைகாலங்களில் பொதுவாக மெலஸ்மாவால் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். ஆனால் குளிர்காலங்களில் மெலஸ்மாவில் உள்ள நிறமி செயல்படுவதில்லை. இதற்காக நீங்கள் கவலைகொள்ள வேண்டியதில்லை மகப்பேறுக்கு பின்னர் அல்லது தாய்ப்பால் கொடுத்தப் பிறகு இவை தானாக மறைந்து விடும்
ஏற்படும் இடங்கள்
மெலஸ்மா முன்னர் குறிப்பிட்டது போல முகத்தின் நடுப்பகுதியில் ஏற்படும். அதாவது நெற்றி, கன்னங்கள், மேல் உதடு, மூக்கு மற்றும் கன்னம் ஆகியவை இதில் அடங்கும். இதைத்தவிர கன்னத்து எலும்புகள் மற்றும் தாடைகளில் ஏற்படும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும் சில பெண்களுக்கு கழுத்தின் மேற்பகுதியில் மெலஸ்மா ஏற்படும் என்றும், அரிதாக சில பெண்களுக்கு முன் கைகளில் ஏற்படும் வாய்ப்பும் உள்ளது.
குறைக்கும் வழிகள்
நாம் முன்னர் குறிப்பிட்டது போல இவை மகப்பேறுக்கு பின்னர் அல்லது தாய்ப்பால் கொடுத்தப் பிறகு தானாக சரியாகி விடும். ஆனால் இப்போது மெலஸ்மா அதிக அளவில் இருந்தால் அதை சற்று குறைக்க நீங்கள் முயற்சி செய்யலாம்.
⏩️⏩️கற்றாழை.
மெலஸ்மா மற்றும் தோல் வறட்சி ஆகியவற்றில் சிகிச்சை அளிக்க கற்றாழை பயன்படுகிறது. சூரிய ஒளியில் இருந்தும் பாதுகாக்கிறது. கற்றாழை நடுவில் இருக்கும் ஜெல் பகுதியை முகத்தில் பாதிக்கப்பட்ட இடங்களில் தடவி காயவிட்டு 15 முதல் 20 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள்.
வயிற்றில் வரி வரியாக வயிற்றில் கோடுகளா??

அதற்கு கற்றாழை ஜெல்லை நேரடியாகவோ அல்லது அதனைக் கொண்டு எண்ணெய் தயாரித்தோ பயன்படுத்தலாம் . உங்களுக்கு கற்றாழை எண்ணெயை வீட்டிலேயே எப்படி தயாரிப்பது என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியெனில் தொடர்ந்து படியுங்கள். 

தேவையான பொருட்கள்:
கற்றாழை இலைச்சாறு - 50ml
தூய தேங்காய் எண்ணெய் (virgin coconut oil )- 50 ml

1) முதலில் கற்றாழை இலையில் உள்ள ஜெல்லை தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். அப்படி எடுக்கும் போது அதில் உள்ள மஞ்சள் நிற பகுதியை தப்பித்தவறியும் எடுத்துவிட வேண்டாம்.
(கற்றாழையை நன்கு கூழ் பதத்தில் grinderல் அரைத்து கொள்ளலாம் )
2) பின் ஒரு பௌலில் கற்றாழை ஜெல் மற்றும் தேங்காய் எண்ணெயை ஒன்றாக சேர்த்து நன்கு கலந்து, 2  நாட்கள் ஊற வைக்க வேண்டும்.(இதை வெயிலில் வைத்து எடுத்து கொள்ளலாம் )

3) பின்பு ஊற வைத்துள்ள கற்றாழை ஜெல் கலவையை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, குறைவான தீயில் நன்கு கிளறி விட்டு சூடேற்றி, நீர்மம் முழுவதும் வற்றி ஒரு பதத்திற்கு வந்ததும் ( கற்றாழையின் சிறு சிறு துண்டுகள் Brown நிறத்தில் மேலே மிதக்க தொடங்கியதும்) இறக்கி குளிர வைத்து, வடிகட்டினால், கற்றாழை எண்ணெய் தயார்.

இதை வயிற்றில் மற்றும் சருமத்தில் தடவி 15நிமிடம் அளவில் மசாஜ் செய்து இரவில் வைத்து காலையில் கழுவி கொள்ளலாம். இல்லை இப்படி வைத்து கொள்வது கஷ்டம் என்றால் கொஞ்சம் நேரம் (குறைந்தது 30நிமிடம் ) வைத்து கழுவி விடலாம்...

சுருக்கங்கள் மட்டுமன்றி தோல் கருமையும் அதிகம் இருப்பின் 3 தேக்கரண்டி அளவு எண்ணெய் எடுத்து அரை மூடி எலுமிச்சை சாறு பிழிந்து விட்டு பூசி மசாஜ் செய்யலாம்.

சென்சிடிவ் சருமம் உள்ளவர்களுக்கு எலுமிச்சை எரிச்சலை தந்தால் உடனே கழுவி விடுங்கள்.

No comments:

Post a Comment

கண் கருவளையம் மறைய எளிய மருத்துவ டிப்ஸ்..!

      அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்பது பழமொழி. நமது உடலில் உள்ள சத்து குறைபாடு மற்றும் நோய்கள் போன்றவற்றை நமது முகம் கண்ணாடி போல...