இயற்கை ஒரு கொடை.. இயற்கையோடு ஒன்றி வாழ்வது ஒரு வரம். என்னதான் எண்ணங்கள் விண்ணை தொட்டாலும் பாதங்கள் இருப்பது மண்ணில் தானே.. அன்றாடம் நாம் சந்திக்கும் எளிய ஆரோக்கிய மற்றும் அழகு சார்ந்த பிரச்சினைகளுக்கு இலகுவான தீர்வு தரும் எளிய தளம் இது. தன்னம்பிக்கையை கொஞ்சம் வளர்த்து கொள்ளுங்கள் உங்களை நீங்களே கவனித்து கொள்ளுங்கள். அழகு என்பது மனசு சார்ந்த விடயம் என விளங்கிய கணத்தில் நீங்கள் பேரழகாகிறீர்கள்.
Monday, May 11, 2020
முழுமையான சத்து முருங்கை
எளிதாக கிடைக்கும் முருங்கைக்காயில் இத்தனை சத்துக்கள் உள்ளதா....?
முருங்கைக்காய் அதிகளவு விட்டமின் சி-யைக் கொண்டுள்ளது. மேலும் முருங்கையில் விட்டமின்கள் ஏ, பி1 (தயாமின்), பி2 (ரிபோஃப்னோவின்), பி3 (நியாசின்), பி6 (பைரிடாக்ஸின்), ஃபோலேட்டுகள் ஆகியவை காணப்படுகின்றன.
முருங்கைக் காய் மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண் சம்பந்தமான நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. மேலும் உடலுக்கு நல்ல வலுவைக் கொடுக்கும். இதை சாப்பிட்டால் சிறுநீரகம் பலப்படும், தாது உற்பத்தி அதிகரிக்கும்.
வாரத்தில் குறைந்தது இரண்டு முறை முருங்கைக் காயை உணவாக எடுத்துகொண்டால் ரத்தமும், சிறுநீரும் சுத்தம் அடையும். மேலும் மலச்சிக்கலால் அவதிபடுபவர்கள், மூலநோயால் பாதிக்கப்பட்டவர்கள், சளி பிரச்சனை உள்ளவர்கள், ரத்தசோகை, வயிற்றில் புழு பிரச்சனை உள்ளவர்கள், கணையம், கல்லீரலில் வீக்கம் உள்ளவர்கள் முருங்கைக்காயை சாப்பிட்டால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
முருங்கைக்காயில் ஜிங்க் சத்து அதிகம் காணப்படுகிறது. முருங்கைக்காயை தொடர்ந்து சாப்பிடும் ஆண்களுக்கு பாலுணர்ச்சி தூண்டப்படுவதோடு, விறைப்புத்தன்மை, விரைவில் விந்து வெளியேறுதல், மலட்டுத்தன்மை குறைபாடு போன்ற பிரச்சனைகள் நிவர்த்தியாகின்றன.
முருங்கைக்காயானது தொண்டை கரகரப்பு, சளி மற்றும் தொண்டை புண் ஆகியவற்றை சரிசெய்வதில் வல்லது. ஆஸ்துமா, கல்லீரல் மற்றும் கணைய வீக்கம், போன்றவற்றை குணப்படுத்துகிறது.
முருங்கைக்காய் தோல் புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய் மற்றும் புரோஸ்ட்ரேட் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கும் வல்லமை கொண்டது.
முருங்கைகாயில் செரோடோனின், டோபமைன் மற்றும் நோரர்டேன்லைன் போன்றவை உள்ளன. இவை நினைவாற்றல், மனநிலை மற்றும் உடலுறுப்புகளின் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.
Labels:
உணவு
Interested in natural healing through herbs and foods, beautify the soul through good thoughts, Beautify the appearance through natural remedies with less and no side effects 💚
Subscribe to:
Post Comments (Atom)
கண் கருவளையம் மறைய எளிய மருத்துவ டிப்ஸ்..!
அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்பது பழமொழி. நமது உடலில் உள்ள சத்து குறைபாடு மற்றும் நோய்கள் போன்றவற்றை நமது முகம் கண்ணாடி போல...
-
கிச்சனில் ஒளிந்திருக்கிறது அழகு ரகசியம் காஸ்ட்லி க்ரீம்களிலும் பார்லர் சிகிச்சைகளிலும் மட்டுமல்ல, உங்கள் வீட்டுக் கிச்சனிலும் ஒள...
-
வெந்தயம் அஞ்சறைபெட்டியில் இருக்கும் உணவுகளில் முக்கியமானது. உடல் ஆரோக்கியத்துக்கு நன்மை தரக்கூடியது என்பதாலேயே இவை உணவில் நீங்கா இடம்ப...
-
தாம்பத்தியம் என்பது திருவிழா போன்றது. அது மனப்பூர்வமாக, உடல்ரீதியாக கொண்டாடப்பட வேண்டியது. தாம்பத்திய செயல்பாட்டை தம்பதிகள் இரண்டு விதமான கண...

No comments:
Post a Comment