Monday, May 4, 2020

கை, கால் முட்டி கருப்பா இருக்கா,..


நல்ல நிறமா இருந்தாலும் பெரிய பிரச்சனை கை, கால் மூட்டுகளில் இருக்கும் கருப்பான நிறம் தான். அந்த இடம் மறைவாதான இருக்கு என்று கொஞ்சம் அசந்தால் சரும நிறத்திலிருந்து தனியாக அசிங்கமாக தெரியும். வீட்டிலிருக்கும் பொருள்களை கொண்டு எளிமையாக பராமரித்தாலே இதை கொஞ்சம் கொஞ்சமாக மறைய செய்யலாம். என்ன செய்யலாம் எப்படி போக்கலாம் என்று பார்க்கலாமா?
​கருமைக்கு காரணம் இதுதான்
உடலில் கடினமான சருமம் என்பது மூட்டுகள் இருக்கும் பகுதிதான். கை மூட்டு, கால் மூட்டு, மணிக் கட்டு,பாதத்தில் இருக்கும் கால் கீழ் மூட்டு (குதிகால்) போன்ற பகுதிகளில் இருக்கும் சருமம் தடித்து கருப்பாக இருக்கும்.
குழந்தைப் பருவத்தில் தவழ்ந்து வந்ததும், கை மூட்டுகளை மேசைகளில் ஊன்றி வைப்பதும் மூட்டு களில் கருமையை மேலும் உண்டாக்கிவிடுகிறது. இவை தவிர உடலில் வைட்டமின் பி 12 பற்றாக்கு றையும் கூட கருமையை அதிகரித்துவிடக்கூடும்.
குழந்தைப்பருவத்திலேயே உரிய பராமரிப்பு இல்லாத சூழலில் இதை நிரந்தரமாக நீக்க முடியாது என்றாலும் இந்த இடம் மேலும் கருப்பாகாமல் இருக்கவும் அவை குறையவும் சரிசெய்யலாம்.


​1)கடுகு எண்ணெய்
கடுகு எண்ணெயை இந்தியா வடமாநிலத்தவர்கள் அதிகம் பயன்படுத்துகிறார்கள். சமீப காலமாக கடுகு எண்ணெய் குறித்த விழிப்புணர்வு காரணமாக பெரும்பாலான மக்களும் பயன்படுத்த தொடங்கி விட்டார்கள்.

கடுகு எண்ணெய் சருமத்தில் இறந்த செல்களை நீக்கி சருமத்துக்கு புத்துணர்வு ஊட்டுகிறது. சரு மத்தை பொலிவாக்குகிறது. கடுகு எண்ணெயை இலேசாக சூடாக்கி கை மற்றும் கால் மூட்டுகளில் மசாஜ் செய்து விடவும். தினமும் இரவு நேரங்களில் இந்த மசாஜ் செய்துவிட்டு மறுநாள் குளிக்கும் போது குளிர்ந்த நீரில் கழுவினால் போதும்.
கடுகை ரவைபோல் பொடித்து பசும்பாலில் குழைத்து மூட்டுகளில் தடவி ஸ்க்ரப் போல் செய்து வர லாம். ஒரே வாரத்தில் பலன் தெரியும். நிரந்தரமாக சரும நிறம் மாற வேண்டுமெனில் தொடர்ந்து 40நாட்கள்  இதைப் பயன்படுத்துங்கள்.

2)​கற்றாழை
எப்போதும் கற்றாழையா என்று கேட்காதீர்கள். இன்று கற்றாழையை மருத்துவ குணத்துக்காக உள்ளுக்கும் அழகுக்காக வெளிப்புறத்திலும் பயன்படுத்துவதும் அதிகரித்துவிட்டது.
கற்றாழையின் பயனை உணர்ந்து இன்று வீடுகளிலேயே வளர்க்க தொடங்கிவிட்டார்கள். கற்றாழை மடலை இரண்டாக நறுக்கி கை மற்றும் கால் மூட்டுகள் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் தேய்த்து வந்தால் கருமை மறைய தொடங்கும்.
இதை எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். வெளியில் செல்லும் போது கற்ற்றாழை ஜெல்லை தடவி கொண்டு செல்லலாம். சூரிய ஒளி நேரடியாக படும் போது சருமத்தில் நிறமாற்றம் உண்டாகிறது. இதனால் மூட்டுகள் மேலும் கருமை நிறத்தை அடைகிறது கற்றாழையை தடவிய மூட்டுகள் கருமை அடைவது தடுக்கப்படுவதோடு இருக்கும் கருமை நிறமும் குறையத் தொடங்கு கிறது. தொடர் கற்றாழை பராமரிப்பில் சருமம் மினுப்பதை நீங்களே உணரலாம்.

3)​எலுமிச்சையும் சர்க்கரையும்
சருமத்தில் இருக்கும் அழுக்குகளை நீக்க ஸ்க்ரப் செய்வது எப்போதுமே நல்லது. ஸ்க்ரப் செய்யும் போது சருமத்தில் இறந்த செல்கள் நீங்கும். எலுமிச்சையை பாதியாக நறுக்கி சாறு பிழியாமல் சர்க் கரையைத் தொட்டு தொட்டு மூட்டுகளில் மெதுவாக ஸ்க்ரப் செய்யுங்கள்.
தேய்க்க தேய்க்க கருமை நிறம் போகும் என்று வேகமாக தேய்த்து முட்டியைப் புண்ணாக்கி கொள் ளாதீர்கள். மசாஜ் செய்வது போல் ஸ்க்ரப் செய்தாலே போதும். தொடர்ந்து செய்யும் போதுதான் கரு மை நீங்கி சருமம் மினு மினுக்க தொடங்கும்.
ஸ்க்ரப் செய்து முடித்ததும் அரைமணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி ஆலிவ் அல்லது வைட்ட மின் இ ஆயிலை பயன்படுத்தி மசாஜ் செய்யுங்கள். இதனால் மூட்டை சுற்றியுள்ள பகுதிகளும் மிருது வாக மாறும்.

4)​தயிர் கலவை
சருமத்துக்கு தயிர் பயன்படுத்தும் போது பலன் கிடைக்க வேண்டுமென்றால் பசுந்தயிராக இருக்க வேண்டும். கெட்டியான பசுந்தயிரில் மஞ்சள் பொடி கலந்து தேன் சேர்த்து நன்றாக குழைத்து பேக் போல் செய்து முட்டி மற்றும் அது சுற்றியுள்ள பகுதிகளில் போட்டு காயவிடவும்.
அரைமணி நேரம் கழித்து காய்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவி வந்தால் கருமையும், அந்த இடத்தில் இருக்கும் சொரசொரப்பும் நீங்கும். பேஸ்ட் போல் குழைக்கும் போது தேவையெனில் கடலை அல் லது பாசிப்பருப்பு மாவை சேர்த்துகொள்ளலாம்.

5)​நறுமண பொடி
கடலை மாவு, பாசிப்பருப்பு மாவு,சந்தனம் மூன்றையும் தலா 2 டீஸ்பூன் கலந்து தேன், பால், பன்னீர் கலந்து குழைத்து மூட்டுகள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பேக் போல் போடவும்அரைமணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி இலேசாக கோதுமை தவிடு கொண்டு ஸ்க்ரப் செய்ய வேண்டும். பிறகு ஆலிவ் ஆயில் கொண்டு மசாஜ் செய்யவும்.
இரண்டு நாளுக்கு ஒருமுறையாவது இதை செய்து வந்தால் பத்தே நாளில் மூட்டுகளில் கருமை கா ணாமல் போகும். மூட்டுகளில் இருக்கும் சொரசொரப்பும் குறைந்துவரும். மூட்டு சரும நிறத்துக்கு மாறிவருவதையும் கண்கூடாக பார்க்கலாம்.

6)​பேக்கிங் சோடா
பேக்கிங் சோடா இன்று அழகுப்பராமரிப்பில் முக்கிய இடம் பிடித்துள்ளது. சரும பராமரிப்பில் சரும த்தில் இருக்கும் இறந்த செல்களை நீக்கவும் சருமத்துக்கு ஸ்க்ரப் செய்யவும் இவை பயன்படுத்தப்ப டுகிறது. பேக்கிங் சோடாவை சோற்றுக்கற்றாழை சாறு, எலுமிச்சை சாறு, வெள்ளரிச்சாறு என்று ஏதேனும் ஒன்றை சேர்த்து கலந்து பேஸ்ட் போல் குழைத்து பூசிவந்தால் கருமை ஓடிவிடும்.

7)​சாம்பார் வெங்காயச்சாறு
வெங்காயச்சாறு சத்துகள் மிகுந்தது. வழுக்கை தலையில் முடிவளர வைக்கும் அற்புத குணங்க ளைக் கொண்டிருக்கும் இந்த வெங்காயத்தின் சாறுடன் பூண்டு சாறு சேர்த்து முட்டிகளில் தேய்க்க லாம். இது கருமையைப் போக்குவதை விட சருமத்தில் இறந்த செல்களை நீக்குவதை துரிதப்படுத் தும்.

8)​எளிய பராமரிப்பு
மஞ்சளில் இருக்கும் குர்குமின் சருமத்தின் கருமைக்கு காரணமான மெலனின் அளவை குறைக்கி றது. மஞ்சளை மட்டும் குழைத்து பூசலாம்.வெள்ளரிக்காயையும் வட்டவடிவில் நறுக்கி மசாஜ் செய் யலாம்.

9)உருளைக்கிழங்கில் இருக்கும் கேட்கோலேஸ் என்னும் என்சைம்கள் சருமத்தின் கருமையைக் குறைக்கின்றன. உருளைக்கிழங்கை வட்டவடிவில் நறுக்கி சாறு பட மூட்டு கருமையில் தேய்க்கும் போது சருமம் மிருதுவாகி நிறமாற்றமும் அடையும்.
மூட்டுகளில் ஸ்க்ரப் செய்வதற்கு சர்க்கரை, ஓட்ஸ், கோதுமை (ஆட்டா மா ), ஒன்றிரண்டாக பொடி செய்த உப்பு போன்றவற்றைப் பயன்படுத்தலாம். ஸ்க்ரப் செய்த பிறகு மாய்ஸ்ரைஸர் பயன்படுத்துவதை மறக்கவேண்டாம்.
சரும பராமரிப்பு போல் மூட்டுப்பகுதியில் இருக்கும் கருப்பு நிறத்தை போக்கவும் தனி கவனம் செலுத்துங்கள். இது உங்களின் சரும அழகை அதிகரித்து காட்டும்.

2 comments:

கண் கருவளையம் மறைய எளிய மருத்துவ டிப்ஸ்..!

      அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்பது பழமொழி. நமது உடலில் உள்ள சத்து குறைபாடு மற்றும் நோய்கள் போன்றவற்றை நமது முகம் கண்ணாடி போல...