Friday, May 1, 2020

பெண்களின் உள்ளாடையும்.. உடல் நலமும்..

நிறைய பெண்கள் நைலான், பாலியெஸ்டர், லைக்ரா போன்ற காற்று உட்புக அனுமதிக்காத செயற்கை உள்ளாடைகளை அணிகிறார்கள். அவை ஆரோக்கியத்திற்கும், சுகாதாரத்திற்கும் நல்லதல்ல.

பெண்களின் உள்ளாடையும்.. உடல் நலமும்..

உள்ளாடைக்கும், உடல் ஆரோக்கியத்திற்கும் நெருக்கமான தொடர்பு இருக்கிறது. நிறைய பேர் உள்ளாடை விஷயத்தில் அலட்சியமாக இருந்துவிடுகிறார்கள். ஈரமான,
இறுக்கமான உள்ளாடைகளை அணிவது நல்லதல்ல. அது சருமத்தில் எரிச்சல் ஏற்படுத்துவதோடு நோய் தொற்று ஏற்படகாரணமாகிவிடும்.

துணிகளை துவைத்தபின்பு நறுமணம் வீசச்செய்யும் ‘டிடர்ஜெண்டுகளை’ நிறைய பேர் பயன்படுத்துகிறார்கள். அவை சருமத்திற்கு தீங்குவிளைவிக்காததாக இருக்க வேண்டும்.

பெண்கள் நிறைய பேர் இடுப்பு தசையை குறைக்கும் நோக்கத்துடனும், கட்டுடல் அழகை தக்கவைக்கவும் ‘ஷேப்வேர்’ எனப்படும் உள்ளாடைகளை அணிகிறார்கள். அதனை நீண்ட நேரம் அணிந்தால் ரத்த ஓட்டம் தடைப்படும். அதோடு வாயு, உடல் வீக்கம், அஜீரணம் போன்ற பாதிப்புகளையும் ஏற்படுத்தும்.

சிலருக்கு உடல் பகுதியில் தேவையற்ற முடி வளரும். முடியை சூழ்ந்து வீக்கம், தடிப்பு போன்ற பிரச்சினையும் உருவாகும். இறுக்கமான உள்ளாடை அணிபவர்களுக்கே இத்தகைய பிரச்சினைகள் ஏற்படக்கூடும். நீண்டகாலமாக இறுக்கமான உள்ளாடை அணிபவர்களுக்கு ஈஸ்ட் நோய்தொற்று பாதிப்பு அதிகரிக்கும்.

உள்ளாடைகள் வழியே சருமத்திற்கு போதுமான அளவு காற்று ஊடுருவி செல்ல வேண்டும். நிறைய பெண்கள் நைலான், பாலியெஸ்டர், லைக்ரா போன்ற காற்று உட்புக அனுமதிக்காத செயற்கை உள்ளாடைகளை அணிகிறார்கள். அவை ஆரோக்கியத்திற்கும், சுகாதாரத்திற்கும் நல்லதல்ல. பருத்தி போன்ற காற்று ஊடுருவக்கூடிய உள்ளாடைகளே சிறந்தது.

No comments:

Post a Comment

கண் கருவளையம் மறைய எளிய மருத்துவ டிப்ஸ்..!

      அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்பது பழமொழி. நமது உடலில் உள்ள சத்து குறைபாடு மற்றும் நோய்கள் போன்றவற்றை நமது முகம் கண்ணாடி போல...