Wednesday, May 27, 2020

இளமையான முகத்திற்கு காபி தூளை எப்படி பயன்படுத்த வேண்டும்..

காபி அனைவருக்கும் பிடித்த பானம். காபியை விரும்பாதவர்கள் எவரும் இருக்க முடியாது. அந்த வகையில் இந்த உலகில் காபி பிரியர்கள் அதிகம் உள்ளனர். காபி ஆரோக்கியத்திற்கு நல்லது என்றாலும் காபி தூளை வைத்து சருமத்தை ஆரோக்கியமாக பாதுகாக்க முடியும். காபியில் இருக்கும் வேதிப்பொருட்கள் சருமத்தில் உள்ள கொலோஜன் என்று கூறப்படும் சருமத்தை இருக்கி பிடிக்கும் தசையை மேன்படுத்த உதவும்.


இதனால் தளர்ந்த சருமம் இறுகி புதுத்தோற்றம் பெற காபி உதவும். மேலும் சருமத்தில் மேல் படிந்திருக்கும் இறந்த செல்களை உறித்து நீக்கும். அந்த வகையில் என்றும் இளமையுடன் இருக்க காபி தூளை (coffee powder) எப்படி பயன்படுத்தலாம் என்பதை இங்கு காணலாம்.
💎காபி தூள் ஸ்கரப்
முகத்திற்கு ஸ்கரப்பாக காபி தூளை பயன்படுத்தலாம். இது முகத்திற்கு கெமிக்கல்கள் கலந்த ஸ்கரப்பை போல கெடுதல் விளைவிக்காது. காபி பொடியில் சிறிதளவு கரும்பு சக்கரை மற்றும் ஆலிவ் ஆயில் கலந்து முகத்திற்கு வட்ட வடிவத்தில் மசாஜ் செய்வதன் மூலமாக முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க முடியும்.வாரம் ஒரு முறை செய்யலாம் 

💎காபி தூள், முல்தானி மெட்டி, கற்றாழை ஜெல் உள்ளிட்டவற்றை கலந்து கொள்ள வேண்டும்.  இதனை வாரம் இரு முறை முகத்தில் ஸ்கரப் செய்து கழுவி வர சருமத்தில் இருக்கும் அதிகப்படியான எண்ணெய் பசையை நீங்கி புத்துணர்ச்சியாக இருக்கும்.
💎அரை கப் காபி தூளை, சிறிதளவு பால் சேர்த்து கெட்டியான பசையாக்கி கொள்ள வேண்டும். இதனை முகத்தில் தடவி 10 முதல் 15 நிமிடங்கள்ஸ்கரப் செய்ய வேண்டும். இதனை தொடர்ந்து செய்து வர இறந்த செல்கள் நீங்கி பிரகாசமான முகம் பளிச்சிடும்.

💎காபி தூளில் (coffee powder) சிறிது ஆலிவ் ஆயில் மற்றும் தேன் சேர்த்து கலக்க வேண்டும். இந்த கலவையை முகத்தில் தடவி மென்மையாக 15 நிமிடம் ஸ்கரப் செய்து பின் முகத்தை கழுவ வேண்டும். இப்படி வரம் இரண்டு முறை செய்து வர முகத்தில் உள்ள அழுக்குகள் அனைத்தும் வெளியேறி சருமம் பொலிவாகும்.

💎3 டீஸ்பூன் காபி தூளுடன், 1 டீஸ்பூன் பால் மற்றும் சிறிது கசகசா சேர்த்து கலந்து அதனை முகத்தில் தடவி ஸ்கரப் செய்து, இறுதியில் ரோஸ் வாட்டரை சருமத்தில் தடவுங்கள். இதனால்  முகம் புத்துணர்ச்சியுடனும் இருக்கும்.
💎காபி பவுடர், சர்க்கரை இரண்டையும் சமமாக கலந்து சிறிது தண்ணீர் அல்லது ரோஸ் வாட்டர் சேர்த்து முகத்தில் ஸ்கிரப் போன்று பயன்படுத்தலாம். இதனால் சருமத்தின் இறந்த செல்ஸ் நீங்கி முகம் இன்ஸ்டன்ட் பொலிவு பெறும்.
💎காபி தூள் மற்றும் பட்டை பொடி இரண்டையும் கலந்து முகத்தில் ஸ்க்ரப் செய்து வந்தால் இறந்த செல்கள் அகன்று முகம் பிரகாசமாகும். பட்டை தூள் சருமத்தில் நோய் தொற்று ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும்.
💎காபி தூள் பேஸ் பேக்
கடலை மாவுடன், காபி தூள் (coffee powder) சேர்த்து தண்ணீர் ஊற்றி பேஸ்ட் ஆக்க வேண்டும். இதனை முகத்தில் தடவி காய்ந்தவுடன் கழுவினால் முகம்  பளிச்சென்று தோன்றும்.
💎இரண்டு ஸ்பூன் காபி தூள், ஒரு ஸ்பூன் தேன் கலந்து முகத்தில் அப்லை செய்து 10 நிமிடம் காயவிட்டு பின் கழுவினால் சருமமானது மென்மையாக இருக்கும்.
காபி தூளை எலுமிச்சை சாற்றோடு கலந்து முகத்தில் பேக் போன்று பயன்படுத்தினால் ஃபேசியல் செய்தது போல் முகம் மின்னும். சென்சிடிவ் ஸ்கின் இருப்பவர்கள் எலுமிச்சைக்கு பதிலாக ரோஸ் வாட்டர் பயன்படுத்தலாம்!!
💎கடல் உப்புடன் காபி தூள் சேர்த்து ஆலிவ் எண்ணெயில் கலந்து சருமத்தில் 15 நிமிடம் தேய்த்து மசாஜ் செய்து பின் கழுவவும். இதனால் சருமத்தில் இருக்கும் கருமையை நீங்கும்.
💙ஒரு பௌலில் 2 டீஸ்பூன் காபி தூள் மற்றும் 3 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அந்த கலவையை முகத்தில் தடவி காய்ந்தவுடன் வெதுவெதுப்பான நீரால்  கழுவ வேண்டும். அதன் பின் மாய்ஸ்சுரைசர் பயன்படுத்தி லேசாக மசாஜ் செய்யுங்கள். இதனால் சருமம் மென்மையாக இருக்கும்.
💎காபி பொடி உடன் ஆலிவ் ஆயில் மற்றும் சர்க்கரை சேர்த்து உடலில் மசாஜ் செய்ய வேண்டும். இதனை உங்களது சருமத்திற்கு ஏற்ற வகையில் தினமும் கூட செய்யலாம். இவ்வாறு செய்வதினால் உடல் முழுவதும் அழகு பெற முடியும்.

No comments:

Post a Comment

கண் கருவளையம் மறைய எளிய மருத்துவ டிப்ஸ்..!

      அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்பது பழமொழி. நமது உடலில் உள்ள சத்து குறைபாடு மற்றும் நோய்கள் போன்றவற்றை நமது முகம் கண்ணாடி போல...