Wednesday, April 15, 2020

வேம்பு தரும் கூந்தல் அழகு


வேப்ப மரங்கள், மருத்துவ குணங்கள் கொண்டவை.

வேப்ப எண்ணெய் பொடுகுப் பிரச்சனையை குணப்படுத்தும். அந்தக் காலத்தில், வேப்பங் குச்சிகளை பல் துலக்கப் பயன்படுத்தினர். வேப்ப மரத்தின் இலைகள், பழங்கள், ஆகியவையும் பயன்படுத்தலாம். மேலும், வலி நிவாரணியாகவும் செயல்படுகிறது.

ஆயூர்வேதத்தின்படி, வேப்பம், சீகைக்காய், நெல்லி, ஆகியவை தலைமுடி சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வு அளிக்க கூடியவை.

தலைமுடி ஆரோக்கியத்திற்கு, வேம்புவில் இருக்கும் கொழுப்பு அமிலங்கள் மிகவும் பயனுடையதாக உள்ளன. முடி கொட்டும் பிரச்சனைகளுக்கும், வழுக்கை பிரச்சனைகளுக்கும் வேம்பு சரியான சிகிச்சை அளிக்க கூடியது ஆகும்.

சரும பிரச்சனைகளால், முடி வேரிலும் பாதிப்பு அடையும். வேப்பம் இலை அவித்த நீர் உபயோகித்து தலை அலசுவதினால், சுத்தம் ஆகும். முடி வளர்ச்சிக்கும் வேம்பு பயன்படும்.
வேப்ப எண்ணெயை தலைமுடிக்குப் பயன்படுத்துவதனால், தலைப் பகுதியில் உள்ள இரத்த ஓட்டம் சீராக அமைந்து முடி வளர்ச்சிக்கும் உதவியாக அமையும். வேப்ப எண்ணெயுடன், தேங்காய் எண்ணெய் அல்லது ஆலீவ் எண்ணெய் கலந்து பயன்படுத்தினால், இன்னும் ஆரோக்கியமானது.

வேப்பம் விதை  பொடியுடன், நீர் சேர்த்து கலவையான பின்பு, அதனை தலையில் தேய்த்துவிட்டு, 30 நிமிடங்களுக்கு பிறகு கழுவினால், முடி வளர்ச்சி பெருகும்.

மால்ஸ்சேசியா என்ற பூஞ்சையல் ஏற்படும் பொடுகு பிரச்சனையால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். பொடுகு, தலையில் இருக்கும் பிசுப்பிசுப்பான எண்ணெய் தேகத்தில் இருக்கும். பொடுகு பிரச்சனைகளால் அரிப்பு ஏற்படும்.

வேப்ப எண்ணெய் உபயோகித்து, பொடுகுப் பிரச்சனையை போக்கலாம். தேங்காய் எண்ணெயுடன் வேப்ப இலைகள் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். அதன் பின், சில எலுமிச்சை சாறு துளிகள் சேர்க்க வேண்டும். இந்தக் கலவையை தலைமுடியில் தேய்த்து, இரவு முழுவதும் ஊறவிட்டு, காலையில் கழுவ வேண்டும். இன்னொரு முறையாக, வேப்ப பொடி மற்றும் இலை சேர்த்த கலவையை பயன்படுத்தி வந்தால், பொடுகு நீங்கும். 

No comments:

Post a Comment

கண் கருவளையம் மறைய எளிய மருத்துவ டிப்ஸ்..!

      அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்பது பழமொழி. நமது உடலில் உள்ள சத்து குறைபாடு மற்றும் நோய்கள் போன்றவற்றை நமது முகம் கண்ணாடி போல...