Thursday, April 30, 2020

முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை இயற்கையாக நீக்க



முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை போக்க சிறந்த டிப்ஸ்.


எல்லா பெண்களுக்கும் அழகான பொலிவான முகம் வேண்டும் என்ற ஆசை இருக்கும். முகத்தில் உள்ள முடியால் முகத்தின் பிரகாசம் சிறிது குறையும். அந்த முடிகளை நீக்க வாக்ஸிங், த்ரெட்டிங் எல்லாம் தற்காலிக தீர்வு அதனால் முடி இன்னும் திடமாக வளர கூடும்.


வீட்டிலே எளிமையாக சமையல் பொருள்களை வைத்து எப்படி முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்கலாம் என்று பார்க்கலாம்.

💟எலுமிச்சை மற்றும் தேன்
2 தேக்கரண்டி எலுமிச்சைசாறு, 2 தேக்கரண்டி சர்க்கரை மற்றும் 1 தேக்கரண்டி தேன் சேர்த்து கலக்கவும்.
இந்த கலவையை சூடுபடுத்தவும்.
பின்னர் ஆறவைத்து, கலவையை மிதமான சூட்டில் முடி அகற்ற வேண்டிய பகுதியில் தடவவும்.
வாக்ஸிங் ஸ்ட்ரிப் அல்லது ஓர் காட்டன் துணியால் ஒட்டி முடி வளரும் திசைக்கு எதிர்திசையில் இழுக்கவும்.
இதை வாரத்தில் இருமுறை செய்யலாம்.

💟மஞ்சள் மற்றும் ரோஸ் வாட்டர்
மஞ்சள்பொடி மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து நன்கு கலக்கவும்.
இந்த கலவையை சூடுபடுத்தவும்.
பின்னர் கலவையை முடி அகற்ற வேண்டிய பகுதியில் தடவவும்.
15 -30 நிமிடம் அப்படியே உலரவிடவும்.
பின்னர் மிதமான சூடான நீரில் முகத்தை கழுவ வேண்டும்.
இதை வாரத்தில் 3 முறை செய்யலாம்

💟முட்டை வெள்ளைகரு மற்றும் சோளமாவு (Corn Starch)
முட்டையில் இருந்து வெள்ளை கருவை பிரித்து எடுக்க வேண்டும்.
பின்னர் சோளமாவு (Corn Starch) மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும்.
பின்னர் கலவையை முடி அகற்ற வேண்டிய பகுதியில் தடவவும்.
20 -25 நிமிடம் அப்படியே உலரவிட உரித்து எடுக்க வேண்டும்.
உரித்து எடுக்கும் பொது தேவையற்ற முடிகள் அதோடு வந்து விடும்.
வாரத்தில் 2-3 முறை செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

💟பப்பாளி மற்றும்  மஞ்சள்
சிறிது பப்பாளிதுண்டை எடுத்து அரைத்து கூழாக்கி கொள்ளவும்.
பின்னர் அதில் சிறிது மஞ்சள்பொடி சேர்த்து கலக்கவும்.
இந்த கலவையை முகத்தில் தடவி நன்கு மசாஜ் செய்யவும்.
15 – 20 நிமிடம் நன்கு மசாஜ் செய்யவும்.
பின்னர் குளிர்ந்த நீரால் கழுவவும்.
வாரத்தில் 2-3 முறை செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

💟சர்க்கரை மற்றும் எலுமிச்சைசாறு
எலுமிச்சைசாறு, சர்க்கரை மற்றும் சிறுது நீர் சேர்த்து சூடாக்கவும்.
பின்னர் ஆற வைத்து மிதமான சூட்டில் முகத்தில் தடவவும்.
20 நிமிடம் அப்படியே உலர விட வேண்டும்.
பின்னர் குளிர்ந்த நீரால் கழுவவும்.
கழுவிய பின்னர் கைவிரல்களால் வட்ட வடிவில் முகத்தில் மசாஜ் செய்யவும்.
வாரத்தில் 2 முறை செய்தால் 3 வாரங்களில் நல்ல பலன் கிடைக்கும்.

No comments:

Post a Comment

கண் கருவளையம் மறைய எளிய மருத்துவ டிப்ஸ்..!

      அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்பது பழமொழி. நமது உடலில் உள்ள சத்து குறைபாடு மற்றும் நோய்கள் போன்றவற்றை நமது முகம் கண்ணாடி போல...